ஜீ தமிழில் கலக்கிய தூத்துக்குடி பையன்.. அப்பாவுக்காக எடுத்த ரிஸ்க்.. கண் கலங்க வைத்த தில்லை நடராஜன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீ லோடட் நிகழ்ச்சியில் போட்டியாளராக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தில்லை நடராஜன் என்ற இளைஞர் கலந்து கொண்டிருக்கிறார். அவருடைய டான்ஸ்சை பார்த்து நடுவர்கள் வியந்திருக்கிறார்கள். அவர் தன்னுடைய தந்தை குறித்து நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.

டிவி சேனல்களில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அடிதட்டு மக்களும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுகிறார்கள். அதற்கு ஜீ தமிழ் நிகழ்ச்சி பல வகைகளிலும் உதவி செய்து வருகிறது.

Zee Tamil VJ Manimegalai dance jodi dance show

பலருக்கு வாய்ப்பு

ஜீ தமிழ் நிகழ்ச்சியில் சரிகமப மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் சினிமாக்களிலும் என்ட்ரி கொடுக்கிறார்கள். அதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பலர் போட்டி போட்டு வருகிறார்கள். அதுபோல மற்ற சேனல்களை விடவும் ஜீ தமிழில் அடித்தட்டு மக்கள் பலரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

நெகிழ வைத்த ப்ரோமோ

அந்த வரிசையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் மீனவர்கள், வயலில் வேலை செய்பவர்கள், பன்றி வளர்ப்பவர் உட்பட பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது வெளியான ப்ரோமோவில் கலந்து கொண்ட நபர் பலரையும் வியக்க வைத்திருக்கிறார். அதாவது அந்த நபரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் தானாம்.

Zee Tamil VJ Manimegalai dance jodi dance show

தூத்துக்குடி இளைஞர்

தூத்துக்குடி என்றால் கடலும் உப்பளமும் பலருக்கும் ஞாபகம் வரும். ஆனால் எங்களுக்கு டான்ஸ்சும் அபாரம் என்று தூத்துக்குடி இளைஞர் ஒருவர் நிரூபித்து இருக்கிறார். அவர் டான்ஸ் குறித்து எந்த பயிற்சியும் முறையாக கற்றுக் கொள்ளவில்லையாம். டிவியில் ஒளிபரப்பாகும் பாடல்கள் மற்றும் டான்ஸ்சை பார்த்து தான் கற்றுக் கொண்டதாக கூறி இருக்கிறார்.

Zee Tamil VJ Manimegalai dance jodi dance show

வியக்க வைத்த டான்ஸ்

டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் ஆடிஷனில் கலந்து கொண்ட இந்த போட்டியாளர் 100 நிமிடங்களுக்கு மேலாக டான்ஸ் ஆடி அசத்தி இருக்கிறார். அதிலும் மைக்கேல் ஜாக்சன் போல இவருடைய டான்ஸ் அங்கிருந்த நடுவர்களை வியக்க வைத்திருக்கிறது. இதற்காக முறையாக கற்றுக் கொள்ளவில்லை என்றாலும் இவருடைய அசாத்திய திறமையை பார்த்து வியந்து போய் எல்லோரும் பாராட்டி இருக்கிறார்கள்.

அப்பாவுக்காக எடுத்த முயற்சி

அப்போது இந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்வதற்கு முக்கிய காரணம் என்னுடைய அப்பாவை யாரெல்லாம் கிண்டல் அடிச்சாங்களோ அவங்க முன்னாடி எங்க அப்பா தலை நிமிர்ந்து நடக்கணும் அதுக்காகத்தான் நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று சொல்கிறார். அதை அப்போது பாபா பாஸ்கர், "நீ தில்லை நடராஜன் என்று அவருடைய பெயரை வச்சிருக்காடா இந்த பெயருக்கு எந்த கெடுதலும் இல்லாமல் நீ சூப்பரா பெர்பார்மன்ஸ் பண்ணுன" என்று பாராட்டுகிறார்.

Zee Tamil VJ Manimegalai dance jodi dance show

கண் கலங்கிய அப்பா

அப்போது தில்லை நடராஜன் பேசும் போது என்னுடைய அப்பாவிற்கு நான் வேலைக்கு போவது தெரியாது. நான் எங்க அப்பாவுக்கு தெரியாம டெய்லி காலையில் மார்க்கெட்டுக்கு வேலைக்கு போவேன் என்று சொல்லவும் இதையெல்லாம் டிவியில் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய அப்பா ஓடிவந்து தில்லை நடராஜனை கட்டிப்பிடித்துக் கொள்கிறார்.

அப்போது என்னுடைய மகன் வேலைக்கு போவதே எனக்கு தெரியாது நான் இன்னும் நாலு மணி நேரம் வேலை பார்க்க சொன்னா கூட பார்ப்பேன். என்னுடைய மகனை இந்த வயதிலேயே நான் வேலைக்கு அனுப்ப மாட்டேன் என்று அவர் சொல்ல அதற்கு தொகுப்பாளர் விஜய் இவர்தான் சிறந்த அப்பா என்று சொல்லி இருக்கிறார்.

Zee Tamil VJ Manimegalai dance jodi dance show

அப்பாவை அழகு பார்த்த மகன்

அதைத்தொடர்ந்து தில்லை நடராஜன் அங்கு வைக்கப்பட்டிருக்கும் கோட்டை தன்னுடைய அப்பாவிற்கு போட்டு அழகு பார்க்கிறார். இந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு வெளியான ப்ரோமோவில் 25 வயதான பஞ்சமி என்ற பெண் கல்யாணத்திற்கு பிறகு மூன்று குழந்தை ஆபரேஷன் செய்து பிறந்த பிறகும் தன்னுடைய டான்ஸ் திறமையால் தன்னுடைய குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியில் மிகவும் எளிமையாக கலந்து கொண்டார்.

வியக்க வைக்கும் திறமை

அதிலும் நான் வயற்காட்டில் வேலை பார்ப்பேன் அப்போது கூட பாட்டு சத்தம் கேட்டால் என்னை அறியாமல் எனக்கு டான்ஸ் வந்துவிடும் என்னுடைய பெற்றோர் என்னை ஒதுக்கி வைத்து விட்டார்கள். என்னுடைய கணவர் தான் எனக்கு சப்போர்ட் கொடுத்து இந்த மேடையில் ஏற்றி வைத்திருக்கிறார் என்று கண்கலங்க பேசி இருந்தார். அப்போது பாபா மாஸ்டர் அந்தப் பெண்ணின் காலில் விழுந்து வணங்கி இருந்தார்.

Zee Tamil VJ Manimegalai dance jodi dance show
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+