டாப் குக்கு டூப் குக்குவில் அடிதடியில் இறங்கிய வடிவேலு! தலையில் இதை கவனிச்சீங்களா? இப்படி மிரட்டலா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் வரும் 26 ஆம் தேதிக்கான வைகைப்புயல் வடிவேலு ஸ்பெஷல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் வடிவேலு டாப் குக்குகள் மற்றும் டூப் குக்குகளை போட்டு பாடாய்படுத்தி எடுக்கிறார்.
பொதுவாக டிவி சேனல்களில் டிஆர்பி அதிகரிப்பதற்காக நாளுக்கு நாள் புதிய ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்த நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தயாரித்த மீடியா மேஷன்ஸ் நிறுவனம் விஜய் டிவியில் இருந்து வெளியேறி சன் டிவியில் புது நிகழ்ச்சியை தொடங்கி இருக்கின்றனர்.

அதே நேரத்தில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்த பல கோமாளிகளும் சன் டிவிக்கு வந்து விட்டனர். அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் மீடியா மேஷன்ஸ் நிறுவனத்தோடு சன் டிவியில் இணைந்து விட்டார். இது ஒரு புறம் இருக்க புதியதாக தொடங்கப்பட்ட டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை பிரபலப்படுத்துவதற்காக நடிகர் வடிவேலுவை முதல் முறையாக சின்னத்திரையில் அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.
சன் டிவிக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது! விஜய் டிவியை விட்டு போனது நஷ்டம்! வெங்கடேஷ் பட் ஓப்பன்
வடிவேலு ஆரம்ப காலகட்டத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து பிறகு காமெடியனாக நடித்துக் கொண்டிருக்கும் போதே கதாநாயகனாக மாறி இருந்த நிலையில் சில வருடங்களாக வடிவேலு நடிக்கும் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் கடந்த வருடத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் வடிவேலுக்கு மீண்டும் பிரபலத்தை கொடுத்தது.
இந்த நிலையில் வடிவேலுவை டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். அதே நேரத்தில் வடிவேலு இனி தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் வருவாரா? அல்லது ஒரு சில வாரங்களுக்கு மட்டும்தான் வருவாரா? என்று இன்னும் உறுதியாக சொல்லப்படவில்லை. ஆனால் அவர் கலந்து கொண்ட எபிசோடுகள் வரும் மே 26 ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது.

அதற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் டாப் குக்குகளுக்கு தஞ்சாவூர் பொம்மை போன்ற காஸ்ட்யூம் கொடுத்து இருக்கிறார்கள். அதை வைத்து தான் டாப் குக்குகள் சமைக்க வேண்டுமாம். அதுபோல வடிவேலு போட்டியாளர்களுக்கு அறிவுறுத்தல்களை கூறுகிறார். அதில் நல்லா கேட்டுக்கோங்க உங்களுக்கு கொடுத்த நேரம் ஒரு மணி நேரம் தான்.
உங்களுக்கு கொடுத்த நேரம் தாண்டுச்சுன்னா... நான் தாண்டிடுவேன் என்று மிரட்டுகிறார். அதுபோல அங்கு இருக்கும் போட்டியாளர் ஒருவர் சார் இவங்க சும்மாவே சமைக்க மாட்டாங்க.. நீங்க இந்த காஸ்ட்யூம் போட்டீங்கன்னா எப்படி சமைப்பாங்க? என்று கேட்க அதற்கு கோபமான வடிவேலு போடாங்கிறேன்ல.. போடா.., என்று விரட்டுகிறார்.

அதுபோல நிகழ்ச்சி வடிவேலுவின் பஞ்ச் டயலாக் அவ்வபோது பேக்ரவுண்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதோடு அங்கிருக்கும் டுப் குக்குகளோடு சேர்ந்து வடிவேலு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் டாப் குக்குகள் தான் பாவமாக தலையில் தஞ்சாவூர் பொம்மை போன்ற கிரீடத்தை மாற்றப்பட்டு இருப்பதால் அங்கே இங்கே அசைக்க முடியாமல் பாடாய்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications