சொத்துக்காக ஜோதிடரை வைத்து அர்ஜுன் போட்ட பிளான்.. அதிர்ச்சியில் கடும் கோபத்தில் ராகினி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நவம்பர் 8-ம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

இதில் அர்ஜுனுக்கு சொத்தை ராகினி எழுதி வைத்து விடக்கூடாது என்பதற்காக தமிழ் போட்ட பிளான் ராகினிக்கு தெரிய வந்திருக்கிறது.

 tamilum saraswathiyum serial November 8th promo and episode full update

அதே நேரத்தில் தமிழின் பிளான் முறியடிப்பதற்காக புதியதாக அர்ஜுன் பிளானை போடுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோதை சொன்னது போலவே அர்ஜுனுக்கு அடிபட்டது குறித்து ராகினி குழப்பத்தில் இருக்கிறார். அர்ஜுனுக்கு சொத்தை எழுதி வைத்ததால் அர்ஜுனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று குழப்பத்தில் யோசித்துக் கொண்டே இருக்க, அந்த நேரத்தில் அர்ஜுன் பாப்பா கத்துகிறது அது கூட தெரியாமல் என்ன யோசித்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்க, அதற்கு கோவிலில் இன்னைக்கு நடந்த சம்பவம் எனக்கு பயமாயிருக்கிறது என்று ராகினி சொல்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அம்மா ஜோசியக்காரரை போய் பார்த்தார்களாம். சொத்தை உங்கள் பெயரை எழுதி வைத்தால் உங்களுக்கு பெரிய கண்டம் இருப்பதாக கூறி விட்டார்களாம். அதனால் தான் எனக்கு பயமாய் இருக்கிறது என்று கூறுகிறார். இதை கேட்டு அதிர்ச்சியான அர்ஜுன் ராகினியிடம் இதெல்லாம் நம்பி கொண்டு இருக்கியா? என்று கேட்கிறார். அதோடு இது எல்லாமே உங்க குடும்பத்தோட வேலையா தான் இருக்கும். அவங்கதான் சொத்தை எழுதி தரக் கூடாதுன்னு இப்படி பொய் சொல்லி இருப்பாங்க என்று பேசுகிறார்.

அதோடு நாமும் ஒரு ஜோதிடரை போய் பார்த்து விடலாம் என்று தனக்கு தெரிந்த ஜோசியக்காரரை வைத்து காரியத்தை முடித்து விடலாம் என்று அர்ஜுன் பிளான் செய்து ராகினியை அழைத்துக்கொண்டு போகிறார். அங்கு ஜோசியக்காரருக்கு பணத்தை கொடுத்து உங்கள் பெயரில் சொத்து எழுதி வைத்தால் அது பல மடங்கு அதிகரிக்கும் என்று அவர் அர்ஜுன் சொன்ன மாதிரியே அந்த ஜோசியக்காரர் சொல்ல இதை கேட்ட ராகினி சந்தோஷப்படுகிறார்.

அடுத்த காட்சியில் அர்ஜுன் நமச்சியை வழிமறித்து நீங்க என்ன பிளான் போட்டாலும் அது நடக்காது. உங்க பிளானை வச்சு என் பெயருக்கு சொத்தை மாத்துவேன் என்று கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் கோவிலில் நடந்த அனைத்திற்கும் காரணம் நீங்க தான் என்று எனக்கு நல்லாவே தெரியும் என்று பேசிவிட்டு போகிறார். இதை நமச்சி தமிழிடம் போய் சொல்கிறார். உடனே இருவரும் சேர்ந்து ப்ளான் போடுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் மற்றொரு பக்கத்தில் தமிழ் எப்படி இருந்தாலும் விடமாட்டான் எதாவது பிளான் பண்ணுவான். அதுக்கு முன்னாடியே நம்ம பிளான் பண்ணனும் என்று என்று தனக்கு தெரிந்த ஒரு நபரை கூப்பிட்டு அவரை தன் மீது ஸ்பேனரை எடுத்து போடுமாறு கூறி விடுகிறார். அவரும் அதுபோல ஸ்பேனரை தூக்கி போட்டதும் இப்படி செய்ய சொன்னது தமிழ் தான் என்று அவர் தமிழ் மீது பழியை போடுகிறார்.

இதனை அர்ஜுன் ராகினியிடம் சொல்ல ராகினி அர்ஜுனனை அழைத்துக்கொண்டு தமிழ் வீட்டிற்கு வந்து சொத்துக்காக என் புருஷனையே கொல்ல பாக்குறீங்களா என்று கேட்கிறார். அதோடு மேலிருந்து ஸ்பேனரை போட்ட நபரையும் கூட்டிக்கொண்டு இவர் தான் போட சொன்னார் என்று அந்த நபர் சொல்ல அனைவரும் முழிக்கின்றனர்.

அதோடு அந்த நபர் நமச்சிதான் பணம் கொடுத்து அர்ஜுன் மேல போட சொன்னார். ஆனால் தமிழ்தான் இது மாதிரி செய்ய சொன்னார் என்று அந்த நபர் சொல்லி விடுகிறார். இதனால் ராகினி தமிழை திட்டிக் கொண்டிருக்கிறார். அர்ஜுன் சந்தோஷத்தில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+