டிடிஎஃப் வாசனுக்கு கல்யாணம்! பொண்ணு இவங்க தான்! அந்த நடிகை இல்லை.. கண்ணீருடன் அவரே வெளியிட்ட வீடியோ
சென்னை: சமூக வலைத்தளங்களில், தனது அதிவேக பைக் சாகசங்கள் மற்றும் சர்ச்சையான பேட்டிகள் மூலம் பிரபலமான யூடியூபர் டிடிஎஃப் வாசன், தனது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஒரு வீடியோவை வெளியிட்டு, தனது மாமன் மகளை ஐந்து வருடங்களாகக் காதலித்து வருவதாகவும், நாளைக்கே அவருக்குத் திருமணம் நடக்கலாம் என்றும் உருக்கமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

யார் இந்த டிடிஎஃப் வாசன்
ட்வின் த்ரோட்டலர்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் வாசன், பைக் ரைடிங் வீடியோக்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். பைக் சாகசங்கள், போக்குவரத்து விதிகளை மீறியது போன்ற சர்ச்சைகளில் இவர் சிக்கியதால், காவல்துறை இவருக்கு எதிராக வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. பலமுறை இவர் பேசிய பேச்சுகள், பொதுவெளியில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. இளைஞர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் பட்டாளத்தைப் பெற்றிருக்கும் வாசன், சமீபகாலமாக, ஒரு திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
வாசனின் காதல் கதை
தனது காதல் கதை குறித்து வாசன் வெளியிட்ட வீடியோவில், "கடந்த ஐந்து வருடங்களாக நான் என்னுடைய மாமன் மகளைக் காதலித்து வருகிறேன். நேற்று திடீரென்று அவள் எனக்கு போன் செய்து, 'நம்முடைய காதல் வீட்டிற்குத் தெரிந்துவிட்டது. நான் உன் கூடவே வந்துடுறேன்' என்று சொல்லி, கிளம்பி வந்துவிட்டாள்" எனப் பேசியுள்ளார்.
மேலும், "நான் இன்னும் மூன்று மாதம் பொறுத்துக்கோ, நான் நடித்துக் கொண்டிருக்கும் படம் வெளியானதும் உங்க அப்பாவிடம் பொண்ணு கேக்குறேன்னு சொன்னேன். ஆனா இப்போ வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை வந்துடுச்சு. எங்களுடைய காதல் விஷயம் எங்க மாமாவுக்குத் தெரியுமான்னு தெரியல. என்னுடைய அப்பா நான் சின்ன வயதில் இருக்கும்போது இறந்துட்டாரு. அதற்குப் பிறகு என்னுடைய தாய் மாமன்தான் எங்க குடும்பத்திற்குத் துணையாக இருந்தாரு. ஆனால், அவர்கிட்ட சொல்லாமல் நான் இப்போ கல்யாணம் பண்ணப் போறது கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு" என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.
நாளைக்கு எனக்கு கல்யாணம்
இந்த உணர்வுபூர்வமான சூழலில், வாசன் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். "நீங்க எல்லாரும் எங்களுக்கு வாழ்த்த வேண்டும். நாளைக்கு எனக்குக் கல்யாணம் நடக்கப் போகுதுன்னு நினைக்கிறேன்" என்று சொல்லி, தன்னுடைய ரசிகர்களின் ஆதரவை நாடியுள்ளார்.
இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. டிடிஎஃப் வாசனின் ரசிகர்கள் பலரும், "உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், கவலைப்படாதீர்கள்" என்று கமெண்டுகளில் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம், அவரது வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் லைசென்ஸ் கேட்ட டிடிஎஃப் வாசன்.. மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!
டிடிஎஃப் வாசன் நடிகை ஜோயாவை காதலித்து வருவதாக சில செய்திகள் பரவி வந்தது. ஜோயா டிடிஎஃப் வாசனுடன் அதிகமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஜோயா பேசும்போது "எனக்கு காதல் செட்டாகாது. எல்லாரும் என்னை ஏமாத்திடுறாங்க என்று பேசி இருந்தார். அதனால் டிடிஎப் வாசன் இப்போது சோயாவை விட்டுவிட்டு அவருடைய மாமன் மகளை கல்யாணம் பண்ணப் போகிறாரா? என்று கேள்விகளும் வருகிறது.
டிடிஎஃப் வாசன் மீது கேஸ்..முடிஞ்சா அண்ணன் விஜே சித்துவ புடிங்க.! பறந்த மீம்ஸ்..போலீசுக்கு போன புகார்
ஆனால் தான் ஐந்து வருடங்களாக தன்னுடைய மாமன் மகளை காதலிப்பதாக டிடிஎஃப் வாசன்சன் அழுத்தி சொல்லி இருக்கிறார். அதுபோல இவர் உண்மையாக நாளைக்கு திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா? அல்லது அவர் பற்றி மக்கள் மத்தியில் பேச வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறாரா? என்ற கேள்விகளும் இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications