திருச்செந்தூரில் நடந்த நிகழ்வு.. இனி இப்படி செய்ய மாட்டேன்... தாமரைச் செல்வியின் வருத்தம்
சென்னை: பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் வெற்றியை தொடர்ந்து தாமரைச்செல்வி திருச்செந்தூர் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போதுதான் அவர் எதிர்பாராத நிகழ்வுகள் நடந்துள்ளதாம்.
திருச்செந்தூர் கோவிலில் தனக்கு நடந்த நிகழ்வு பற்றி தாமரைச்செல்வி பிக்பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

மனம்திறந்த தாமரை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு தற்போது பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாக இருக்கும் தாமரைச்செல்வி அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் அதனால் தனக்கு ஏற்பட்ட சஞ்சலங்கள் பற்றி பிக்பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியில் மனம் திறந்து கூறியுள்ளார். இவருடைய இந்த வார்த்தையை கேட்டு ரசிகர்கள் ஃபீல் பண்ணி வருகின்றனர். இப்படி கூடவா அங்கே நடந்தது என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்
தாமரைச்செல்வி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு வரைக்கும் ஒரு நாடகக் கலைஞராக ஒரு சிலருக்கு மட்டுமே பரிச்சயமாக இருந்து வந்தார். ஆனால் இவருக்கு கிடைத்த இந்த வாய்ப்பு மூலமாக தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருடைய அன்பையும் பெற்றுள்ளார். கிராமத்திலிருந்து வந்து தற்போது இவர் தன்னுடைய திறமையால் இந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றிருப்பது இவருக்கு கிடைத்த அங்கீகாரமாக இருந்தாலும் ஆனால் தனக்கு சங்கடமாக இருப்பதாகவும் தாமரைச்செல்வி கூறியுள்ளார்.

அந்த மாதிரி இல்லை
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, தான் ஏற்கனவே பலமுறை சென்று வந்த திருச்செந்தூர் கோவில் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்காக தாமரைச்செல்வி சென்றுள்ளார். அங்கே இதற்கு முன்பு இவர் வரிசையில் நின்று சாமி கும்பிட்டு உள்ளாராம். அப்போது பொறுமையாக இவர் பல மணி நேரம் காத்திருந்தாலும் மனதிருப்தி கிடைத்துள்ளதாம். ஆனால் இந்த முறை இவரை பார்த்ததும் அங்கு உள்ளவர்கள் நேரடியாக சாமி கும்பிட கூட்டிச் சென்று விட்டார்களாம். அப்போது இவருக்கு திருப்தியாக சாமி கும்பிடுவது போல இல்லை என்று கூறியிருக்கிறார்.
Recommended Video

அதுதான் மனநிறைவு
திருச்செந்தூருக்கு தாமரைச்செல்வி வந்த செய்தியைக் கேட்டு ரசிகர்கள் பலர் அங்கே குவிந்து விட்டார்களாம். அதுமட்டுமல்லாமல் பலரும் இவரோடு சேர்ந்து செல்ஃபி எடுத்தது இவருக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், அது ஒருவிதமான நெருடலாக இருந்துள்ளதாக கூறியுள்ளார். அடுத்த முறை செல்லும்போது தான் வரிசையில் நின்று பொறுமையாகத்தான் சாமி கும்பிடப்போவதாக கூறி இருக்கிறார். அப்போதுதான் மனநிறைவு இவருக்கு கிடைக்கும் என்றும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய மனக் குமுறல்களை கொட்டி இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications