ஹைதராபாத்தில் எழும் பாகுபலி அரண்மனை! ரூ.180 கோடியில் பிரபாஸின் பங்களா.. உள்ளே என்ன இருக்கு தெரியுமா
ஹைதராபாத்: பான் இந்தியா சூப்பர் ஸ்டாரான நடிகர் பிரபாஸ், ஹைதராபாத்தில் சுமார் 180 கோடி ரூபாய் மதிப்பில் அதிரடி சொகுசு வசதிகளுடன் கூடிய பிரம்மாண்ட பங்களா ஒன்றை கட்டி வருகிறார். இந்த பிரம்மாண்ட சாம்ராஜ்யம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அவருடைய பல கோடி மதிப்புள்ள ரகசிய சொத்துக்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
"பாகுபலி" மாஸ் படத்திற்கு பிறகு இந்திய திரையுலகின் அசைக்க முடியாத பான் இந்தியா சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார் நடிகர் பிரபாஸ். உலகளவில் அசாத்திய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவருடைய படங்கள் எல்லாமே நூற்றுக்கணக்கான கோடிகளில் பிரம்மாண்ட பட்ஜெட்டில்தான் தயாராகி வருகின்றன.

சமீபத்தில் வெளியான "தி ராஜா சாப்" திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், இப்போது "கல்கி 2898 ஏடி: பாகம் 2", "ஸ்பிரிட்", "ஃபாசி" உள்ளிட்ட மெகா பட்ஜெட் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்.
ஹைதராபாத்தில் ரூ.180 கோடியில் பிரம்மாண்டம்
நிஜ வாழ்க்கையிலும் பிரபாஸ் ஒரு பிரம்மாண்ட சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆம், ஹைதராபாத்தில் அவர் புதிதாக கட்டி வரும் சொகுசு பங்களா குறித்த சுவாரசியமான தகவல்கள் இணையத்தில் செம வைரலாக பரவி, ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தையும் அதிர வைத்துள்ளது.
நடிகர் பிரபாஸ் ஹைதராபாத்தில் உள்ள முக்கிய பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்ட பங்களாவை கட்டி வருகிறாராம்.. வெறும் நிலத்தின் மதிப்பை தவிர்த்து பார்த்தால், இந்த வீட்டின் கட்டுமான பணிகளுக்கு மட்டுமே சுமார் 160 கோடி முதல் 180 கோடி ரூபாய் வரை செலவிடப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு பிரம்மாண்ட அரண்மனை தோற்றத்தில் உருவாகி வரும் இந்த வீட்டின் மாதிரி போட்டோக்கள் இப்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி நெட்டிசன்களை வாய் பிளக்க வைத்துள்ளது. கண்ணை பறிக்கும் மின்விளக்குகள், பிரகாசமான வண்ண சுவர்கள் என கார்ப்பரேட் பாணியில் இந்த வீடு வடிவமைக்கப்பட்டு வருகிறது.
வீட்டிற்குள் வியப்பூட்டும் சொகுசு வசதிகள்
உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு கட்டப்பட்டு வரும் இந்த சொகுசு பங்களாவில், அசாத்தியமான பல வசதிகள் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் 20 பேர் உட்கார்ந்து படம் பார்க்கும் வகையிலான நவீன சொகுசு மினி தியேட்டர், பிரபாஸின் உடற்பயிற்சிக்காக அதிநவீன உபகரணங்கள் கொண்ட பிரத்யேக ஜிம் வசதி மற்றும் வீட்டின் அழகை கூட்டும் வகையில் பிரம்மாண்ட நீச்சல் குளம் உள்ளிட்ட சொகுசு அம்சங்கள் இந்த வீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றனவாம்.
இந்த வீடு முற்றிலும் பிரபாஸின் சொந்த பயன்பாட்டிற்காக கட்டப்படுகிறதா அல்லது ஏதேனும் வணிக நோக்கத்திற்காக வாடகைக்கு விடப்படுமா என்ற கேள்வியும் தற்போதே சினிமா வட்டாரத்தில் எழத் தொடங்கியுள்ளது.
வெளிநாடுகளிலும் சொத்து குவிக்கும் ஹீரோ
இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபாஸ் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் என்ற அதிரடி தகவல்களும் வெளியாகியுள்ளன. இத்தாலியில் உள்ள ஒரு மலை உச்சியில், இயற்கை எழில் கொஞ்சும் நீர்நிலைகளுக்கு அருகில் பிரபாஸிற்கு சொந்தமாக ஒரு பங்களா வீடு உள்ளது.
இந்த வீட்டை அவர் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும், உள்ளூர்வாசிகளுக்கும் வாடகைக்கு விட்டுள்ளாராம்.. அங்கு யாரும் வாடகைக்கு இல்லாத சமயங்களில், பிரபாஸ் அங்கு சென்று ஓய்வெடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
லண்டனிலும் சூப்பர் பங்களா
இதேபோல் லண்டனிலும் பிரபாஸிற்கு ஒரு சொகுசு வீடு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வீட்டை அவர் சினிமா ஷூட்டிங்குக்காக வாடகைக்கு விட்டு வந்துள்ளார். வெளிநாடுகளில் உள்ள இந்த இரு வீடுகளின் மதிப்பு மட்டுமே தோராயமாக 90 கோடி ரூபாய் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
"பாகுபலி" படத்திற்கு பின் சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் என சில படங்கள் சறுக்கினாலும், "கல்கி" திரைப்படம் இவருக்கு கை கொடுத்தது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கும் பிரபாஸின் இந்த 180 கோடி ரூபாய் பங்களா விவகாரம் தான் இப்போது சோசியல் மீடியாவின் ஹாட் டாபிக்!
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications