"இடிக்குதுல்ல".. கங்கை அமரன் வார்த்தைய விட்டுட்டாரே.. அதுவும் ஓபனா.. டென்ஷனில் திமுக.. குஷியில் பாஜக
சென்னை: "இந்த பிறவியில் பாஜகவில்தான் கடைசி வரை இருப்பேன்" என்று மறுபடியும் ஒருமுறை உறுதியாக சொல்லி இருக்கிறார் கங்கை அமரன்.
பாஜகவில் இணைந்ததை வாழ்வின் பெரும் பாக்கியமாக கருதுவதாக கங்கை அமரன் பலமுறை பொதுவெளியில் சொல்லி இருக்கிறார்..
அன்று, ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது, பாஜக சார்பில் கங்கை அமரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.. அப்போது செய்தியாளர்களிடம் கங்கை அமரன் பேசியபோது, "பிரதமர் மோடியின் கொள்கை, திட்டங்கள்தான் என்னை ஈர்த்தது.. தமிழகத்தில் பாஜகவின் எழுச்சிக்கான ஆரம்பம் இது என்று சிலாகித்தார்.

பிரபல சேனல்: அதுமட்டுமல்ல, பாஜகவுக்கு பெரிய பிளஸ் என்னவென்றால் கடவுள் உண்டு என்பதுதான். கருப்பு சட்டை போட்டுக்கொண்டு சுற்றுகின்ற, சாமி சிலைகளை அவமதிக்கின்ற ஆட்கள் பாஜகவில் கிடையாது. தெய்வத்தை நம்பி வாழ்பவர்கள் நாம். தெய்வத்தை நம்பினோர் கைவிடப் படமாட்டார்கள் என்று கங்கை அமரன் பேசியிருந்தது பலரையும் அப்போது கவனிக்க வைத்தது.. இப்போதும், பாஜகவில் ஏன் சேர்ந்தேன் என்று கங்கை அமரன், பிரபல டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ளார்.
அப்போது, திராவிட கட்சிகளுடன், அன்று முதல் இப்போதுவரை நல்ல உறவில் இருக்கிறீர்கள்.. ஆனால், நீங்கள் தேர்ந்தெடுத்த கட்சி பாஜகவாக இருக்கிறதே? ஏன் இருக்கிற கட்சியை எல்லாம் விட்டுட்டு, பாஜகவில் இணைந்தீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதேபோல, முதல்வர் ஸ்டாலினுக்கு சாமி வழிபாடு இல்லாவிட்டாலும், அவர் மனைவி கோயிலுக்கு போவதை அனுமதிக்கிறாரா? அந்தவகையில், ஒருவரின் விருப்பத்துக்கு மதிப்பளித்து, அனுமதிப்பது நல்ல விஷயம்தானே?" என்றும் கேட்கப்பட்டது.. இதற்கு கங்கை அமரன் சொன்ன பதில்தான் இது:
பரிபூரண நம்பிக்கை: "எங்கள் குடும்பத்துக்கே நிறைய கடவுள் பக்தி அதிகம்.. "கடவுள் இல்லை, கடவுளை நம்புகிறவர்கள் முட்டாள்" இந்த பேச்செல்லாம் பிடிக்காது.. கடவுளை நம்புகிறவர்கள்.. இந்த வாழ்க்கையை தந்ததே கடவுள்தான் என்ற பரிபூரணை நம்பிக்கையில் இருப்பவர்கள்.. இதுக்கு வேற கட்சிகள் கிடையாது.. கடவுள் இல்லை என்று சொல்பவர்களை எனக்கு பிடிக்காது.. அதுக்காக அவர்களுடன் சண்டையும் போட மாட்டேன்.,.
ரகசிய தரிசனம்: கடவுள் இருக்கு என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.. கடவுள் இல்லை என்று சொல்பவரின் சிலைகளுக்கு மாலை போட்டு ஆதரித்தால், அவர் சொன்ன கருத்தையெல்லாம், திமுக, அதிமுக ஆதரிப்பதாகத்தானே அர்த்தம்? அதனால், அந்த கொள்கை எனக்கு பிடிக்காது.. ஆனாலும், அவர்களில் சிலர் தெரியாமல் தெரியாமல் கோயிலுக்கு போகிறார்கள்.. ரகசியமாக அவர்கள் கோயிலுக்கு போகலையா என்ன? அதை இல்லேன்னு சொல்ல சொல்லுங்க..
இவர்கள் கோயிலுக்கு போவதைபோலவே, மத்தவங்களையும் கோயிலுக்கு போக சொல்ல வேண்டியதுதானே?
அன்னைக்குகூட, கவர்னர் வீட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தேன்.. என்னை பாரத்ததுமே, அண்ணே எப்படிண்ணே இருக்கீங்க" என்று பாசமாய் கேட்டார்.. உதயநிதி ஸ்டாலின் வழக்கம்போல் என்னிடம் நல்லாதான் பேசினார்கள்.. செல்விகிட்ட நல்லா பேசுவோம்.. அம்மா கிட்ட நல்ல பழகிட்டு வர்றோம்..
வார வாரம் அனைவருமே சந்தித்து பேசுவது வழக்கம்.. இந்த குடும்ப உறவு எங்களுக்குள் இன்றுவரை இருக்கிறது.. ஆனால், கொள்கை வேறு.

துணிச்சல்: அண்ணன்கூட, கச்சேரிக்கு போனாலும், அந்த ஊரில் இருக்கும் கோயில்களுக்கெல்லாம் சுற்றிவிட்டுதான் கச்சேரிக்கே வருவோம்.. அதனால் நாங்க எப்பவுமே மாறவில்லை.. ஒரே மாதிரிதான் இப்போது வரை இருக்கோம்.. சாமி கும்பிடுவது அவரவரது தனிப்பட்ட விஷயம்ன்னு எப்படி சொல்றீங்க? புருஷனுக்கு பிடிக்காததை மனைவி செய்யலாமா? பிடிக்காத விஷயத்தை ஒருவர் செய்யும்போது, ஆதரிக்காமலும், எதிர்க்காமலும் மவுனமாக இருந்தால் அதற்கு என்ன அர்த்தம்? சரியில்லையே.
இந்த விஷயத்தில், பாஜகவின் கொள்கை, நேர்மை, நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. மற்றவர்கள் என்ன வேணும்னாலும் சொல்லிக் கொள்ளட்டும்.. அதை பற்றி எனக்கு கவலையில்லை.. நான் பாஜகவில் சேர காரணமே இதுதான்.. பிறந்ததில் இருந்து நாங்கள் எந்த கட்சியிலும் இருந்தது இல்லை. பாஜகவில் இணைந்த பிறகு உரிய மரியாதை கிடைக்கிறது. பிரதமர் மோடி அன்புடன் பேசுவது பற்றி, இளையராஜா அண்ணன் அடிக்கடி என்னிடம் சொல்வார்..
நெகிழ்ச்சி: பாஜக மட்டுமே இந்து மத நம்பிக்கைகளை மதிக்கும் கட்சியாக இருக்கிறது.. அதனால், இந்த பிறவியில் பாஜகவில்தான் கடைசி வரை இருப்பேன்" என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் கங்கை அமரன்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications