Nanjil Vijayan: தங்கச்சிகள் இருந்தாலும் நானும் நாஞ்சில் விஜயனும் ஒரே அறையில்தான்! திருநங்கை பரபரப்பு
சென்னை: நானும் நாஞ்சில் விஜயனும் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளோம். தற்போது அவருக்கு குழந்தை பிறந்தது என்பதற்காக என்னை தவிர்க்கிறார் என திருநங்கை ஒருவர் குமுறியுள்ளார்.
இதுகுறித்து திருநங்கை, கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 2011 ஆம் ஆண்டு எனக்கு நாஞ்சில் விஜயனை தெரியும். அப்போது விஜய் டிவியில் "கலக்க போவது யாரு" நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். நான் சன் மியூசிக்கில் ஆங்கராக பணியாற்றினேன்.

அப்போது எனக்கு என்னோட நண்பரின் மூலம் நாஞ்சில் விஜயன் அறிமுகமானார். நானும் அவரும் 15 ஆண்டுகளாக பழகி வந்தோம். நாங்கள் நண்பர்களாக இருந்த நிலையில் 2017- 2018 கால கட்டத்தில் எங்கள் நட்பு காதலாக மாறியது. நாங்கள் இருவரும் ஒன்றாக குடித்தனம் நடத்தி வந்தோம். எங்களுக்குள் இருக்கும் உறவு, நாஞ்சில் விஜயனுக்கு திருமணமாகி அவரது மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் தொடர்ந்தது.
குழந்தை பிறப்பு
தற்போது குழந்தை பிறந்ததும் 6 மாதங்களாகத்தான் நாஞ்சில் விஜயன், என்னை பார்ப்பதை தவிர்த்து வருகிறார். என் தொலைபேசி நம்பரை பிளாக் செய்துவிட்டார். நான்தான் முதலில் எனது காதலை அவரிடம் சொன்னேன். அவர் முதலில் நான் கிண்டல் செய்வதாக நினைத்தார். பின்னர் அவருக்கும் என்னை பிடித்து போய் காதலித்தார்.
மரியாவுடன் திருமணம்
அவருக்கு மரியாவுடன் கல்யாணம் ஆனதற்கு காரணமே நான்தான். விஜயனின் மாமியார் எனக்கு தெரிந்தவர். நான்தான் மரியாவை அழைத்துக் கொண்டு நாஞ்சில் விஜயனின் தங்கை வளைகாப்புக்கு அழைத்தேன். எங்களுக்குள் இருக்கும் உறவு, நாஞ்சிலின் மாமியாருக்கு தெரிந்ததால், எனக்கு தடையாக இருக்க மாட்டார் என்பதால் அந்த பெண்ணை நாஞ்சிலுக்கு கொடுக்குமாறு கேட்டேன்.
நாஞ்சில் உறவினர்கள்
நாங்கள் இருவரும் பழகி வருவது நாஞ்சிலின் உறவினர்களுக்கும் தெரியும். அவர் வீட்டு விசேஷங்களை நான்தான் முன்னின்று நடத்தி வைப்பேன். அவருடைய தங்கச்சிகள் இருந்தாலும் நானும் நாஞ்சிலும் ஒரே அறையில்தான் தங்குவோம். நாங்கள் வெளிநாடுகளை தவிர நிறைய இடங்களுக்கு ஒன்றாக சென்றுள்ளோம். ஷூட்டிங் போகும் போது எனக்கும் சேர்த்துதான் அவர் டிக்கெட் போடுவார்.
பெண் வேடம்
என் மீது காதல் இருந்தாலும் அவர் ஏன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார் என்றால், அவர் பெண் வேடம் போடுவதால் அவருக்கு திருமணம் நடக்காது என பலர் கேலி கிண்டல் செய்தார்கள். இவர் பெண் தேடிய போதும் யாரும் கொடுக்க முன் வரவில்லை. அதற்கு காரணம் இவர் பெண் வேடம் போடுவதால்தான். இதை சொல்லி என்னிடம் நாஞ்சில் நிறைய முறை அழுதிருக்கிறார். அதனால்தான் நான் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன்.
6 மாதங்களாக
நாஞ்சில் என்னை ஏமாற்ற மாட்டார் என நினைத்துத்தான் அவருக்கு திருமணம் செய்து வைத்தேன். கடந்த 6 மாதங்களாக என்னை ஷூட்டிங் நடக்கும் இடங்களிலும், விழாக்களின் போதும் நானே போய் பேசினாலும் நாஞ்சில் என்னிடம் முகம் கொடுத்துக் கூட சரியாக பேசுவதில்லை.
டிஜிபியிடம் கொடுத்த புகார் என்ன?
நான் நாஞ்சில் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். அதில் அவரை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. பழைய மாதிரி என்னுடன் அவர் பழக வேண்டும். அது போதும் எனக்கு! என அந்த திருநங்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications