Neeya naana: தெருநாய் குறித்த நீயா நானா நிகழ்ச்சியை நீக்க வேண்டும்! விஜய் டிவிக்கு பறந்த கடிதம்
சென்னை: தெருநாய் பற்றிய நீயா நானா நிகழ்ச்சி சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும் என்பதால் அதை நீக்க வேண்டும் என தமிழ்நாடு விலங்குகள் நல வாரிய கவுரவ உறுப்பினர் ஸ்ருதி வினோத்ராஜ் விஜய் டிவிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தெருநாய்கள் கடித்து சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இறக்கும் அபாயம் உள்ளது. இதனால் தெருநாய்களை காப்பகங்களில் வைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்கு நல ஆர்வலர்கள் போராட்டமும் நடத்தி வந்தனர்.

அந்த வகையில் இந்த வாரம் நீயா நானாவில் தெரு நாய்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதாவது தெருநாய்கள் இல்லாத நகரம் வேண்டும் வெர்சஸ் தெருநாய்களுக்கு உரிமை உண்டு என்ற கருப்பொருளை கொண்டு விவாதம் நடந்தது. இதில் தெரு நாய்களுக்கு ஆதரவாக படவா கோபி, நடிகை அம்மு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கோபிநாத், "நாய்களுக்கு சரணாலயம் வேண்டும் என நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால் என் குழந்தைக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற உரிமை இல்லையா?" என கேள்வி எழுப்பினார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தெருநாய்கள் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன, அவற்றை அன்புடன் பராமரிக்க வேண்டும் என பேசினர். மறுபுறம், தெருநாய்களின் தாக்குதலால் குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அது போல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படவா கோபி, "இரவு நீங்க நாய்கள் இருக்க இடத்திற்கு போனாலே நாய் விரட்டுவது வழக்கம். அதுதான் அதோட குணம்" என்றார். அதற்கு கோபிநாத், "அதுக்காக பக்கத்து தெரு போறதுக்கு நான் விசா எடுத்துட்டு போணுமா? நான் எங்க போணும்னு நான்தான் முடிவு செய்யணும்.
நாய்க்காக நான் செய்ய வேண்டிய வேலையை மாற்ற முடியுமா? காவல் காக்குறது அரசாங்கத்தோட வேலை" என தெரிவித்திருந்தார். அது போல் தெருநாய்கள் இருக்கும் இடத்தில் திருட்டுகள் நடப்பதில்லை என்றும் படவா கோபி தெரிவித்தார்.
இதற்கு கோபிநாத், "நைட்ல திருடங்க வந்தால் தெருநாய் அவங்கள தடுக்கும்னு சொல்றீங்க சரி. இப்போ சென்னைல போட் கிளப்பில் நிறைய பணக்காரங்க இருக்கும் தெருக்களில் நான் தெரு நாயையே பார்த்தது கிடையாது. ஆனால் அங்க கடைசியா எப்போ திருட்டு நடந்துச்சி? திருடர்கள் வராம தடுக்கிறது அரசாங்கத்தோட வேலை, நாயோட வேலை இல்லை" என்றார்.
அது போல் கோபிநாத், அம்முவிடம் "உங்க ஏரியாவுல இருக்கிற எல்லா நாயும் உங்க நாய்ங்க தான" என கேட்டார். அதற்கு அம்மு "ஆமா" என்றார். அதற்கு கோபி, " அது யாரையாவது கடிச்சா நீங்கள் பொறுப்பேத்துக்குவீங்களா" என கேட்டதற்கு அம்மு, "கண்டிப்பாக முடியாது, அதை அரசாங்கம்தான் ஏத்துக்கணும்" என்றார்.
நிகழ்ச்சியில் சிலர் நாய் போல் வவ் வவ் வவ் என கத்தி காண்பித்தனர். அந்த காட்சிகள் ப்ரோமோவில் இருந்த நிலையில் நிகழ்ச்சியில் எடிட் செய்யப்பட்டிருக்கிறது. நாய்களை விரும்பும் நபர்களுக்கு கோபிநாத் சரமாரியான கேள்விகளை எழுப்பியிருந்ததால் அவை எல்லாம் ஒளிபரப்பப்படவில்லை.
ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தாங்கள் பேசியதை முழுவதுமாக போடாமல் தங்களை பொதுமக்களிடம் எதிரி போல் சித்தரித்துள்ளதாக படவா கோபி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வீடியோவில் கூறியிருப்பதாவது: விஜய் டிவியில் என்னை அழைத்தார்கள், உங்கள் வீட்டு நாய் குறித்து பேச வேண்டும், எங்கள் நிகழ்ச்சிக்கு கெஸ்ட்டாக வருமாறு கேட்டனர்.
நானும் ஒப்புக் கொண்டேன். கடைசியில் விஜய் டிவியில் நான் பேசியதை எடிட் செய்து, தவறாக சித்தரித்துவிட்டார்கள். இவர்கள் இப்படி செய்வார்கள் என நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. நான் என் வீட்டு நாய் குறித்து பேசியதை எல்லாம் நீக்கிவிட்டார்கள். எனினும் நான் பேசியது பொதுமக்களுக்கு புண்பட்டிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் என்றார்.
இந்த நிலையில் தெருநாய் குறித்து வெளியான நீயா நானா ஷோ பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதால் இந்த ஷோவிற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. அந்த வகையில் தெருநாய் பற்றிய நீயா நானா நிகழ்ச்சி சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும், அதை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு விலங்குகள் நல வாரிய கவுரவ உறுப்பினர் ஸ்ருதி வினோத்ராஜ் என்பவர் விஜய் டிவிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications