தமிழில் பேச சொன்னது தப்பா??.. தொடங்கியது பிரியங்கா, அக்ஷராவின் புது சண்டை
சென்னை: பிரியங்கா மற்றும் அக்ஷராவின் இடையில் மீண்டும் ஏற்பட்ட வாக்குவதங்கள் முதல் ப்ரமோவில் மிரட்டி வருகிறது.
மறுபடியும் முதலில் இருந்தா என்று நெட்டிசன்கள் பிரியங்கா மற்றும் அக்ஷரா சண்டையை பார்த்து கூறிவருகின்றனர்.
தமிழில் பேச சொன்னது தப்பா என்று பிரியங்கா தொடங்கிய சண்டைக்கு நெட்டிசன்கள் பிரியங்காவை கலாய்த்து வருகின்றனர்.

சண்டைகளுக்கு பஞ்சமில்லை
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் தற்போது 70 நாட்கள் கடந்த நிலையில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் ஒவ்வொரு நாளும் நகர்ந்து வருகிறது. எப்படியாவது புதுப்புது பிரச்சனைகளை தொடங்கினால்தான் விளையாட்டில் ஜொலிக்க முடியும் என்று போட்டியாளர்கள் இப்படி நடந்து கொள்கிறார்களா??அல்லது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு தலைவிரித்து ஆட தொடங்கி விட்டதா?? என்று ரசிகர்களுக்கு குழப்பமாகத்தான் இருந்துவருகிறது.

சத்தம் அதிகமாக இருக்கிறதே
ஆரம்பத்தில் ஒன்றாக ஒற்றுமையாக இருந்த போட்டியாளர்கள் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி காரசாரமாக மோதி வருகின்றனர். அதுவும் இன்றைய எபிசோட்டில் முதல் பிரியங்கா மற்றும் அக்ஷராவின் சண்டை வேற லெவல் இருந்து வருகிறது. ஏற்கனவே கோபம் வரும்போது அக்ஷரா நடந்து கொள்வதை பார்த்து கலாய்த்து தள்ளிக் கொண்டிருக்கும் போது தற்போதைய அவருடைய காரசாரமான வாக்குவாதம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. எனக்கு கத்தி பேசினால் பிடிக்காது என்று கூறிக் கொண்டிருந்த அக்ஷரா தற்போது அனைவரின் காதுகளையும் ரணமாக்கும் வகையில் கத்தி கொண்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் தங்கள் பங்குக்கு கலாய்த்து வருகிறார்கள்.

காரசாரமான வாக்குவாதம்
வாட் இஸ் யுவர் ப்ராப்ளம் என்று கோபத்தின் உச்சத்தில் அக்ஷரா வருணிடம் கத்திக் கொண்டிருக்கிறார். வருண் எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தாலும் அக்ஷராவின் கோபம் குறைந்த பாடு இல்லை. அதே நேரத்தில் பிரியங்கா என்ன மச்சான் தமிழ்ல பேசு மா னு சொன்னேன் அதுக்கு போ...ன்னு என்று சொல்லிவிட்டு போய்விட்டா என தனக்கே உரிய கணீர் குரலோடு அக்ஷராவை குறைகூறி கொண்டிருக்கிறார். ஒரு வாட்டி ரெண்டு வாட்டி இப்படி பேசி இருந்தா நான் சும்மா இருந்து இருப்பேன் ஆனால் எல்லா வாட்டியும் இப்படி பேசிக்கொண்டு இருந்தார் நான் என்னுடைய செல்ப் ரெஸ்பான்ஸ் விட்டு விட்டு சும்மா இருக்க மாட்டேன் என்று ப்ரியங்கா தன் பங்குக்கு கெத்து காட்டிக் கொண்டிருக்கிறார்.

நெட்டிசன்கள் கலாய்ப்பு
பிரியங்காவின் பேச்சுக்கு இவங்களுக்கு மட்டும் தான் செல்ப் ரெஸ்பான்ஸ் இருக்கு...மத்தவங்க யாருக்கும் இல்லையா என்று அக்ஷரா பதில் கேள்வியை வருண் அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்ப எல்லாரும் லூசு மாதிரி ரோட்டில் சுத்திக்கிட்டு அவங்க இங்க வந்து இருக்குமா என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். இவர்களின் இருவரின் சண்டைகளை பார்க்கும் நெட்டிசன்கள் அடுத்தவர்களை குறை கூறும் பிரியங்கா முதலில் தமிழில் பேச வேண்டும். அடிக்கடி கோபப்படும் போதெல்லாம் இங்கிலீஷில் பிரியங்காவும் பேசி வருகிறார் என்று பலர் பிரியங்காவையும் கலாய்த்துக் கொண்டு இருந்தாலும், ஒரு சிலர் அக்ஷராவையும் கலாய்த்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications