மீண்டும் லைசென்ஸ் கேட்ட டிடிஎஃப் வாசன்.. மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!
சென்னை: ரத்து செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் வழங்கக்கோரி டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டியதாக டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டிருந்தார்.

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அவரது பைக் பல அடி தூரத்துக்கு பறந்து போய் விழுந்தது.
இந்தச் சம்பவத்தை அடுத்து, அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இதனையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் டிடிஎஃப் வாசனின் யூடியூபை மூடிவிட்டு, அவரது விலையுயர்ந்த பைக்கை எரித்து விடலாம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். பின்னர் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது.
இதற்கிடையே அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதால் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் ஒரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார். இந்த ரத்து 06.10.2023 முதல் 05.10.2033 வரை அமலில் இருக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ரத்து செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் வழங்கக்கோரி டிடிஎஃப் வாசன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், லைசென்ஸ் கோரி நீதிமன்றத்தைதான் நாட வேண்டும் என்றில்லை, உரிய அதிகாரிகளை அணுகலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு 6 மாதங்கள் கடந்தாலே புதிய லைசென்ஸ் கோரி நீதிமன்றத்தை நாடலாம் என டிடிஎஃப் வாசன் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இதையடுத்து, டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications