காதலுக்கு மொழி எதற்கு? இதயம் தொட்ட காதல்.. தமிழா தமிழாவில் நெகிழ்ச்சி.. இப்படியுமா காதலிப்பாங்க!
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் வரும் ஜூன் 23ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் இந்த வாரம் மனங்கள் பேச மொழிகள் எதற்கு இதயம் தொட்ட காதல் கதைகள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. அதில் மொழித்தாண்டி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மதியம் 12.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி தமிழா தமிழா. ஆவுடையப்பன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து மாறுபட்ட தலைப்புகளை கையில் எடுத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த வாரம் ரியல் காதல் காவியங்களை கொண்டாடும் அரங்கமாக தமிழா தமிழா மேடை மாற உள்ளது.
இது குறித்து வெளியான ப்ரோமோ வீடியோவில் மதம், இனம், நாடு, மொழி இவற்றையெல்லாம் கடந்து திருமணம் செய்து கொண்ட காதலிக்க ஜோடிகளின் காவியமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
வெளிநாட்டை சேர்ந்த நபரும் தமிழகத்தை சேர்ந்த பெண்ணும் சமூக வளையதளத்தின் மூலம் அறிமுகமாகி முதல் முறை நேரில் சந்தித்து காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்ட கதையை தெரிவித்துள்ளனர்.
அதே போல் கேரளாவை சேர்ந்த பெண்ணும் தமிழகத்தை சேர்ந்த ஆணும் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் தங்களுக்குள் பாஷை ஒரு பிரச்சனையாக இல்லை, காதலுக்கு பாஷை எல்லாம் கிடையாது எனவும் பேசியுள்ளனர்.
இது குறித்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.இந்த நிலையில் இந்த எபிசோடு அதிகமாக இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதுபோல மொழி கடந்து காதலித்தவர்கள் பலர் காதல் வாழ்க்கையில் பயணித்து கொண்டிருக்கிறீர்களா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
ஆரம்பத்தில் ஏதோ ஒரு உந்துதலில் காதலில் சிக்கி திருமணமும் செய்து விடுகிறார்கள். ஆனால் சில வருடங்களில் இந்த காதல் வாழ்க்கையில் இருந்து சிலர் பிரிந்து விடுகிறார்கள் என்று சில தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் காதல் என்றாலே அழகுதான். அது ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குள், மொழிக்குள் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.
நமக்கு பிடித்து, நம்மை ஒருவர் நன்றாக பார்த்துக் கொள்வார் நம்முடைய வாழ்க்கைக்கு துணையாக இருப்பார் என்று தெரிந்தாலே அவர் மீது தானாக காதல் வந்துவிடுகிறது. அந்த காதல் மட்டும் கடைசி வரைக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதும் பலருடைய கருத்தாக இருக்கிறது. ஆனாலும் இந்த வார நிகழ்ச்சியில் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications