என் கண் முன்னாடியே என் புள்ள உசுரு போயிடுச்சு.. கதறி அழுத பெண்.. அறந்தாங்கி நிஷாவின் நெகிழ்வான செயல்
சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் நடிகை ஆகவும் இருக்கும் அறந்தாங்கி நிஷா தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்து இருக்கிறார்.
இந்த நிலையில் அறந்தாங்கி நிஷா உதவி செய்யப்போன இடத்தில் அங்கு ஒரு பெண் தன்னுடைய குழந்தை தன் முன்னே இறந்து போய்விட்டது என்று கதறி அழுதபடி பேசி இருக்கிறார்.
அதோடு இன்னொரு பெண்ணும் தன்னுடைய தந்தை இறந்ததால் தான் இனி படிக்கப் போவதில்லை என்று சொன்னதை கேட்டு அறந்தாங்கி நிஷா அந்த பெண்ணுக்கு அறிவுரையும் கூறி இருக்கிறார்.

தென் மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக பல மக்கள் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அறந்தாங்கி நிஷா தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த வாரத்தில் கனமழை பெய்து வந்தது.
கடந்த 16ஆம் தேதி துவங்கிய மழை தொடர்ந்து பெய்து வந்ததால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரைக்கும் கனமழை அல்லது புயல் எச்சரிக்கை வந்தால் சென்னையில் உள்ள மக்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். ஆனால் முதல் முறையாக தென் மாவட்டங்களில் மழையின் தாக்கத்தால் பல ஊர்கள் ஸ்தம்பித்துப் போயிருந்தது.
சென்னையை விட பல மடங்கு வந்த மழையால் பலர் பரிதாபமாக இறந்து போயிருக்கின்றனர். பல மக்கள் வீடு வாசல்கள் ஆடு மாடு போன்ற கால்நடைகளையும் இழந்து கண்ணீரோடு தவித்து வருகின்றனர். இத்தனை நாட்களாக தங்களுடைய உழைப்பில் கஷ்டப்பட்டு வாங்கி வைத்த பொருள்கள் எல்லாமே இந்த மழையால் கண் முன்பு அழிந்து போனதை பார்த்து பல மக்கள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வராமல் இருக்கின்றனர்.

அதுபோல இன்னும் ஒரு சில கிராமங்களில் மக்களுக்கு குடிக்க தண்ணீர், உணவு பொருள்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை அறந்தாங்கி நிஷா ஏற்கனவே சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அடிப்படை பொருட்கள் வழங்கி கொடுத்தது போல இப்போது தென் மாவட்டங்களுக்கும் உடனே சென்று தன்னால் முடிந்த அளவிற்கு உதவியை செய்து இருக்கிறார்.
அங்குள்ள மக்களுக்கு தண்ணீர் பாட்டில், உணவு, பெண்களுக்கு நாப்கின் போன்றவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அப்போது அங்கு இருந்த பெண்கள் பலர் கண்ணீரோடு நாங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் கூட நாங்கள் இருக்கிறோமா இல்லையா என்று பார்க்க வரவில்லை. ஆனால் நீங்க வந்து இருக்கீங்க என்று பேசி இருக்கின்றனர்.
அப்போது ஒரு பெண் தன்னுடைய குழந்தை தன்னுடைய கண் முன்னே அந்த மழை வெள்ளத்தில் இறந்து போய்விட்டது என்று கண்ணீர் மல்க கூறி இருந்தார். தண்ணீர் திடீரென்று வீட்டிற்குள்ளே வந்ததால் என்னுடைய மாமனார் என்னுடைய குழந்தையை தலையில் தூக்கி வைத்து இருந்தார். நாங்கள் தண்ணீரில் தத்தளித்த போது அங்கிருந்த உடை மரத்தில் இருந்த முட்களைப் பிடித்துக் கொண்டு தவித்துக் கொண்டிருந்தோம்.
என்னுடைய மாமனார் என் குழந்தையை தலையில் வைத்தபடியே வந்தபோது அங்கு இருந்த களிமண்ணில் கால் மாட்டி விட்டது. என் கண்முன்னே என் குழந்தை அம்மா, பாட்டி, அத்தை என்று கதறியபடியே மூழ்கியது. நாங்கள் உடைமரத்தில் இருந்த முட்களை பிடித்தபடியே 6 மணி நேரமாக அங்கு கத்திக் கொண்டிருந்தோம். யாருமே உதவிக்கு வரவில்லை என்று கண்ணீரோடு சொல்லி இருந்தார்.

அதைக் கேட்டு அறந்தாங்கி நிஷாவும் கண்கலங்கி அழுதார். அதோடு தந்தை இறந்த சோகத்தில் அந்த வீட்டில் கல்லூரி படித்துக் கொண்டிருந்த பெண் இனி நான் கல்லூரிக்கு போக மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாராம். அது பற்றி அறந்தாங்கி நிஷாவிடம் இறந்த நபரின் மனைவி சொல்ல, அதற்கு அறந்தாங்கி நிஷா நீ படிக்க வேண்டும் என்பது உன்னுடைய தந்தையின் கனவு, லட்சியம் தானே? நீ அவருடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும். கண்டிப்பா நீ படிக்க வேண்டும் என்று அட்வைஸ் கொடுத்திருந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications