Thenmozhi serial: பேருக்கு பின்னால டிகிரி இருந்தா நோ டவுரி!
சென்னை: விஜய் டிவியிலின்று மதியம் 3 மணிக்கு தேன்மொழி பிஏ என்று புதிதாக ஒரு சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கி உள்ளது. தேன்மொழி என்கிற கதாபாத்திரத்தில் தொலைகாட்சி தொகுப்பாளினியும், கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நடிகையுமான ஜாக்குலின் நடித்து இருக்கார்.
என்ன காரணமோ தெரியலை விஜய் டிவியின் தொகுப்பாளினிகள் கொஞ்சம் நகைச்சுவை கதா பாத்திரத்துக்கும் பொருத்தமானவர்களாக கிடைத்து விடுகிறார்கள். சன் டிவியிலிருந்து விஜய் டிவிக்கு போன தொகுப்பாளினி பிரியங்கா கூட இப்போது காமெடி தொகுப்பாளினியாகி உள்ளார்.
அடுத்து, இப்போது காமெடி வசனங்கள், நகைச்சுவை நடவடிக்கைகள் என்று சின்னத் திரையில் ஒரு நகைச்சுவை கலந்த தொகுப்பாளினியாகதான் இருந்தார்.

நல்ல கதாபாத்திரம்
நடிகை நயன்தாரா நடித்து மிகவும் வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா படத்தில் ,நயனுக்கு தங்கையாக நடிகை ஜாக்குலின் நடிச்சு இருந்தார். இவர் மிக நன்றாக நடித்து இருப்பதாகவும் கூட அனைவரும பாராட்டினர். என்னவோ தெரியவில்லை, படம் வெளியானதை அடுத்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதைக் கூட தாற்காலிகமாக நிறுத்தி இருந்தார்.

விஜய் டிவியில்
இந்த நேரத்தில்தான் இவர் தொகுப்பாளினியாகத் தடம் பதித்த விஜய் டிவியிலேயே தேன்மொழி பிஏ ஊராட்சி மன்றத் தலைவர் என்கிற பெரும் தலைப்பு கொண்ட சீரியலில் கதையின் நாயகியான தேன்மொழி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் இன்று முதல் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது.

சனிக்கிழமை நோ
எப்போதும் சனிக் கிழமைகளில் விஜய் டிவி இதுவரை சீரியல்கள் ஒளிபரப்பியதில்லை. பாலிமர், ஜீ தமிழ் டிவி, ராஜ் தொலைகாட்சி என்று பல டிவி சேனல்களும் சனி, ஞாயிறுகளில் கூட சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பும் யுக்தியை கையில் எடுத்தது. சன் டிவியில் கடந்த ஐந்து வருடங்களாக சனிக் கிழமைகளிலும் சீரியல்கள் ஒளிபரதப்பாகி வருகின்றன.

திங்கள் முதல் சனி வரை
தேன்மொழி சீரியல், இன்று முதல் வாரம் தோறும் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.தேன்மொழி பேருக்கு பின்னாடி டிகிரி வேணும், அப்படி இருந்தா நோ டவுரின்னு குறிக்கோளோடு இருக்கா. ஆனால், படிக்க மட்டும் முடியாது இவளால். .அதனால் ,நண்பனுடன் சேர்ந்து இரவு நேரத்தில் பள்ளிக் கூடத்துக்கு போயி கேள்வித்தாளை திருட்டிக்கிட்டு வந்தால்.. இவள் படிக்கறது காமர்ஸ் ...வினத்தாளோ பிசிக்ஸ்...
என்ன செய்வாள் பாவம் தேன்மொழி.. பரீட்சைக்கு எப்படி படிக்கப்போகிறாள்?-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications