எங்க கதை தான் எதிர்நீச்சல்.. 2 நாளு முன்னாடியே மாரிமுத்து இறப்பு.. மனம் திறந்த ரியல் ஃபேமிலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ஒரு குடும்பத்தின் கதை தான் என்று ஏற்கனவே இந்த சீரியலின் இயக்குனர் பேட்டிகளில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் முதன் முறையாக இந்த சீரியல் எங்களுடைய கதை தான் என்று இந்த சீரியல் உருவாகுவதற்கு மைய கருவாக இருந்த குடும்பம் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கின்றனர்.

The real-life family of the ethieneechal serial interview

இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் பல தகவல்களை எதிர்நீச்சல் சீரியல் உருவாக காரணமாக இருந்த ரியல் குடும்பம் பகிர்ந்து இருக்கின்றனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இந்த சீரியலில் வருவது போன்று தான் நிஜ குடும்பத்திலும் நான்கு அண்ணன் தம்பிகள் இருக்கிறார்களாம். இவர்கள் சுரண்டை பிரியா குடும்பம் என்று தான் அந்த ஊரில் உள்ளவர்களால் அடையாளப்படுத்த கொடுக்கிறார்களாம். ஆனால் எதிர்நீச்சல் சிரியலில் ஆதி குணசேகரனின் கேரக்டர் ரொம்பவே ரக்டாக இருக்கிறார். ஆனால் நான் அப்படியெல்லாம் கிடையாது கொஞ்சம் சாப்டான கேரக்டர் தான் என்று இந்த வீட்டின் மூத்த அண்ணனாக இருப்பவர் கூறியிருக்கிறார்.

அதோடு நாங்கள் வெளியிலே போயிட்டு வீட்டுக்கு வந்தால் எங்கள் வீட்டில் இருப்பவர்கள் எங்களுக்கு தரும் மரியாதை நாங்கள் மிரட்டி வாங்கியது இல்லை. நான் வீட்டிற்கு வந்ததும் என்னுடைய பிள்ளைகள் கூட பெரியப்பா வந்தாச்சு டிவியை நிறுத்துங்கள் என்று சொல்லி அமைதியாகி விடுவாங்க. அந்த அளவிற்கு எல்லாரும் பாசம் வச்சிருக்காங்க. ஆனா பயம் கிடையாது என்று அந்த வீட்டின் மூத்த அண்ணன் கூறியிருக்கிறார்.

The real-life family of the ethieneechal serial interview

அதுபோல இந்த சீரியல் உருவாகுனது எங்க கதை தான். அதை எங்களிடம் சொல்லிட்டு தான் இயக்குனர் கதையாக எடுத்தார். ஒரு முறை இந்த ஊரு பாரதி கண்ணன் என்பவர் திருச்செல்வம் சாரை கூட்டிட்டு வீட்டுக்கு வந்தார். நானும் சாப்பாடு எல்லாம் போட்டேன் சாப்பிட்ட பிறகு என்னை பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அப்போது ஒன்றரை மணி நேரமாக நான் என்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்து நான் பட்ட கஷ்டங்கள் எல்லாவற்றையும் சொன்னேன்.

அதையெல்லாம் கேட்டுட்டு தான் அவர் நான் உங்க குடும்பத்தை வச்சு சீரியல் எடுக்க போறேன். அதை நீங்களே தயாரிக்கிறீங்களா என்று கேட்டார். நான் எனக்கு தெரியாத ஒரு தொழிலில் இறங்கவில்லை என்று சொல்லிவிட்டேன். பிறகு அவர் சீரியல் எடுத்து இப்ப ஓடிக்கிட்டு இருக்கு. நான் அந்த சீரியலை எல்லாம் ரொம்ப பார்த்தது கிடையாது. எப்பவாவது பார்ப்பேன். ஆனா என்னுடைய கேரக்டரில் குணசேகரனாக நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார்.

அவரிடம் கடந்த ஐந்தாம் தேதி தான் போனில் நான் பேசினேன். என்னுடைய தம்பி டிரெயினில் வரும்போது மாரிமுத்துவை சந்தித்து இருக்கிறான். அப்போது எனக்கு போன் செய்து அவர் பேசினார். நான் தான் உங்கள வச்சி வரும் கேரக்டரில் ஆதி குணசேகரன் ஆக நடிக்கிறேன் என்று சொன்னார். ஒரு அரை மணி நேரம் பேசுணோம் பிறகு பத்தாம் தேதி நேரில் வருகிறேன் உங்க கூட போட்டோ எடுக்கணும் என்று சொன்னார்.

நானும் ரொம்பவே சந்தோஷப்பட்டேன். ஆனால் அதற்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே அவருக்கு இந்த மாதிரி ஆகும்னு கொஞ்சம் கூட நினைக்கல என்று தன்னுடைய வருத்தத்தை மூத்த அண்ணன் பகிர்ந்து கொள்ள, அதேபோல மூன்றாவதாக இந்த வீட்டில் இருக்கும் நபர் தான் நேரில் குணசேகரனை ட்ரெயினில் பார்த்தேன் அப்போ அவரைப் பார்த்ததும் குணசேகரன் என்று என் பொண்டாட்டி சொன்னா, நான் தான் மாரிமுத்து சாரிடம் போய் பேசினேன்.

The real-life family of the ethieneechal serial interview

அவரிடம் நீங்க எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கிறீங்க அந்த சீரியல் உருவாகுவதற்கு காரணமானவங்க நாங்க தான் என்று சொல்ல அப்போ நீங்க சுரண்டை பிரியா குடும்பமா என்று கேட்டார். ஆமாம் என்று சொன்னேன். பிறகு 1:30 மணி நேரம் ட்ரெயினில் நாங்கள் பேசிக்கொண்டே வந்தோம். அப்போ 10ஆம் தேதி நேரில் வீட்டுக்கு வருகிறேன் என்று சொன்னார்.

நானும் சந்தோஷப்பட்டேன். ஆனால் அதுக்குள்ள அவருக்கு இப்படி ஆயிட்டு. நாங்க அவரோட இறுதி சடங்கில் கலந்து கொண்டு வந்தோம். ரொம்பவே கஷ்டமா இருந்தது. ரெண்டு நாள் தான் பார்த்து இருந்தேன். அதுக்குள்ள என்னாலேயே அவரது இழப்பை ஏற்றுக் கொள்ள முடியல என்று பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+