Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ட கண்ட வீடியோ.. நெஞ்சு எரியுதடி ரிதன்யா! ஒரு பெண்ணுக்கு இதுவா நீதி? திருப்பூர் குடும்பம் குமுறுது

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: ரிதன்யா விவகாரத்தின் பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில், அவரது குடும்பத்தினர் கதறி அழும் காட்சிகள் நெஞ்சை உலுக்கி எடுத்து வருகிறது.. தமிழ்நாட்டில் இவ்வளவு அவதிப்பட்டு இறந்த ஒரு பெண்ணுக்கு, இதுதான் நீதியா? எங்க புள்ளைக்கு நல்ல வழியை சொல்லுங்களேன் என்று குலுங்கி அழுகிறார் ரிதன்யாவின் சகோதரர்... "நீ இல்லாம நான் என்னடி பண்ணுவேன் ரிதன்யா என்று கதறுகிறார் பெண்ணின் தாய்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கவின்குமாரை திருமணம் செய்தவர் 27 வயது ரிதன்யா.. திருமணமாகி 78 நாட்களில் ரிதன்யா விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்... தன்னுடைய தற்கொலைக்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் காரணம் என்று தன்னுடைய அப்பாவுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருந்தார்.

Television Tiruppur rithanya

இதையடுத்து, கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது வழக்கு பதிவு, கவின்குமார், ஈஸ்வரமூர்த்தியை போலீசார கைது செய்துள்ளனர்.

நள்ளிரவுகளில் அழுது வந்த ரிதன்யா

இதுகுறித்து ரிதன்யா குடும்பத்தினர் சொல்லும்போது,"கல்யாணமாகி 20 நாட்களில் நள்ளிரவில் பிரச்சினை ஏற்பட்டு ரிதன்யா வீட்டுக்கு வந்தபோதே, நிம்மதியில்லாமல் காணப்பட்டார்.. ரிதன்யாவின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்யும்வரை போலீஸார் விசாரணை முறையாக நடந்தது. ஆனால், உடல்நிலையைக் காரணம்காட்டி சித்ராதேவியை விடுவித்துள்ளதை ஏற்க முடியாது. ஏனென்றால், நடந்த சம்பவங்கள் அனைத்துக்கும் மூலகாரணமே சித்ராதேவிதான். அவரையும் கைது செய்ய வேண்டும்.

அரசியல் அழுத்தங்கள்

அரசியல் அழுத்தங்களால் இந்த வழக்கை கிடப்பில் போடுவதற்கான முகாந்திரங்கள் நிறைய உள்ளதால், மகளின் உயிரிழப்பில் உரிய நீதியை பெற்றுத்தர வேண்டும்.. போலீஸார் விசாரணை, ஆர்டிஓ விசாரணையில் நியாயம் கிடைக்குமா என்று எங்களுக்கு தெரியவில்லை. எனவே, முதல்வர் ஸ்டாலின் இதில் தலையிட்டு, உரிய நீதி பெற்றுத்தர வேண்டும் அல்லது சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும்" என்று கண்ணீர் மல்க கூறியிருந்தனர்..

ரிதன்யாவின் அப்பா அண்ணாதுரை சொல்லும்போது. "பாரம்பரியக் குடும்பம் என நம்பி பெண்ணைக் கொடுத்து ஏமாந்துவிட்டோம். கல்யாணத்துக்கு கணக்கின்றி நகை போட்டும்கூட, இன்னும் நகை கேட்டு துன்புறுத்தி உள்ளனர். வீட்டுக்குள் பூட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளனர்" என்றார்.

தமிழ்நாட்டில் இதுதான் நீதியா

அதேபோல, கலாட்டா சினிமா சேனலுக்கு ரிதன்யாவின் சகோதரர் பேசும்போது, கூடிய சீக்கிரம் குட்நியூஸ் சொல்லு.. ஒரு தாய்மாமனா என்னை ஊருக்கு வரவழை" என்று சொன்னேன்.. அதற்கு ரிதன்யா, கண்டிப்பாக நீ ஊருக்கு வரும்போது நல்ல விஷயம் சொல்றேன்னு சொன்னாள்..

இப்ப என் அக்காவுடைய இறப்புக்கு நான் வந்திருக்கேன்.. அக்கா இறந்த செய்தி கேட்டதுமே, அரை மணிநேரத்தில் ஃபிளைட் டிக்கெட் புக் செய்து, இங்கே வந்துட்டேன்.. என் அக்கா பிணத்தைதான் பார்த்தேன்..

ஒரு பெண், இவ்வளவு சித்ரவதை செய்யப்பட்டு இறந்திருக்கிறாள் என்றால், காவல்துறையும், அரசும் தாங்களாகவே முன்வந்து எங்களுக்கு ஏதாவது ஒரு நடவடிக்கையை செய்யவேண்டும்.. ஆனால் நாங்கள் நாய் மாதிரி அலையறோம்.. நீங்க சொல்றதையெல்லாம் செய்றோம், ஆனால் எங்க புள்ளைக்கு நல்ல வழி சொல்லுங்கன்னு கேட்கிறோம். இதோ இறந்து 4 நாட்களாகிவிட்டது.. ஒரு பெண்ணுக்கு தமிழ்நாட்டில் இதுதான் நீதியா?" என்று கேட்டு குலுங்கி அழுகிறார்..

பொம்பளையா பொம்மையா

இதனிடையே ரிதன்யாவின் போட்டோவை வைத்துக் கொண்டு, ரிதன்யாவின் தாய் கதறிய வீடியோ இணையத்தில் வெளியாகியிருக்கிறது.. "நீ இல்லாம நான் என்ன பண்ணுவேன்.. உன் அப்பா என்னடி பண்ணுவாரு.. நெஞ்சு எரியுதடி' என்று கண்ணீர் விட்டு அழுகிறார்.

பிறகு சேனல் ஒன்றுக்கு அவர் பேசும்போது, "பையன் ஓரளவு வளர்ந்துவிட்டால், வெளியே விட்டு பழகணும்.. வீட்டிலேயே பொத்தி பொத்தி வளர்த்தால்,இப்படித்தான் சைக்கோவா மாறி நிற்கும்.. கண்ட கண்ட வீடியோவை பார்த்துட்டு, பொண்டாட்டி மேல டெஸ்ட் செய்தால் பொம்பளை தாங்குவாளா?

பொம்பளையா? பொம்மையா? இதையெல்லாம் சொன்னால், அவ அப்பா அத்தனை பேரையும் போட்டுத்தள்ளிவிட்டு, இந்நேரம் உள்ளே இருந்திருப்பாரு. அதுக்கு பயந்துட்டுதான் எதையுமே சொல்லாமபோயிட்டா" என்றெல்ல்லாம் அழுதபடியே சொல்கிறார்கள்.

காவல்துறைக்கு அறிவுரை

குடும்ப உறுப்பினர்கள் இவ்வாறு தங்களது ஆதங்கத்தை கண்ணீராய் கொட்டி வருகிறார்கள். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் திருப்பூர் கோட்டாட்சியர் மோகனசுந்தரம் சொல்லும்போது, "பெண் ரிதன்யா மரணம் தொடர்பாக பெண் வீட்டார் தரப்பிலும், போலீஸார் தரப்பிலும் இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் விசாரிக்கப்படும். விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்படும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+