இயக்குனர் திருச்செல்வம் மனைவி இதுதானா? வெளியான குடும்ப புகைப்படம்.. மகளின் எளிமையான திருமணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் இயக்குனர் திருச்செல்வத்தின் மகள் திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில், அதில் திருச்செல்வம் மனைவி மற்றும் மகள் உடன் தான் எடுத்த புகைப்படத்தை நடிகை ஹரிப்பிரியா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதற்கு பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இயக்குனர் திருச்செல்வம் கோலங்கள் சீரியலுக்கு பிறகு பெரிய அளவில் எதிர்பார்ப்போடு எதிர்நீச்சல் சீரியலை இயக்கியிருந்தார். இந்த சீரியலும் ஆரம்பத்திலேயே மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டது. சீரியல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் பாராட்டும் வகையில் மற்ற சீரியல்களை விட இதில் வித்தியாசம் காட்டப்பட்டது.

Television Tamil Cinema Sun TV Ethirneechal Serial Director Thiruchelvam

இந்த சீரியல் நடிகர் நடிகைகளுக்கும் அதிகமான மேக்கப் இல்லாமல் இயல்பான ஓட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் தொடங்கப்பட்டது. அதனாலேயே மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களை தாண்டி ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் சில இக்கட்டான சூழ்நிலை காரணமாக கடந்த வாரம் சனிக்கிழமை எட்டாம் தேதி முடிவுக்கு வந்திருக்கிறது‌.

ஆனாலும் எதிர்நீச்சல் சீரியல் திடீரென்று முடிவுக்கு வந்ததை ஏற்றுக் கொள்ள முடியாத பல ரசிகர்கள் இந்த சீரியல் குறித்து இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் இந்த சீரியலில் இயக்குனர் திருச்செல்வம் தன்னுடைய மகள் திருமணத்தை எளிமையாக முடித்திருக்கிறார். அதில் எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள் அனைவருமே கலந்து கொண்டிருக்கின்றனர்.

நடிகர்கள் மட்டுமல்லாமல் இந்த சீரியலில் பணிபுரிந்த சின்ன சின்ன தொழில்நுட்ப கலைஞர்கள் வரை எல்லோரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் மட்டும் அல்லாமல் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது எதிர்நீச்சல் நந்தினி கேரக்டரில் நடித்த நடிகை ஹரிப்பிரியா மற்றும் பிரியதர்ஷினி இருவரும் திருச்செல்வம் மகள் திருமணத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

தக் லைஃப் படத்தில் நடிக்கிறேன்! கமல் என்னை பார்த்து முறைச்சாரு! எதிர்நீச்சல் வில்லன் உடைத்த ரகசியம்
அப்போது திருச்செல்வம் மற்றும் அவருடைய மனைவியும் ஹரிப்பிரியா மற்றும் பிரியதர்ஷினியோடு மணமக்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். இந்த புகைப்படம் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் திருச்செல்வம் தன்னுடைய மனைவி மற்றும் மகளை வெளி உலகத்திற்கு காட்டாமல் இருந்த நிலையில் இப்போது முதல் முறையாக அவர்களுடைய புகைப்படம் வெளியாகி பலருடைய பாராட்டுகளை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+