எதிர்நீச்சல் கதையையே மாற்றி போட்ட இயக்குனர்.. ஆனால் இதை கொஞ்சம் கவனித்திருக்கலாமே!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்த மாரி முத்துவின் இறப்பிற்கு பிறகு கதை வேறு விதமாக மாறி பயணித்துக் கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் இந்த சீரியலில் ஒரு சில திருத்தங்கள் செய்திருந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் பல பலதரப்பட்டோர் இந்த எதிர்நீச்சல் சீரியலை பார்த்து வருவதால் சில வசனங்களில் கூடுதல் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அது பற்றி பார்க்கலாம்.
சின்னத்திரையில் இப்போது அதிகமான ரசிகர்களால் பேசப்படும் சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியல் சமீபத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ஆண்களையும் சீரியல் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. பொதுவாக சீரியல் என்றால் பெண்கள் மட்டும் தான் பார்ப்பார்கள் என்ற கருத்தை உடைத்து எதிர்நீச்சல் சீரியலை அதிகமான ஆண்களும், பிரபலங்களும், அதுபோல 2கே கிட்ஸ்களும் கூட பார்த்து வருகின்றனர்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் தற்போதைய சமயத்தில் அதிகமாக டிரெண்டிங்கில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதனாலயே டிஆர்பி யிலும் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு எதிர்நீச்சல் சீரியல் பிரபலமடைவதற்கு காரணம் இந்த சீரியலின் இயக்குனர், கதை ஆசிரியர், காட்சி அமைப்புகள், தனித்துவமான கேமரா கையாளும் திறமை, நடிகர்களின் நடிப்பு மேக்கப் குறைவாக இயல்பாக இருப்பது என பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த வகையில் வில்லனையும் ஹீரோ போல ரசிப்பதற்கு மாரிமுத்து குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்துவின் நடிப்பு வசனங்கள், அவருடைய உடல் மொழி என பல விஷயங்களை சொல்லலாம். ஆனால் அவர் திடீரென்று கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய இறப்பிற்கு பிறகு சீரியலின் கதையே இயக்குனர் மாற்றி அமைத்திருக்கிறார். இதுவரைக்கும் மாரிமுத்து குடும்பத்தின் மூத்த அண்ணன் என்று கதை போய்க் கொண்டிருந்தது. இதே போல இது நிஜக் குடும்ப கதையை மையமாகக் கொண்டுதான் தொடங்கப்பட்டது.

ஆனால் நடிகர் மாரிமுத்து மரணம் அடைந்த பிறகு கதையை முழுமையாக மாற்றி வைத்திருக்கின்றனர். இதுவரைக்கும் சொல்லாத மாரிமுத்துவின் அண்ணன் ஒருவர் இருந்தார் என்பது பற்றி இப்போது கதையில் சொல்லி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீரியல் வெற்றிக்கு காரணமாக இருந்த மாரிமுத்து கத்தி கத்தி பேசியதால்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. அதேபோல இப்போதும் ஒரு சில நடிகர்கள் அதிகமாக கத்திக் கொண்டே இருக்கின்றனர்.
அதாவது கதிர், ஜான்சி ராணியை சொல்லலாம். அதுபோல சில நாட்களாக ஞானமும் இப்போது கத்திக் கொண்டிருக்கிறார். என்னதான் எதிர்நீச்சல் சீரியலில் அதிகமாக பெண்கள் முன்னேற்றம் அடைந்து, அடிமைத்தனத்திலிருந்து அவர்கள் சுய கௌரவத்தை மீட்டெடுப்பது என்பது போன்ற காட்சிகளும் அதைப் பற்றி கதை நகர்வும் இருந்தாலும், சீரியல் முக்கியத்துவத்திற்காக வழக்கத்தை விடவும் அதிகமாக கத்தி கத்தி சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இது சீரியல் பார்க்கும் ரசிகர்களையும் மனரீதியாக பாதிக்க வைக்கும் என்பது பல சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
எதிர்நீச்சல் சீரியல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை பார்ப்பதற்காகவே அதிகமானோர் காத்திருந்து பார்க்கின்றனர். அப்போது தூங்க போகும் நேரத்திற்கு இப்படி கத்தி கொண்டு பேசுபவர்களை பார்த்துக் கொண்டே இருந்து நாமும் அந்த கதைக்குள் ஒருவராக நுழைந்து விடுவோம். ஆனால் அதை தொடர்ந்து உடனே நாம் தூங்கப் போகும் போது நம்மை அறியாமலே பலருக்கும் தூக்கம் வராமல் இருக்கும்.
என்னதான் கதையாக இருந்தாலும் அதையும் நாம் உன்னிப்பாக கவனிப்பதால் தான் அது நமக்கு பிடிக்கிறது. ஆனால் அப்படி இருக்கும் போது இப்படி கத்தி சண்டை போடுவது நம்முடைய மனதிற்குள் தாக்கம் ஏற்படுத்த தானே செய்யும் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. இதற்கு அதிகமானோர் அப்படி என்றால் உங்களுக்கு சீரியல் பார்க்க பிடிக்கவில்லை என்றால் நீங்கள் டிவியை ஆப் செய்ய வந்து விட வேண்டியது தானே என்று சொல்வார்கள்.
ஆனால் ஒரு சிலருக்கு சீரியல் பார்க்க பிடிக்கவில்லை என்றாலும் வீட்டில் இருப்பவர்கள் இந்த சீரியல் பார்ப்பதை தடுக்க முடியவில்லை என்றும் அவர்கள் சீரியல் பார்ப்பதால் எங்களுக்கும் அந்த பாதிப்பு ஏற்படுகிறது என்றும் சிலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.அதுபோல இந்த சீரியலில் குணசேகரன் பேசிய "ஏய்.. இந்தம்மா" என்ற வார்த்தை பெரிய அளவில் பிரபலம் அடைந்தது. ஆனால் அது பிரச்சனை இல்லை.

கதிர் எல்லோரிடமும் "பொத்து" "மூடிகிட்டு போ" என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்துகிறார். ஒரு நாளைக்கு குறைந்தபட்சமாக அவர் 10 முறை 20 முறைக்கு மேலே அந்த வார்த்தையை சொல்லிக் கொண்டே இருக்கிறார். இதை பார்க்கும் குழந்தைகளும் இதே தானே பேச தோன்றும் என்பது பலருடைய கேள்வி. அதுபோல வயது முதிர்ந்தவர்களுக்கு இங்கு மரியாதை கிடையாது.
அது கதைப்படி அவர்களுடைய கதாபாத்திரத்தை பிரதிபலிப்பதாக இருந்தாலும் பொத்து மூடு போன்ற வார்த்தைகளை குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்பது பலருடைய கருத்து. இதையும் மாற்றிக் கொண்டால் இந்த சீரியல் இன்னும் பல பேருடைய ஆதரவை பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இனி என்ன நடக்கப் போகிறது என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications