Test Review: விளையாட்டு வீரர் சித்தார்த்தின் விரக்தி! தாய்மைக்கு ஏங்கும் நயன்தாரா! கடனாளியான மாதவன்
டெஸ்ட் பட விமர்சனம் Rating 2.5/5 டெஸ்ட் திரைப்படம் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஒரு முக்கியமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கிரிக்கெட் வீரர் (சித்தார்த்), ஒரு விஞ்ஞானி (மாதவன்), மற்றும் ஒரு ஆசிரியையின் (நயன்தாரா) வாழ்க்கை ஒன்றுடன் ஒன்று பின்னி ஒரு திரில்லர் கதையாக விரிகின்றன. கிரிக்கெட், குடும்ப உறவுகள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் ஆகியவை கதையின் முக்கிய அம்சங்களாக உள்ளன.
படத்தின் ஆரம்ப 30 நிமிடங்கள் கதை எதை நோக்கி செல்கிறது என்பது சுவாரசியமாக எடுத்து செல்லப்படவில்லை. அதோடு, மாதவனைத் தவிர மற்றவர்களின் நடிப்பில் செயற்கை தன்மை தெரிந்தது. குறிப்பாக நயன்தாரா எப்போதும் பளிச்செனும் மேக்கப் தோற்றத்துடன் மட்டுமே வருவதால், கதையின் இயல்புடன் ஒத்துப்போகவில்லை.

மாதவனின் இயல்பான நடிப்பு இப்படத்திற்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது. ரொமான்ஸ் செய்யும் கணவனாகவும், திருப்பம் கொண்ட வில்லனாகவும் அவர் நடித்த விதம் மிகச் சிறப்பாக இருந்தது.
சித்தார்த் படம் முழுவதும் சோகமான முகத்துடன் அங்கும் இங்கும் நடந்து செல்கிறார். அவரது கதாபாத்திரத்திற்கு இன்னும் ஆழமான எழுத்து தேவைப்பட்டிருக்கலாம்.
கதை என்பது ஒரு சிறிய கருவே, அதை பெரிய திரைக்கதையாக மாற்ற முனைந்து முயற்சித்துள்ளனர். சில இடங்களில் இது கதைநடையை மெதுவாக்குகிறது.
பொறுமையாக படம் பார்த்தால், மெதுவாக படம் பிடித்து விடும். சில குறைகள் இருந்தாலும், ஒரு முறை பார்வைக்கு தகுந்த படமாகும்.
இந்த படம் நெட்பிளிக்ஸில் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு பலதரப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் பார்வையாளர்கள் அதிகரித்து சாதனை படைத்துள்ளது. இந்த படம் மொத்தமே ஒன்றே முக்கால் மணி நேரம்தான். இதில் சித்தார்த்தின் மனைவியாக மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார்.
சித்தார்த் சிறு வயது முதலே ஏழையாக வளர்ந்து இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். அவர் சரியாக செயல்படாததால் அவரை இந்திய அணியில் இருந்து நீக்க பேச்சு நடந்து வருகிறது. இதனால் அவர் அவரை நிரூபிக்க கடைசி வாய்ப்பாக ஒரு விளையாட்டு போட்டி வருகிறது.
அது போல் மாதவனின் மனைவி நயன்தாரா, இவர் பள்ளி ஆசிரியை. நீண்ட காலமாக குழந்தை இல்லாததால் ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடுகிறார். ஆனால் அதற்கு அவருடைய பொருளாதாரம் ஒத்துழைக்கவில்லை.
மாதவன் எம்ஐடி படித்த விஞ்ஞானியாக நடித்துள்ளார். அவர் கேன்டீன் நடத்தி வருகிறார். அதே வேளையில் ரகசியமாக எரிசக்தி ஆற்றலை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதற்காக நிறைய கடன் வாங்குகிறார். ஆனாலும் அவரது கண்டுபிடிப்பை வெற்றிகரமாக்க ரூ 50 லட்சம் தேவைப்படுகிறது. இப்படி வித்தியாசமான தொழிலில் உள்ள மூவரின் வாழ்க்கை போராட்டங்கள் குறித்துதான் கதை! இவர்களது லட்சியங்களில் கனவுகளில், ஆசைகளில் வென்றார்களா என்பதை ஓடிடி தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
- குரு கிருஷ்ணன்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications