விலகிய சொந்தங்கள் மீண்டும் அமீரால் சேர்ந்துள்ளது...உருகிய அஷ்ரப்
சென்னை: அமீரை தங்கள் வீட்டில் சேர்த்ததால் விலகிப் போன சொந்தங்கள் தற்போது மீண்டும் சேர்ந்துள்ளது என்று அஷ்ரப் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் இருந்ததற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பலர் நடவடிக்கை மாறியுள்ளது என்று அஷ்ரப் கூறியுள்ளார்.

ரசிகர்களின் வாழ்த்து மழை
அமீருக்கு நாங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கவில்லை எங்களுக்கு அமீர் தான் பெயரை வாங்கி கொடுத்துள்ளார் என்று அஷ்ரப் உருக்கமாக கூறியுள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் பலர் அஷ்ரப்பை வாழ்த்தி வருகின்றனர். என்னதான் இருந்தாலும் இந்த மாதிரி ஒரு குணம் யாருக்கும் வராது என்று அஷ்ரப்க்கு தற்போது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் அதிகமாக பொழிந்து வருகிறது. இதற்கு முன்பு முகம் தெரியாமல் இருந்த அஷ்ரப் தற்போது பலருக்கும் பேவரைட் ஹீரோவாக மாறிவிட்டார்.

அந்த மனம் தான் கடவுள்
வாழ்க்கையில் நாம் எடுக்கும் சில திடீர் முடிவுகள் பின்னாளில் பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த மாதிரிதான் திடீரென்று எடுத்த ஒரு முடிவு காரணமாக இப்ப வரைக்கும் அமீர் மீது ஒரு நல்ல ஒரு மரியாதையும் பாசத்தையும் வைத்திருக்கும் அஷ்ரப், அமீரின் வாழ்க்கையில் ஒவ்வொரு வெற்றிக்கும் அடித்தளத்தை அமைத்துள்ளார். அமீர் இந்த அளவுக்கு தற்போது சமூகத்தில் உயர்ந்து இருக்கிறார் என்றால் அதற்கு அஷ்ரப் தூண்டுகோலாக இருந்துள்ளார். ஆனால் தான் என்னதான் செய்தாலும் அமீரின் தன்னம்பிக்கையும் முயற்சியும் அவருடைய வெற்றிக்கு காரணம் என்று அஷ்ரப் கூறி இருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.

பெருந்தன்மை பெருசுதான்
அமீரின் வாழ்க்கைக்கு நான் உறுதுணையாக இருப்பேன் என்று பலர் கூறினார்கள். ஆனால், என்னுடைய குழந்தை மற்றும் மனைவியின் வாழ்க்கையில் பெரிய ஒரு மாற்றத்தையும் எங்களுக்கு வாழ்க்கையில் பெரிய பேரும் புகழும் வாங்கித் தந்தது அமீர் மட்டும் தான். விஜய் டிவியில் பல டான்ஸ் நிகழ்ச்சிகளில் தன்னுடைய மகள் மற்றும் மனைவி கலந்து கொள்வதற்கு ஊக்கமும் பயிற்சியும் கொடுத்து எங்களை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது அமீர் தான் என்று அஷ்ரப் பெருந்தன்மையோடு கூறியுள்ளார்.

மனமாற்றம் ஏற்பட்டு விட்டது
தற்போது கதை சொல்லும் டாஸ்க்கில் அமீர் தன்னுடைய சோக கதையை கூறி இருந்தார். அப்போது அமீரை தத்து எடுத்துக்கொண்டு வீட்டில் சேர்த்துக் கொண்டதால் அவருடைய சொந்தங்கள் எல்லாம் அஷ்ரப் குடும்பத்தை தனிமைப்படுத்தி விட்டனர். பலர் அவரிடம் பேசுவது இல்லை. எனக்காக அனைவரும் அவரை ஒதுக்கி வைத்துவிட்டனர் என்று மனதுருகி பேசி இருந்தார். அவர் பேசி ஒரு சல நாட்களுக்கு பிறகு அஷ்ரப் உறவினர்கள் அஷ்ரப்க்கு போன் செய்து பேசி உள்ளார்களாம். அப்போது அஷ்ரப் செய்த செயல் பெரியது என்று அவருக்கு வாழ்த்துக்கள் கூறி உள்ளார்களாம். இது பலருக்கும் வியப்பை தந்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications