குட் பேட் அக்லி ரிலீசுக்கு பிறகு திரிஷா போட்ட “கோபமான” பதிவு.. பதிலடி நயன்தாராவிற்கா? பிரச்சனை இதுதானா?
சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகை திரிஷாவும் நடித்திருந்தார். இந்த திரைப்படம் நேற்று வெளியானது. அதைத்தொடர்ந்து இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கோபமான பதிவு ஒன்றை திரிஷா போட்டு இருக்கிறார். அது இணையத்தில் பலருடைய கவனத்தைப் பற்றி வருகிறது.
சினிமாவில் ஒரு சில நடிகைகளுக்கு மட்டும் வயதே ஆகாதா என்று வியக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகை திரிஷா. 18 வயதில் சினிமாவில் அறிமுகமான திரிஷா இப்போது 40 வயதை கடந்துவிட்ட போதிலும் அதே இளமையோடு இருக்கிறார். இதுதான் பலரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

அழகான ராட்சசி
சினிமாவில் இப்போது பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். தான் செய்யும் சின்ன சின்ன சேட்டைகள் முதல் தன்னுடைய போட்டோ சூட் புகைப்படங்கள் வரை அனைத்தையும் சோசியல் மீடியா பக்கங்களில் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார். சில வாரங்களுக்கு முன்புதான் இவருடைய x தளம் ஹேக் செய்யப்பட்டது. ஆனாலும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட்கள் போட்டுக் கொண்டிருந்தார்.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
திரிஷாவின் சோஷியல் மீடியா பக்கத்தில் தன்னுடைய நாய்க்குட்டியுடன் விளையாடும் புகைப்படங்கள் அடிக்கடி இடம் பிடிக்கும். அதுபோல காதலர் தினத்தில் தன்னுடைய நாய் தவறிவிட்டதை நினைத்து எமோஷனலாக போஸ்ட் போட்டிருந்தார். கதாநாயகியாக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் திரிஷா வில்லியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
வில்லி அவதாரம்
ஏற்கனவே கொடி திரைப்படத்தில் தனுஷுக்கு வில்லியாக நடித்திருந்தார். இப்போது சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்திலும் திரிஷாவின் கேரக்டர் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது . அதுபோல அஜித்துடன் ஆறாவது முறையாக இணைந்து நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் நேற்று பிரம்மாண்டமாக வெளியானது. திரைப்படம் வெளியான நேரத்தில் இருந்து திரிஷாவின் கேரக்டர் குறித்தும் திரிஷாவின் நடிப்பு குறித்தும் அதிகமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
திரிஷாவின் இன்ஸ்டா போஸ்ட்
இந்த திரைப்படத்தில் திரிஷாவை உப்புக்கு சப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்று சிலருக்கு கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று திரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதில் "ஷப்பா டாக்ஸிக் ஆளுங்களா... உங்களுக்கெல்லாம் எப்படித்தான் தூக்கம் வருகிறது? சோசியல் மீடியாவில் இருந்துட்டு அறிவுகெட்ட தனமா மற்றவர்களை பற்றி பதிவுகளை போடுவது தான் உங்க வேலையா? உங்களுக்காகவும் உங்களுடன் வாழ்பவர்களுக்காகவும் மிகவும் வருந்துகிறேன். இது கோழைத்தனம்.. காட் பிளஸ் யூ" என்று பதிவிட்டு இருக்கிறார்.
ரசிகர்களின் கமெண்ட்
இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று இணையத்தில் சில பேச்சுகள் அடிபடுகிறது. அதாவது சில நாட்களுக்கு முன்பு திரிஷாவின் ரசிகர்கள் குட் பேட் அக்லி திரைப்பட ட்ரைலர் வெளியிட்ட போது ஒரே ஒரு லேடி சூப்பர் ஸ்டார் தான் அது எங்க திரிஷா மட்டும் தான் என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு நயன்தாராவின் ரசிகர்கள் குட் பேட் அக்லியில் திரிஷா நடிப்பு மோசம் என்று விமர்சித்து வருகிறார்கள்.

கோபத்துக்கு காரணம்
அதோடு 20 வருடமாக சினிமாவில் நடித்தும் சொந்த குரலில் டப்பிங் பேச தெரியல, அவருக்கு நடிக்கவும் தெரியாது, டப்பிங் பேசவும் தெரியாது என்று பதிலடி கொடுத்திருக்கிறார்கள். சோசியல் மீடியாவில் இந்த சண்டை பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில் நயன்தாராவின் ரசிகர்களை அட்டாக் பண்ணும் விதமாக திரிஷா இப்படி ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறாரா என்று நெட்டிசன்கள் புது கதையை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
பதிலடி இவருக்கு தானா
அதிலும் திரிஷா வெளியிட்ட பதிவில் "டாக்ஸிக்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்போ அந்த டாக்ஸிக் என்பது நயன்தாரா தான் என்று சிலர் அடித்து கூறுகிறார்கள். அதாவது நயன்தாரா நடித்துவரும் ஒரு படத்தின் பெயர் டாக்ஸிக் என்று இருப்பதால் திரிஷா டிக்கோடுடன் இப்படி போட்டு இருக்கிறார் என்று இணையத்தில் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications