ஒரே ஒரு பாட்டு.. டோட்டல் குடும்பத்தின் தூக்கமும் போச்சு.. இப்படி பண்ணிட்டியேம்மா தேனு!
சென்னை: தேன்மொழி ஒரே ஒரு பாட்டுதாங்க பாடுச்சு.. டோட்டல் குடும்பமும் தூக்கம் கெட்டு போச்சுங்க.
ரசிகர்கள் இவ்வளவு நாளா எதிர்பார்த்திருந்த சீரியல்கள் எல்லாம் 27 ஆம் தேதியிலிருந்து ஒளிபரப்ப ஆரம்பிச்சாச்சு. அந்த வகையில் விஜய் டிவியில் முன்னணி சீரியல் ஆனா தேன்மொழி சீரியலும் களைகட்டத் தொடங்கியது.
முதல்நாளே நம்ம தேன்மொழி ரவுசு பன்னி பாடி எல்லாரும் தூக்கத்தையும் கிடைத்தாச்சு.. இதுதான் நேற்றைய காமெடி கலாட்டா.

குடிப்பதை விட்ட அருள்
தேன்மொழி தன் கணவருக்கு போட்ட தலையணை மந்திரம் போல தேன்மொழியின் பேச்சுக்கு அருள் குடிக்கிறதை விட்டுவிட்டார். வீட்டில் உள்ளவர்களுக்கு பெரியதாக ஷாக்காக இருக்கிறது. அருளின் அண்ணன்கள் இவரின் மாற்றத்தை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். லேசாக இருட்டி இருந்தாலே கடையை தேடி குடிக்க போறவன் இன்னிக்கி நான் இனி குடிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டு போறான்.

அருள் அம்மாவுக்கு ஷாக்
இதைச் சொல்லி சொல்லி வாயை பொளந்துகிட்டு நிற்கிறார்கள். அருள் குடிக்காததை கேட்டு அருளின் அம்மாவுக்கு தான் பெரிய ஷாக் அண்ட் கோபம். சும்மாவே நமக்கு தெரியும் தேன்மொழியை மாமியாருக்கு பிடிக்காது. இவ்வளவு நாளா நான் சொல்லி கேட்காத அருள் இன்னைக்கு பொண்டாட்டி சொன்ன வார்த்தை கேட்க குடிக்கிறதை விட்டு விட்டானா என்று செம கடுப்புல இருக்காங்க .

தேன்மொழிக்கு வந்த குஷி
அருள் குடிக்கமாட்டேன் என்று சொன்னது தேன்மொழிக்கு செம ஹேப்பி தன் மேல் காதல் அருளுக்கு வந்துவிட்டது என்று செம ஹேப்பி பாட்டெல்லாம் பாடி ஒரே ஆட்டம்தான். அன்னைக்கு நைட்டு அருள் குடிக்காததால் தூக்கம் வராம உருண்டு புரண்டுட்டு இருக்க அதை பார்த்த நம்ம தேன்மொழிக்கு அருளை தூங்க வைப்பதற்காக என்ன பண்ணலாம்னு யோசிச்சி பாட்டு பாட ஆரம்பிக்கிறாங்க.

தேனு பாடினா செத்தான்டா சேகரு
வழக்கமாக பாடத் தெரியாதவங்க பாடுகிறேன் என்று கூறி பாடி "கொல்லும்".. அதே 'பாட்டும் நானே பாடலும் நானே' பாட்டுதான் .....ராத்திரியில் பாட்டு படிச்சு எல்லாரும் தூக்கத்தையும் கெடுக்கிறார். ஒவ்வொருத்தருக்கும் காது கிழியுது. பாட்டைக் கேட்டு எல்லாரும் ரூம் வாசல்ல வந்து நிற்கிறார்கள். அதை பார்த்ததும் தேன்மொழிக்கு சந்தோசம். அடடா.. நாம பாடிய அழகுல தான் எல்லாரும் வந்துட்டாங்க என்று தப்புத் தப்பா நினைச்சு குஷியாகுது.

பாட்டிக்கு வந்த கடுப்பு
உடனே கடுப்பாகும் பாட்டி.. தயவுசெய்து இனி உன் குரல்ல ஒரு பாட்டு படிக்காத, கையெடுத்து கும்பிடுறேன் அப்படின்னு சொல்லி எல்லாரும் போறாங்க. தேன்மொழிக்கு சப்புன்னு போயிருது.. இந்த நேரத்தில், தேன்மொழியின் அப்பாவுக்கு நெஞ்சுவலி வர, அவரை எல்லாரும் ஸ்ட்ரெச்சரில் தள்ளிகிட்டு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருக்காங்க. அந்த டாக்டர் இவங்களுக்கு ஆபரேஷன் தான் இனி பண்ணனும் என்று கூறி விடுகிறார்.

அபாயத்தில் அப்பா
அதை விட பெரிய அதிர்ச்சியாக, அதுக்கு ரெண்டு லட்சம் ஆகும் கிரிட்டிக்கல் ஸ்டேஜில் இருக்கிறார் என்று சொல்லிவிட்டார். தேன்மொழியின் தங்கச்சி தேன்மொழிக்கு போன் பண்ணி சொல்லுகிறார். அதைக்கேட்டு அழுதுகிட்டே நம்ம தேன்மொழியும் ஹாஸ்பிடலுக்கு ஓடி வருகிறார். இதோடு அந்த சீரியல் முடிஞ்சிருக்கு.. இன்னிக்கு என்ன அக்கப் போர் வருதோ .. பார்ப்போம்.












Click it and Unblock the Notifications