மே 4க்கு முன்பே கொண்டாட்டம்… திரிஷா ‘ப்ரீ பர்த்டே’ வில் யாரு பாருங்க.. எல்லாம் ப்ளான் தான் போல!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை திரிஷா, தனது பிறந்தநாளுக்கு முன்பே கொண்டாட்டத்தில் ஈடுபட்டது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. மே 4ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், அதற்கும் முன்பாகவே நண்பர்களுடன் கிரி பர்த்டே கொண்டாட்டம் என்று அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

நடிகை திரிஷா பற்றி ஏற்கனவே பல சர்ச்சைகள் வலம் வருகிறது. திரிஷாவுக்கு மே நான்காம் தேதி பிறந்தநாள் என்பதால், அதே நாளில் தேர்தல் ரிசல்ட் வர இருக்கிறது என்பதை வைத்து சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர். சமீபத்தில் திரிஷா மற்றும் விஜய் இருவரும் ஜோடியாக ஒரு கல்யாணத்தில் கலந்து கொண்டததற்குப் பிறகு திரிஷா மற்றும் விஜய் குறித்து அதிகமான சர்ச்சைகள் பரவி வருகிறது.

Trisha Kollywood Birthday Celebration vijay

மே நான்காம் தேதி விஜய் எலக்சன் ரிசல்ட் பார்ப்பதற்காக கூட தமிழ்நாட்டில் இருக்கப்போவதில்லை என்றும் திரிஷாவுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வெளிநாட்டுக்கு போகப் போகிறார் என்றும் சிலர் செய்திகளை பரப்பி வருகிறார்கள். இப்படி இருக்கும்போது இப்போதே திரிஷா பிறந்த நாளை கொண்டாடி இருப்பதும் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது.

24 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னணி நடிகை

2002ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான திரிஷா, அதன் பின்னர் திரையுலகில் தனக்கென ஒரு நிலையான இடத்தை உருவாக்கினார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளில் நடித்த அவர், உண்மையான "பான் இந்தியா" நடிகையாக உயர்ந்துள்ளார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக அபியும் நானும் படத்திற்காக மாநில விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றது அவரது நடிப்புத் திறனை உறுதிப்படுத்தியது.

தொடரும் வதந்திகள்

சமீப காலங்களில் 'லியோ', 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்', 'விடாமுயற்சி', 'தக் லைஃப்' போன்ற பெரிய படங்களில் நடித்த திரிஷா, தற்போது சூர்யாவுடன் நடித்துள்ள 'கருப்பு' படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி உள்ளார்.

இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை என்ற தகவல் வெளியாகி, "திரிஷா சினிமாவை விட்டு விலகுகிறாரா?" என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. அதனால் இது வெறும் வதந்தியாகவே பார்க்கப்படுகிறது.

ப்ரீ பர்த்டே கொண்டாட்டம்

இந்த சூழ்நிலையில், திரிஷா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த புகைப்படங்களே தற்போது பேசுபொருளாகியுள்ளது. "Pre Birthday" என குறிப்பிட்டு தோழிகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்களை வெளியிட்ட அவர், "எவ்விதப் பெயரிட்டும் அழைக்க முடியாத சில நட்புகளும் உண்டு" என்று பதிவு செய்திருந்தார்.

இந்த ஒரு வரி பதிவு, அவரது நண்பர்களுடன் உள்ள உறவை வெளிப்படுத்துவதோடு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Trisha Kollywood Birthday Celebration vijay

ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், "எப்போதும் போல சிம்பிள் & கிளாசி", "நட்பு தான் உண்மையான செல்வம்"என்று கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

சினிமாவையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் சமநிலையில் வைத்திருக்கும் திரிஷா பல வருடங்களாக சினிமாவில் நிலைத்து நிற்பது மட்டுமல்லாமல், தனது தனிப்பட்ட வாழ்க்கையையும் அமைதியாக நடத்திவரும் நடிகைகளில் ஒருவராக திரிஷா பார்க்கப்படுகிறார். அவ்வப்போது வரும் வதந்திகளை தாண்டியும், தனது பாதையில் கவனம் செலுத்தும் அவரது செயல் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது.

பிறந்தநாளுக்கு இன்னும் சில நாட்கள் இருக்கும்போதே இப்படியாக கொண்டாட்டத்தை தொடங்கிய திரிஷா, இந்த வருடமும் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு தருணத்தை கொடுக்கப்போகிறார் என்பதில் ஐயமில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+