நடிகை தாரணிக்கு நடந்த கொடுமை.. அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட கேமராமேன்.. முகத்தில் சூடாக அதை திருப்பி...!
சென்னை: சின்னத்திரை, வெள்ளித்திரை என்று 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் தான் நடிகை தாரணி.
இவர் பல சீரியல்களிலும், வெள்ளி திரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
அதுவும் பட்ஜெட் பத்மநாபன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவுக்கு மனைவியாக தாரணி தான் நடித்திருப்பார். அதில் "மாலா மாலா" என்று வடிவேலு இவர் பின்னாடி சுற்றிக் கொண்டே இருப்பார்.

திரைப்படங்களில் அதிகமாக வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த தாரணியை பார்த்து அந்த நேரத்தில் பல பிரபலங்கள் கூட இவர் கோவை சரளாவுக்கு போட்டியாக வருவார் என்று கூறினார்க. ஆனால் தாரணி சில வருடங்களுக்கு பிறகு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் சின்ன திரையில் நடிக்க தொடங்கி விட்டார்.
தற்போதும் ஒரு சில திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சினிமாவில் அறிமுகமாகிய காலகட்டத்தில் தனக்கு நடைபெற்ற பல சோதனைகள் பற்றியும் தன்னுடைய கடந்த கால வாழ்க்கை பற்றியும் பேசி இருக்கிறார்.
அப்போது ஆரம்பத்தில் தான் நடித்த இரண்டு படங்களில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதற்குப் பிறகு ஒரு திரைப்படத்தில் நான் ஹீரோயினியாக நடித்த போது இயக்குனர் மற்றும் கேமராமேன் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டாங்க. ஆனால் அதிலும் கேமரா மேன் தான் அதிக முறை வெளிப்படையாகவே என்னிடம் கேட்டார்.
அப்போது தங்கச்சி நடிகையாக இருந்த உன்னை ஹீரோயினா ஆக்கி இருக்கோம் என்று சொல்லி காண்பித்தார். அதற்கு நான் அவரிடம் தயவு செய்து தப்பா எடுத்துக்காதீங்க. நான் எப்படி சினிமாவில் வந்தேன் என்று கேட்டுட்டு வாங்க, தப்பான வழியில் நான் வந்திருந்தேனா நீங்க சொல்றத நான் செய்கிறேன் என்று சொன்னேன்.
அவர் அந்த பதிலை எதிர்பார்க்காமல் பிறகு என்னை விட்டு விட்டார். ஆனால் அதிகமாக சூடு இருக்கும் லைட்டை என் மீது காட்டி என்னை நடிக்கும் போது அதிகமாக கஷ்டப்படுத்தினார் என்று தாரணி கூறியிருக்கிறார். தொடர்ச்சியாக சினிமாவிலும், சீரியலிலும் அதிகமான நடிகைகள் தாங்கள் அனுபவித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் பற்றி பேசிக் கொண்டிருக்கும் நிலையில் தாரணி கேமராமேனால் தான் பட்ட வேதனை பற்றி கூறியிருப்பதும் பலரால் பேசப்பட்டு வருகிறது.
-
வேடன் விவகாரம்... அமைச்சர் சந்திப்பால் மீண்டும் வெடித்த சர்ச்சை! சின்மயி கேள்விக்கு ரசிகர்கள் சொல்வது என்ன? -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
ரகுவரனின் I Know I Know மேனரிசத்துக்கு பின்னால் உள்ள நிஜ மனிதர் யார்? வெளிவரும் அதிர்ச்சி பின்னணி -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications