பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது ஏற்கனவே தாமரை வெளியே வந்துள்ளாராம்...காரணம் இதுதானா??

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த தாமரைச்செல்வி உள்ளே நடந்த விஷயங்களைப் பற்றி கூறியிருப்பது பலருக்கும் வியப்பை கொடுத்துள்ளது.

Recommended Video

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது ஏற்கனவே தாமரை வெளியே வந்துள்ளாராம்...காரணம் இதுதானா??

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது ஏற்கனவே அவர் வெளியே சென்றுவிட்டு மீண்டும் உள்ளே வந்துள்ளார் என்ற செய்தி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    இதை எதிர்பார்க்கலையே

    இதை எதிர்பார்க்கலையே

    பிக்பாஸ் நிகழ்ச்சி போன்ற ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்வதற்கு முன்பு அதில் கலந்து கள்ளும் போட்டியாளர்களிடம் ஒப்பந்த உடன்படிக்கைகளில் கையெழுத்து வாங்கிவிட்டு தான் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போதே அந்த இந்நிகழ்ச்சியை விட்டு தாமரைச்செல்வி ஏற்கனவே வெளியேறி உள்ளார் என்ற செய்தி தற்போது அனைவருக்கும் அதிர்ச்சியை உள்ளது.

    இது புது கதையா இருக்கு

    இது புது கதையா இருக்கு

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே சென்றுவிட்டால் 100 நாட்கள் உள்ளே தான் இருக்க வேண்டும் என்பதுதான் விதியாக இருந்து வருகிறது. அதில் ஒரு சில போட்டியாளர்களை ரசிகர்களும் பிக்பாஸ் அணியினரும் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய தாமரைச்செல்வி உள்ளே இருக்கும்போது நடந்த செயல்களை லைவ்வில் கூறியிருக்கிறார். அதில் தானும் பிரியங்கா மற்றும் பாவனி மூவரும் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு மீண்டும் உள்ளே வந்து இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

    இந்த வசதி இல்லையா?

    இந்த வசதி இல்லையா?

    பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தாமரைச்செல்விக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டதாம். அப்படி இருக்கும்போது அவரால் தொடர்ந்து விளையாட்டுகளிலும் கவனத்தை செலுத்த முடியாமல் இருந்த நிலையில் தான் அவரை மருத்துவமனைக்கு பாவனி மற்றும் பிரியங்கா இருவரும் அழைத்து சென்றுள்ளார்களாம். என்னதான் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு இருந்தாலும் இவர்கள் செய்த செயல் தற்போது பலருக்கும் வியப்பை கொடுத்துள்ளது. அதுவும் பலர் இவ்வளவு பெரிய ரியாலிட்டி ஷோ நடக்கும்போது உடல்நிலை சரியில்லாமல் ஆகியிருந்தால் டாக்டர்கள் வந்து பார்க்க மாட்டார்களா??போட்டியாளர்கள் தான் வெளியே சென்று வர வேண்டுமா?? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

    அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை

    அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை

    பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த தாமரைச்செல்வி லைவில் தன்னுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார் .அப்போது எதற்காக கடைசியாக இருக்கும் சக போட்டியாளர்கள் உங்களை ஒதுக்கி வைத்துள்ளார் என்றும் அது எதற்காக என்று தெரியுமா என கேள்விகள் கேட்டதற்கு அப்படி எல்லாம் ஒன்றும் எனக்கு பெரியதாக தெரியவில்லை. எனக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவர்கள் அனைவரும் என்னை நன்றாக பார்த்துக் கொண்டார்கள். மருத்துவமனைக்கு கூட்டி சென்று இருந்தார்கள் என்று கூறியிருக்கிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+