Thirumanam Serial: சக்தியை என்னதான்டா பண்ண போறீங்க?
சென்னை: ஜனனியை கல்யாணம் செய்துகிட்டு சந்தோஷ், காரில் காதலி சக்தியை அழைச்சுக்கிட்டு போறான். அவள் கல்யாண கனவில் மிதக்க சந்தோஷும் கவுதமும் வேறு திட்டத்தில் இருக்காங்க.
அதனாலதான் சக்தியை என்னதான்டா பண்ணப் போறீங்க கடைசியிலன்னு சீரியல் ஆர்வலர்கள் வாய்விட்டு கேட்கும் அளவுக்கு நிலைமை போய்கிட்டு இருக்கு.
சந்தோஷ் காதலிச்சது சக்தியை.. கல்யாணம் செய்துக்கிட்டது ஜனனியை. எப்படிப்பட்டவனா இருப்பான் பாருங்க இந்த சந்தோஷ் பய...!

சக்தி சந்தோஷ்
சந்தோஷ் தான் சக்தியை காதலிச்சதாகவும், உங்களோட வாழ எனக்கு மனசு ஒப்பலைன்னு ஜனனிகிட்டே சொல்றான். மவுனமாவே இருக்கும் ஜனனி. அதனால், ரெண்டு பேரும் விவாகரத்து பண்ணிடலாம்னு சொல்ல, ஜனனியும் அதுக்கு சரின்னு சொல்லிடறா. ஒரு பெண்ணுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் பாருங்க.. விவாகரத்து கிடைக்கற வரைக்கும் புருஷன் பொண்டாட்டியா நடிக்கலாம்னு முடிவு பண்றாங்க.

சந்தோஷ் ஜனனி
சந்தோஷ் தான் சக்தியை காதலிச்சதாகவும், உங்களோட வாழ எனக்கு மனசு ஒப்பலைன்னு ஜனனிகிட்டே சொல்றான். மவுனமாவே இருக்கும் ஜனனி. அதனால், ரெண்டு பேரும் விவாகரத்து பண்ணிடலாம்னு சொல்ல, ஜனனியும் அதுக்கு சரின்னு சொல்லிடறா. ஒரு பெண்ணுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் பாருங்க.. விவாகரத்து கிடைக்கற வரைக்கும் புருஷன் பொண்டாட்டியா நடிக்கலாம்னு முடிவு பண்றாங்க.

நல்ல மருமகளாக
இப்படி முடிவு எடுக்கும் ஒரு பெண்ணால் குடும்பத்தில் மன்னார், நாத்தனார், மச்சினர் இடையே எப்படி நல்ல பெயர் எடுத்து, அவங்களை கவனித்து குடும்பத்தை கவனித்து நிதானமாக பொறுமையாக வாழ முடியும்? இங்கே வாழ்ந்து காண்பிக்கிறாளே ஜனனி. இந்த காலத்துல இந்த மாதிரி எல்லாம் பொண்ணுங்க இருந்தால் சந்தோஷ் இன்னொருத்தியை கூட காதல் பண்ணலாம்.

சந்தோஷ் கல்யாணம்
வீட்டுக்குத் தெரியாமல் சந்தோஷுடன் காரில் வந்துவிடுகிறாள் சக்தி. சந்தோஷ் இந்நேரம் வீட்டில் என்னைத் திட்ட ஆரம்பிச்சு இருப்பாங்க. நாம சீக்கிரமா போயி ரிஜிஸ்டர் கல்யாணம் செய்துக்கலாம் சந்தோஷ்னு சொல்றா சக்தி. கவுதம் அண்ணா நீங்கதான் சாட்சி கை எழுத்து போடணும்னு கூட இருந்த சந்தோஷின் நண்பன் கவுதமிடம் சொல்ல, அவன் கண்ணீர் விட்டு அழறான்.

சாட்சி கை எழுத்து
சக்தியை சமாதானம் செய்யப் போறேன்னு சொல்லிட்டு இப்போ சாட்சி கை எழுத்து வரைக்கும் போயிட்டாளேடா என்னடா பண்ண போறே சந்தோஷ்ன்னு கவுதம் கேட்க, இருடான்னு சைகை செய்யறான் சந்தோஷ். அண்ணா ஏன்னா அழறீங்கன்னு சக்தி கேட்க.. ஒண்ணும் இல்லை சக்தி அவன் கண்ணுல தூசி விழுந்து இருக்கும். நமக்காக கவுதம் உயிரையே குடுப்பான்னு சொல்ல, சந்தானம் மாதிரி சைலண்டா அழறான் கவுதம்.
சக்தியை என்னதான்டா பண்ணப் போறீங்கன்னு கேட்கற அளவுக்கு கதை போகுது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications