Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சின்ன பையன் கிட்ட ரிதன்யா எதுக்கு சொல்லணும்? அப்ப ரூ.65 லட்சம் காஸ்ட்லி கார் கேட்டது வரதட்சணை இல்லயா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னுடைய வீட்டில் குழந்தையிலிருந்தே வளர்த்து வரும் 11 வயது சிறுவனிடம், ரிதன்யா தன் பிரச்சனைகளை சொல்லி அழுதாராம்.. அதேபோல, ரிதன்யா வீட்டாரிடம் தாங்கள் வரதட்சணை கேட்கவேயில்லை என்று கவின் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.. இவ்வளவும் ஆர்டிஓ விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில், சமூக செயற்பாட்டாளர் ஹரிகிருஷ்ணன் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.

King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சமூகம் மற்றும் பெண்கள் நல செயற்பாட்டாளர் ஹரிகிருஷ்ணன் தந்துள்ள பேட்டியில், "ஒரு பேட்டியில் ரிதன்யாவின் அப்பா சொல்லியிருந்தார், "25 வயதாகிவிட்டதே, இன்னும் கல்யாணம் செய்யாமல் இருந்தால் எப்படிம்மா? என்று என் பெண்ணிடம் கேட்டேன்..

Television Rithanya Tiruppur

அதற்கு ரிதன்யா, "எனக்குன்னு ஒரு ராஜா எங்காவது பிறந்து வளர்ந்துட்டு இருப்பான்.. அவன் கண்டிப்பா என்னை தேடி வருவான், நீ ஏன்..ப்பா கவலைப்படறே" ன்னு ரிதன்யா சொன்னாராம்.

வாய்ஸ் நோட்

அப்படியொரு பாசிட்டிவ் பெண் ரிதன்யா, இப்படியொரு தற்கொலை முடிவு எடுக்கும்போதுகூட, தெளிவாக விஷயத்தை சொல்லிவிட்டுதான் இறந்துபோயிருக்கிறார்.. வெறுமனே குறிப்பாக எழுதி வைக்காமல், நடந்ததை வாய்ஸ் நோட்டில் தெளிவாக பேசியிருக்கிறார்..

ரிதன்யாவுக்கு 3 சிம் கார்டு எதுக்கு என்று கேட்கிறார்கள்.. ரிதன்யா வழக்கமாக ஒரு சிம்கார்டு மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார். நிச்சயதார்த்தம் ஆனதும் கவினுடன் பேசுவதற்காக இன்னொரு சிம்கார்டு வாங்கியிருக்கிறார்..தன்னுடைய ஆரிஒர்க் பிசினஸ் விளம்பரத்துக்காக மற்றொரு சிம்கார்டு தேவைப்பட்டுள்ளது.. இது தெரியாமலேயே வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள்.

65 லட்சம் கார் எதுக்கு?

அதேபோல, வரதட்சணையை ரிதன்யா வீட்டாரிடம் கவின் குடும்பத்தினர் நேரடியாக கேட்கவே இல்லை என்கிறார்கள்.. எந்த வீட்டில் நேரடியாக வரதட்சணையை கேட்டிருக்கிறார்கள்? எதேச்சையாக பெண் வீட்டில் போட்டதே 500 சவரன் நகைகளா?

ஒருவேளை ரிதன்யா குடும்பத்தினரே 500 சவரன் நகைகளை போட்டார்கள் என்றே வைத்து கொண்டாலும், 65 லட்சம் கார் வேண்டும் என்று யார் கேட்டது? காரில் குறிப்பிட்ட கலர், குறிப்பிட்ட மாடல் வேண்டும் என்று கேட்டது யார்? இதுக்கு பெயர் வரதட்சணை இல்லாமல் வேறென்ன?

இந்த காலகட்டத்திலும் வரதட்சணை என்பது இன்னும் குறையவில்லை.. நான் என்ன செய்கிறேன், நீ என்ன செய்கிறாய்? என்ற மனப்பான்மைதான் அதிகமாகி கொண்டிருக்கிறது.. இந்த ஒரே ஒரு காரணத்தினால் எத்தனையோ பேர் தங்களுடைய வாழ்க்கையை சரியாக துவங்க முடியாமல் உள்ளனர்..

11 வயது சிறுவனிடம் கண்ணீர்

11 வயது சின்ன பையனிடம் ஏன் ரிதன்யா தன்னுடைய வலியை சொல்ல வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள்..பொதுவாக, ஒருவரை சிக்க வைக்க வேண்டுமானால் அதற்கு ஆயிரம் பேர் இருப்பார்கள்.. ஆனால், எதுவுமே புரியாதவர்களிடம் சொல்லும்போது, அது யாரிடமும் போய் அந்த விஷயம் சேராது.. அப்படி மனம்விட்டு சொல்வதால், தங்களது குமுறலை கொட்டிவிடுவதுடன், மன அழுத்தத்தையும் குறைத்து கொள்ள முற்படுவார்கள். கிட்டத்தட்ட ஒரு சுவர் கிட்ட பேசுறது போலத்தான்.

அதுபோல இங்கு உயருள்ள ஆனால் உலகமே புரியாத 11 வயது சிறுவனிடம் ரிதன்யா தன்னுடைய பிரச்சனைகளை சொல்லி அழுதுள்ளார்.. அதற்காக தவறான விஷயங்களையோ, தவறான வார்த்தைகளையோ சொல்லவில்லை..

"மாமா என்னை அடிப்பாரு, கடிப்பாரு, எனக்கு ரொம்ப பிரஷரா இருக்கு, இதை யார் கிட்டயும் சொல்லாதே" என்றுதான் அழுது சொல்லியிருக்கிறார்.

பார்க்கும் பார்வையில் உள்ளது

தான் படும் சித்ரவதையை வீட்டில் சொன்னால் அனைவரும் மனம் உடைந்து போவார்கள் என்பதால்தான், அந்த சிறுவனிடம் சொல்லியிருக்கிறார்.. ஒருகட்டத்தில் இந்த உலகத்தில் வாழவே கூடாது என்ற முடிவு எடுத்தபோதுதான், கடைசிநேரத்தில் அனைத்தையும் ஆடியோவில் உடைத்து பேசிவிட்டு, தன்னையும் மாய்த்து கொண்டுள்ளார் ரிதன்யா.

12 வயது பையனிடம் ரிதன்யா பேசியதுகூட, இவர்கள் கண்ணுக்கு தப்பாக தெரிகிறது.. எல்லாத்தையுமே கேவலமாக பார்க்கக்கூடியவர்களுக்கு, எல்லாமே கேவலமாகத்தான் தெரியும்.. நண்பர்களுடன் வெளியே செல்வது உட்பட சின்ன சின்ன விஷயத்திலும் தவறாகவே பார்க்கும் மனிதர்கள்தான் இங்குஅதிகம்.

உலகத்தில் இன்று பெண்கள் படும் அவஸ்வதையை ஒப்பிட்டால், ரிதன்யா பட்ட டார்ச்சரில் 5 சதவீதம்கூட கிடையாது. எந்த ரூபத்திலும் பாதுகாப்பு என்பதே கிடையாது.. அதேசமயம், பெண்கள் என்ற விஷயத்தை தவறாக பயன்படுத்துபவர்களும் உண்டு. எனவே இந்த இரண்டையுமே சமமாக பேலன்ஸ் செய்ய வேண்டியிருக்கிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+