திருவண்ணாமலை கோயிலில் மோக்‌ஷ தீபமா? மனசாட்சி இருக்கா? பாரதிராஜா இல்லேனா இளையராஜாவே இல்லையே: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனோஜின் ஆன்மா சாந்தியடைய வேண்டி திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில் இளையராஜா மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டிருக்கிறார். ஏற்கனவே மனோஜ் இறந்ததற்கு இரங்கல் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், இளையராஜா இன்று திருவண்ணாமலையில், மனோஜ் ஆன்மா சாந்தியடைய வேண்டி மோட்ச தீபம் ஏற்றியுள்ளார். இதுகுறித்து வலைப்பேச்சு அந்தணன் தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.

Valai pechu அந்தணன் பேட்டியில், "நேற்று தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து அறிக்கை வெளியாகியிருந்தது. ஊடகங்கள் இவ்வளவு இழிவாக நடந்து கொள்ள வேண்டுமா? என்பதை நாகரீகமான முறையில் கேட்டு கேள்விகள் அதில் எழுப்பப்பட்டிருந்தன.

Television tiruvannamalai bharathiraja

கன்டென்ட்டுக்காக எதையும் மீடியாக்கள் செய்வதா? பாரதிராஜாவின் கண்ணுக்கு குளோஸ்அப் வைக்கிறார்கள், சடலம் நெருப்புக்குள்ளே போற வரைக்குமா கேமராவில் எடுப்பீங்க? இதெல்லாம் வேதனையைதான் தருகிறது.

விஜய் ஆண்டனி வீட்டில் துக்கம் நடந்தபோது, அறிக்கை ஒன்று வெளியானது. யாரும் இதுபோன்ற சூழலில் நடந்து கொள்ள வேண்டாம் என்றெல்லாம் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், அதற்குள் மீண்டும் மீடியாக்கள் இவ்வாறான செயலை செய்ய துவங்கியிருக்கின்றன.

மகனே மனோஜ் மறைந்துவிட்டாயா

இரங்கல் தெரிவிக்கிறேன் என்ற பெயரில், சில கவிஞர்களையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. "மகனே மனோஜ் மறைந்துவிட்டாயா?" என்று ஒருவர் எழுதுகிறார்.. ஆமா அங்கிள், நான் இறந்துவிட்டேன் என்று பதிலா சொல்ல முடியும்? ஒருவர் இறந்துவிட்டால், கண்ணீர் வருமா? கவிதை வருமா? தன் வீட்டில் ஒரு துக்கம் நடந்தால், இப்படித்தான் கவிதை எழுதி கொண்டிருப்பார்களா?

ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகும்போதே கவிதை எழுதி ரெடியாக வைத்துவிடுவார்கள் போல.. இதுக்கு பதிலாக இறந்தவர்களுக்கு 2 சொட்டு கண்ணீர் விடலாமே? இன்னொரு பெரிய டைரக்டர், "மரணத்தில் உன் தந்தையை வென்றுவிட்டாய் மனோஜ்' என்கிறார். இதற்கு என்ன அர்த்தம் என்றே புரியவில்லை?

சினிமா என்பதே போலித்தனமானது.. எல்லாரும் பொய்யைத்தான் பேசுகிறார்கள்.. யாராவது ஒருத்தர் உண்மை பேசுகிறார் என்றால், அவர் விளங்கவே மாட்டார், அவருக்கு மரியாதையும் இங்கு கிடைக்காது. அவரை வாழ வைக்கவும் மாட்டடார்கள். போலியாக சிரித்து, போலியாக கட்டிப்பிடித்து, போலியாக அழுது, இப்படியே ஆகிவிட்டது.

திருவண்ணாமலையில் மோட்ச தீபம்

திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றியிருக்கிறார் இளையராஜா.. இதெல்லாம் நியாயமா இருக்கா? இளையராஜா சென்னைக்கு வருவதற்கே காரணமானவர் பாரதிராஜா..

அவர் மட்டும் இல்லாவிட்டால், இளையராஜா உள்ளிட்டோர் யாருமே சென்னைக்கே வந்திருக்க முடியாது. அன்று பாரதிராஜாவை நம்பிதானே அத்தனை பேரும் வந்தார்கள்? சென்னையில் பெட்ரோல் பங்கில் பாரதிராஜா வேலை பார்த்து கொண்டிருந்தபோது, அவர்தானே பல நாட்களுக்கு இளையராஜா சகோதரர்களுக்கு சாப்பாடு போட்டிருக்கிறார்?

இளையராஜா - பாரதிராஜா நட்பு

பவதாரணி இறந்தபோது, பாரதிராஜாவால் நடக்கவே முடியல. தவழ்ந்து வந்து, கதறி கதறி அழுதார்.. தன்னுடைய மகளாகவே நினைத்து அழுதார்.. அந்த உணர்வு ஏன் இளையராஜாவுக்கு இல்லை? வீட்டுக்குள் உட்கார்ந்து வீடியோ போட்டால் போதுமா? பாரதிராஜா - இளையராஜா நட்பு எப்பேர்ப்பட்டது? பாரதிராஜா குடும்பம், இளையராஜா மீது வைத்துள்ள அன்பு என்ன? மரியாதை என்ன? அடுத்த தெருவுக்கு போகாமல், திருவண்ணாமலையில் மோட்ச தியாகம் ஏற்றுவது நியாயமா? இது சரியா?

கமல்ஹாசன் பாலிசி

கமல்ஹாசனுக்கு சாவு வீட்டுக்கு போவதில் எப்போதுமே உடன்பாடு இல்லை. இதை ஒரு பாலிசியாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.. இப்படியொரு பாலிசியை ஆளாளுக்கு வைத்து கொண்டிருந்தால், நம்மை தூக்கி செல்லக்கூட 4 பேர் இருக்க மாட்டார்கள்.. நாமளே போய் சுடுகாட்டில் படுத்துக்க வேண்டியதுதான் போல..

ரஜினி வெளிநாட்டில் உள்ளார். அவர் மட்டும் சென்னையில் இருந்திருந்தால் நிச்சயம் அஞ்சலி செலுத்த சென்றிருப்பார்" என்றெல்லாம் கடுப்பாகி பேசியிருக்கிறார் அந்தணன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+