செய்தி ஒளிப்பதிவாளரை தாக்கிய விஜய் பவுன்ஸ்சர்கள்.. மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை: திண்டுக்கல் மாவட்டம் தாண்டிகுடியில் ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் விஜய் மதுரை விமான நிலையத்திற்கு சென்றிருந்தபோது அங்கு செய்தி சேகரிக்க சென்று இருந்த டிவி சேனலின் ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அவருடைய செயல்பாடுகள் அதிகமாக இணையத்தில் பேசப்படுகிறது. விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்திற்கான படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வந்தது. இந்த படத்தில் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் மதுரைக்கு வந்திருந்தார்.

விஜய் ஆர்டர்
அப்போது பெரிய அளவில் கூட்டம் கூடிவிட்டது. விஜய் மாலையில் வருகிறார் என்று தகவல் தெரிந்ததும் ரசிகர்களும் தொண்டர்களும் காலையிலேயே கூடி விட்டார்கள். அப்போது செய்தியாளர்களை சந்தித்து தான் ஜனநாயகம் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக போகிறேன், அதனால் ரசிகர்கள் யாரும் என்னை பின் தொடர வேண்டாம் என்று பேசி இருந்தார்.
கூட்டத்தில் தள்ளுமுள்ளு
இந்த நிலையில் ஷட்டிங் முடிந்து விட்டு நேற்று மாலை மே நான்காம் தேதி கொடைக்கானல்- தாண்டிக்குடி ஷெட்யூல் முடிந்துள்ளது. அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் மதுரை விமான நிலையம் வந்து சென்னை விமான நிலையம் செல்ல புறப்பட்டு இருக்கிறார். அப்போது விஜயிடம் பேசி செய்தி சேகரிப்பதற்காக மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தி ஒளிப்பதிவாளர்களும் நின்று கொண்டிருந்தனர்.
பவுன்சர்கள் தொல்லை
அதேபோல ரசிகர்களும் அங்கு இருந்திருக்கின்றனர். அப்போது மதுரை விமான நிலையத்தில் விஐபி கேட் முன்பு விஜய்யை பார்க்க முடியாதவாறும், செய்தி சேகரிக்க விடாமலும் பவுன்சர்கள் தடுத்திருக்கிறார்கள். அப்போது செய்தி ஒளிப்பதிவாளர்களுக்கும் விஜயின் பவுன்ஸர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது திடீரென்று விஜயின் பவுன்சர்கள் செய்தி ஒளிப்பதிவாளர்களை கீழே தள்ளி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
விஜயின் வேண்டுகோள்
அதுபோல அங்கிருந்த ரசிகர்களையும் சிலர் அடித்திருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் பவுன்சர்களை அடித்து அவர்களுடைய சட்டையை கிழித்து இருக்கிறார்கள். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் மதுரை வந்து இறங்கி தன்னுடைய படப்பிடிப்புக்காக கிளம்புவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது தன்னுடைய ரசிகர்களும், தொண்டர்களும் வாகனத்தை பின் தொடர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
சூட்டிங்கில் கூட்டம்
இருந்தாலும் விஜயின் ரசிகர்கள் அவர் பேச்சை கேட்காமல் விஜயின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர். அப்போது அவர்களை விஜய் எச்சரித்த வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. அதுபோல விஜய்யை காண கொடைக்கானலை சுற்றியுள்ள கிராமங்களிலும் கூட்டம் சேர்ந்து கொண்டே இருந்தது. இதனால் ஜனநாயகன் படத்தின் பட குழுவனர் சில சிரமங்களையும் சந்தித்ததாகவும் தெரிகிறது.
ரசிகர்களின் அன்பு தொல்லை
ஏற்கனவே இந்த திரைப்பட சூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது அங்கிருந்த லைட், கேமரா மேன் ஒருவருடைய தலையில் விழுந்ததால் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். தொடர்ந்து விஜய்க்கு அவருடைய ரசிகர்கள் கொடுக்கும் தொல்லையால் விஜய்க்கு தான் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே விஜய் நடத்திய ரோடு ஷோவில் ரசிகர்கள் சிலர் வாகனத்தில் ஏறி அலப்பறை செய்திருந்தபோது இனி இதுபோல யாரும் செய்யக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனாலும் இதையெல்லாம் ரசிகர்கள் கேட்பது போல தெரியவில்லை. ரசிகர்களின் அன்பு தொல்லையால் விஜய் பற்றிய செய்திகள் தான் தினமும் பரபரப்பு ஏற்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications