2026 ஆண்டிலும் நடக்கும் ஜாதி பிரச்சனை.. தமிழா தமிழாவில் வெடித்த பஞ்சாயத்து! கடுப்பான தொகுப்பாளர்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா (Tamizha Tamizha) நிகழ்ச்சி மில் ஒவ்வொரு வாரமும் சமுதாயத்தில் பேசப்படும் பல முக்கியமான விஷயங்களை மையமாக வைத்து நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஒளிபரப்பான ஒரு பகுதி பார்வையாளர்களை மிகவும் உருக்கமாக்கியுள்ளது. அந்த வாரம் "விவாகரத்து வரை சென்று கடைசி நொடியில் மனம் திறந்து மீண்டும் வாழ்க்கையை தொடங்கியவர்கள்" என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பல தம்பதிகள் தங்களது வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள், மனவேதனைகள், புரிதல் குறைபாடுகள் போன்றவற்றை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டனர். அதில் குறிப்பாக ஒரு பெண் பகிர்ந்த அனுபவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் கூறிய சம்பவத்தை கேட்ட போது நிகழ்ச்சி மேடையே ஒரு கணம் அமைதியாகி போனது. காதலித்து திருமணம் செய்த தம்பதி அந்த பெண்ணும் அவரது கணவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

தமிழா தமிழா நிகழ்ச்சி
குடும்பத்தின் எதிர்ப்புகள் இருந்தாலும் இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். ஆனால் திருமணத்திற்கு பிறகு அந்த பெண் தனது கணவரின் வீட்டில் பல சிரமங்களை சந்தித்ததாக நிகழ்ச்சியில் கூறினார். குறிப்பாக ஜாதி வேறுபாடு காரணமாக சில உறவினர்கள் தன்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்ததற்காக நடந்த அவமானம் அந்த பெண் கூறிய ஒரு சம்பவம் அனைவரையும் மிகவும் கலங்க வைத்தது.
ஒரு நாள் வீட்டில் இருந்த குடத்தில் இருந்து தண்ணீர் எடுத்ததாக கூறினார். ஆனால் அந்த வீட்டில் இருந்த சில உறவினர்கள் அதை பார்த்ததும் மிகவும் கோபமாகி, "நீ அந்த குடத்தை தொடக்கூடாது" என்று கூறி அந்த குடத்தையே தூக்கி எறிந்து விட்டதாக அவர் சொன்னார். இந்த சம்பவம் அவருக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியதாகவும், அந்த நேரத்தில் மிகவும் உடைந்து போயிருந்ததாகவும் அவர் கூறினார்.
அந்த சம்பவம் நடந்த பிறகு அவர் தனது கணவரிடம் அழுதபடி கூறியதாகவும், ஆனால் அந்த நேரத்தில் கணவர் அவர்களிடம் கேள்வி கேட்கவில்லை என்று கூறினார். இதனால் தான் மனதில் மிகவும் காயம் ஏற்பட்டதாகவும் அவர் பகிர்ந்துகொண்டார். கணவர் அளித்த விளக்கம் இந்த சம்பவம் குறித்து நிகழ்ச்சியில் அந்த பெண்ணின் கணவரிடமும் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
"உங்கள் மனைவிக்கு இப்படி அவமானம் நடந்தபோது நீங்கள் ஏன் அவர்களிடம் கேள்வி கேட்கவில்லை?" என்று ஆவுடையப்பன் கேட்டார். அதற்கு அந்த நபர் பதிலளிக்கும்போது, "நான் என் உறவினர்களிடம் சண்டை போட்டேன். ஆனால் அது என் மனைவிக்கு தெரியாது. அவள் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தான் நான் அவர்களிடம் இனிமேல் இப்படிச் செய்யக் கூடாது என்று திட்டினேன்" என்று கூறினார்.
கோயிலுக்கு கூட அழைத்துச் செல்ல முடியவில்லை
இதற்குப் பிறகு அந்த பெண் இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்தார். அவர் கூறியதாவது, தனது கணவரின் குடும்ப தெய்வ கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை தன்னிடம் மிகவும் இருந்ததாக கூறினார். ஆனால் தன்னுடைய ஜாதி வேறு என்பதால் அந்த கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என்றும் தெரிவித்தார். "என்னை அந்த கோயிலுக்கு ஒருபோதும் கூட்டி போகவில்லை. நான் போக விரும்பினாலும் அனுமதிக்கவில்லை" என்று அவர் வருத்தத்துடன் கூறினார்.
இதை கேட்டு ஆவுடையப்பன் கடும் அதிருப்தி தெரிவித்தார். "இன்றும் இப்படிப் பட்ட விஷயங்கள் நடக்கிறதா? நீங்கள் உங்கள் மனைவிக்காக அங்கிருந்தவர்களிடம் கேள்வி கேட்க வேண்டாமா?" என்று நேரடியாக அந்த நபரிடம் கேட்டார். அதற்கு அந்த நபர், "எங்கள் ஊரில் பழக்கப்படி வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் அந்த கோயிலுக்குள் செல்லக்கூடாது. அது பல வருடங்களாக நடந்து வரும் பாரம்பரியம்.
அதனால்தான் நான் இப்போது என் மனைவிக்காக அந்த கோயிலுக்கே போகாமல் இருக்கிறேன். அங்கு சென்றால் என்ன நடக்கும் என எனக்குத் தெரியும்" என்று கூறினார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் இதைக் கேட்டதும் தொகுப்பாளர் மீண்டும் கேள்வி எழுப்பினார்.
"நீங்கள் உங்கள் மனைவிக்காக அங்கிருந்தவர்களிடம் சண்டை போட வேண்டாமா? அவளையும் கூட்டிக்கொண்டு போய் அங்குள்ளவர்களிடம் பேச வேண்டாமா?" என்று கேட்டார். அதற்கு அந்த நபர் பதிலளிக்கும்போது, "என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும். அதை தெரிந்தே அங்கு சென்று என் மனைவி முன்னிலையில் சண்டை போட்டு அவளை அவமானப்படுத்த வேண்டுமா? அதனால் தான் நான் அங்கு போகவே வேண்டாம் என்று முடிவு செய்தேன்" என்றார்.
தொகுப்பாளர் கூறிய கருத்து
இந்த பதிலை கேட்ட பிறகு தொகுப்பாளர் தனது கருத்தையும் வெளிப்படையாக தெரிவித்தார். "உங்கள் மனதில் இன்னும் உங்கள் ஜாதி பற்று கொஞ்சம் இருக்கிறது. நீங்கள் வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்திருந்தாலும், உங்கள் உறவினர்கள் எதுவும் சொல்லக் கூடாது என்ற மனநிலை உங்களுக்குள் இருக்கிறது. அதனால்தான் நீங்கள் அப்போது பேசவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது" என்று கூறினார்.
கணவர் கொடுத்த பதிலடி
இந்த கருத்தை கேட்ட அந்த நபர் உடனே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். "இதை மட்டும் சொல்லாதீர்கள். அதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. என் மனதில் ஒருபோதும் அப்படி நினைத்தது இல்லை" என்று அவர் கடுப்புடன் பதிலளித்தார். இவ்வாறு நடந்த இந்த வாக்குவாதம் நிகழ்ச்சியை பார்த்த பார்வையாளர்களிடையே பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் இன்னும் சில இடங்களில் ஜாதி வேறுபாடு காரணமாக இத்தகைய சம்பவங்கள் நடப்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
குடும்பத்தின் முன்பு புடவையை உருவிய அண்ணி! வேடிக்கை பார்த்த கணவன்.. உடைந்த பெண்! தொகுப்பாளர் கொடுத்த அதிர்ச்சி -
நடிப்புக்கு டாட்டா.. நிஜ டாக்டராக மாறிய ஜீ தமிழ் சீரியல் நடிகை! ஆளே மாறிட்டாங்களே.. குவியும் வாழ்த்து -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்!














Click it and Unblock the Notifications