தாமிரபரணி பட பானுவின் மகள் இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? அதுவும் யாரோடனு பாருங்க
சென்னை: நடிகை முத்தா தமிழில் தாமிரபரணி என்ற திரைப்படத்தின் மூலமாக பானுவாக பலருக்கும் பரிச்சயமானவர்.
மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை முத்தாவை தொடர்ந்து அவருடைய மகளும் திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒரு சில நடிகர் நடிகைகளுக்கு முதல் திரைப்படம் பெரிய அளவில் ஹிட் கொடுத்து விடுகிறது. ஆனால் அதைத் தொடர்ந்து ஒரு சிலர் காணாமல் போய்விடுகிறார்கள். சிலர் தொடர்ந்து நடித்து வந்தாலும், அந்த அளவிற்கு பிறகு அவர்களுக்கு ஹிட் கிடைப்பதில்லை. அந்த வகையில் ஒருவர் தான் தாமிரபரணி திரைப்படத்தில் பானு கேரக்டரில் நடித்த நடிகை முத்தா.

இவருடைய நிஜப்பெயர் முக்தா என்பது பல ரசிகர்களுக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. இவரை இப்போதும் அதிகமான ரசிகர்கள் தாமிரபரணி பானு என்று தான் கூப்பிட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு அந்த பெயரில் பிரபலம் அடைந்த முக்கா இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரசிகர் மன்றம், அழகர் மலை, சட்டப்படி குற்றம், பொன்னர் சங்கர், புது முகங்கள் தேவை, தேசிங்கு ராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, வாய்மைந பாம்பு சட்டை என பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனாலும் இவருக்கு தமிழில் முதல் படமான தாமிரபரணி படத்திற்கு கிடைத்த பிரபலம் வேறு எந்த திரைப்படங்களுக்கும் கிடைக்கவில்லை என்பது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தமானது தான். ஆனாலும் இவர் தமிழில் மட்டுமில்லாமல் அவருடைய சொந்த மொழியான மலையாளத்திலும் அதிகமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் இவருக்கு இரண்டு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

நடிகை முத்தாவின் கணவரின் பெயர் ரிங்கு டேமி. இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். அவருடைய பெயர் கியாரா. பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு குடும்பத்தை கவனித்துக் கொள்வது போல, முக்காவும் ஒரு சில திரைப்பட வாய்ப்புகளை குறைத்து விட்டு குடும்பத்தை கவனித்து வந்தார். தற்போது மீண்டும் நடிப்பை தொடங்கி இருக்கிறார். அதிலும் சின்னத்திரையிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு வெளியான சந்திரமதி என்ற சீரியலிலும் கதாநாயகியாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து தமிழில் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை என்றாலும் மலையாளத்தில் அதிகமான சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் முக்தாவிற்கு போட்டியாக அவருடைய மகளும் சமீபத்தில் மலையாள திரைப்படங்களில் களமிறங்கி குழந்தை நட்சத்திரமாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அதிலும் பத்மகுமாரின் அடுத்த மலையாள படமான பத்த வளைவு என்ற திரைப்படத்தில் க்யாரா நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு துல்கர் சல்மானின் கிங் ஆப் கோத்தா என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். அடிக்கடி துல்க்கர் சல்மான் உடன் தான் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை முத்தாவின் மகள் பதிவேற்றி வருகிறார்.

அதுபோல முக்தாவும் அவருடைய மகளும் சேர்ந்து அதிகமான போட்டோ சூட்டுகளை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கங்களை தெறிக்க விட்டு வருகின்றனர். விளம்பர மாடலாகவும் இவர்கள் இருவரும் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் நம்ம தாமிரபரணி பானுவுக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கிறதா? என்று பலர் ஆச்சரியத்தோடு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
வேடன் விவகாரம்... அமைச்சர் சந்திப்பால் மீண்டும் வெடித்த சர்ச்சை! சின்மயி கேள்விக்கு ரசிகர்கள் சொல்வது என்ன? -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
ரகுவரனின் I Know I Know மேனரிசத்துக்கு பின்னால் உள்ள நிஜ மனிதர் யார்? வெளிவரும் அதிர்ச்சி பின்னணி -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications