தமிழும் சரஸ்வதியும்: தமிழ் வீட்டுக்கே வந்த ராகினி.. பதறி போய் அர்ஜுன் செய்த செயல்.. கடுப்பான நடேசன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அக்டோபர் 16ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் தமிழுக்கு உதவி செய்வதற்காக ராகினி வீட்டிற்கு வந்திருக்கும் நிலையில் அதை சொல்லியே அர்ஜுன் தமிழை அவமானப்படுத்துகிறார்.

அதே நேரத்தில் கம்பெனியிலும் தமிழுக்கு புது பிரச்சனை வருகிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ராகினி தன்னுடைய வீட்டிற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று 40 லட்சம் செக் குடுக்க போகிறேன் என்று சொல்ல, அதற்கு அர்ஜுன் முதலில் அதிர்ச்சி அடைகிறார். பிறகு வேறு வழி இல்லாமல் ஓகே நீயே பணத்தை கொண்டு போய் கொடு என்று சொல்கிறார். ஆனால் குடும்பத்தினர் அனைவரும் ராகினியின் நடவடிக்கையில் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
ஆனாலும் ராகினி 40 லட்சம் பணம் கொடுப்பதற்காக செக்கோடு அபி உடன் தமிழ் வீட்டிற்கு போகிறார். அங்கே ராகினியை கண்டதும் கோதையும் சரஸ்வதியும் உள்ளே கூப்பிட நடேசன் இவ எதுக்கு இங்க வந்தா என்று திட்டுகிறார். ஆனாலும் சரஸ்வதி ராகினியை உள்ளே கூட்டிட்டு போய் உட்கார வைக்கிறார். அதை பார்த்த கார்த்திக்கும் ராகினி எதுக்காக இங்கே வந்து இருக்கா என்று சண்டை போடுகிறார்.

அதே நேரத்தில் ராகினி கொடுக்கிற செக்கை தமிழ் குடும்பத்தினர் வாங்கி விடக்கூடாது என்பதற்காக அர்ஜுன் தமிழுக்கு போன் போட்டு வெறுப்பேற்றுகிறார். நாங்கள் தருகிற காசுல தான் உங்க கம்பெனி ஆரம்பிக்க போறீங்களா? நான் வந்து தான் உங்களுக்கு உதவனும் போல இருக்கு, என் பொண்டாட்டி கிட்ட பணம் கொடுத்து இருக்கிறேன் வாங்கிக்கோங்க. கடைசில நாங்க பிச்சை போட்டு தான் நீங்க வாழ வேண்டியது இருக்கு என்று அவமானப்படுத்துகிறார்.
அதே நேரத்தில் ராகினி தன்னுடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே 40 லட்சத்திற்கான செக்கை எடுத்துக் கொடுக்க அப்போது தமிழ் யாருக்கு பிச்சை போடுறீங்க, எடுத்துட்டு போ என்று திட்டுகிறார். இதனால் கோபம் ஆன ராகினி அப்போ என்னை ஒதுக்கி வசசிட்டீங்க அப்படித்தானே? என்று கேட்க, அதற்கு உன் புருஷனால தான் நாங்க இந்த நிலைமைக்கு வந்தோம். அவன்கிட்ட சபதம் போட்டிருக்கோம் எப்படியாவது இதிலிருந்து மீண்டு வருவோம் என்று தமிழ் கோபமாக சொல்கிறார்.
இதனால் ராகினி கோபித்து கொண்டு அங்கிருந்து கிளம்பி போகிறார். அதைத் தொடர்ந்து அசோசியேஷனால் ஹார்ட் ஆபரேஷன் செய்யும் ஒருவருக்கு எப்படி பணம் கொடுக்கலாம் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தமிழ் ஆளுக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஆபரேஷன் செய்து விடலாம் என்று பேசிக் கொண்டிருக்க, அதற்கு எல்லோரும் சம்மதிக்கின்றனர்.
இதற்கு பணம் கொடுப்பதற்காக தமிழ் சரஸ்வதியின் கம்மலை கொண்டு போய் அடகு வைக்கப் போகிறார். ஆனால் அந்த கம்மலுக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியாது என்று சொல்ல, அதைக் கேட்டு தமிழ் அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications