திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே
சென்னை: சமீப காலமாக நடிகை திரிஷா பெயர் சுற்றி தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பிக் கொண்டிருக்கும் நிலையில், அவர் போட்டுள்ள ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

திரிஷா பகிர்ந்த போஸ்ட்
இந்த ஸ்டோரியில், ஒரு பெயரே முழுமையான ஒரு அடையாளமாக மாறுவது மிகவும் அரிதான விஷயம். ஆனால் அதுதான் திரிஷா கிருஷ்ணன். ஒரு சக்திவாய்ந்த பட்டியலின உயிரோடு இருக்கும் உருவகமாக அவர் திகழ்கிறார். 'தெற்கின் ராணி' போன்ற வார்த்தைகள் கூட, காலத்தையும், மொழிகளையும், வகைகளையும், ரசிகர்களையும், பாலினங்களையும் கடந்து வளர்ந்த அவரது மரபை விவரிக்க போதாது.
அவரது கலைப்பயணம் சினிமா, பொழுதுபோக்கு மற்றும் மிகப்பெரிய நட்சத்திர மதிப்பை சரியான அளவில் கலந்த ஒன்றாக உள்ளது. வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றாலும் சரி, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றாலும் சரி, PETA தூதராக இருந்தாலும் சரி, UNICEF பிரபல ஆதரவாளராக இருந்தாலும் சரி - திரிஷா எல்லாவற்றையும் சாதித்துள்ளார்.
திரிஷாவின் சாதனைகள்
ஆணாதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த துறையில் நீண்ட காலம் நிலைத்து நிற்பது ஒரு விஷயம் என்றால், அதையே தாண்டி இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக உயர்ந்திருப்பது வேறு ஒரு விஷயம்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அவர் செய்த பல்வேறு கதாபாத்திரங்கள், அடுத்த தலைமுறைக்கு ஒரு புதிய பாதையை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில், '96, விண்ணைத்தாண்டி வருவாயா, பொன்னியின் செல்வன், லியோ போன்ற படங்கள் மூலம் இந்திய முழுவதும் கலாச்சார எல்லைகளை தாண்டிய படங்களின் பிரபலத்தையும் எடுத்துக் காட்டியுள்ளார்.
அவரது வெற்றி, தென்னிந்தியாவின் அனைத்து முன்னணி இயக்குநர்கள் மற்றும் ஹீரோக்களுடன் இணைந்து பணியாற்றியதால்தான் என்று சொல்லப்படுகிறதே தவிர, உண்மையில் அவர்கள் திரிஷாவுடன் பணியாற்றியதால்தான் அவர்கள் மேலும் உயர்ந்துள்ளனர் என்று சொல்லுவது தான் சரியாக இருக்கும் என்று அந்த கட்டுரை பாராட்டுகிறது. இதை பகிர்ந்ததன் மூலம், சமீப சர்ச்சைகளுக்கு நேரடி பதில் சொல்லாமல், தனது சாதனைகளே தான் பதில் என்று அவர் மறைமுகமாக காட்டியிருக்கிறார் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
திரிஷா விஜய் ஒரே நிகழ்ச்சியில்
இதற்கிடையில், விஜய் மற்றும் திரிஷா ஒரே திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டது பெரும் பேசுபொருளாக மாறியது. இருவரும் ஒரே நிற உடையில் தோன்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பல்வேறு வதந்திகளுக்கும் வழிவகுத்தது. இது ரசிகர்கள் மத்தியில் அதிக விவாதத்தை கிளப்பியது.
பார்த்திபனின் சர்ச்சை பேச்சு
அதனைத் தொடர்ந்து, நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் ஒரு நிகழ்ச்சியில் திரிஷாவை குறிக்கும் வகையில் பேசியதாக சர்ச்சை கிளம்பியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திரிஷா தனது சமூக வலைதளத்தில் ஒரு ட்வீட் பதிவு செய்து எதிர்ப்பு தெரிவித்தார். அந்த பதிவில் நேரடியாக பெயர் குறிப்பிடாமல் இருந்தாலும், அது பார்த்திபனை நோக்கி தான் என பலர் எடுத்துக்கொண்டனர்.
திரிஷாவின் பதிலடி
இதற்குப் பிறகு பார்த்திபனும் வீடியோ மூலம் பதிலளித்து, திரிஷாவை "மூன்றாவது மனிதர்" என குறிப்பிடுவதோடு, அவர் போட்ட பதிவையும் விமர்சித்தார். இதனால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், திரிஷா செய்த உடல் உறுப்பு தானம் போன்ற நல்ல செயல்களை பாராட்டி, இந்த விவகாரத்தை இங்கேயே நிறுத்துவோம் என சமரசமான நிலைப்பாட்டையும் எடுத்தார்.
இவ்வாறு ஒருபுறம் சர்ச்சைகள் தொடர்ந்து வந்தாலும், மறுபுறம் தனது சாதனைகளை முன்னிறுத்தும் வகையில் திரிஷா பகிர்ந்த இந்த ஸ்டோரி, "பேச்சுகள் வரலாம்... ஆனால் நான் என்ன சாதித்தேன் என்பதுதான் முக்கியம்" என்ற அமைதியான ஆனால் வலுவான பதிலாக பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், சர்ச்சைகள் சூழ்ந்தாலும், தனது பயணமும் சாதனைகளும் தான் தன்னுடைய அடையாளம் என்பதை திரிஷா மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளார் என்றே சொல்லலாம்.
-
உண்மையிலேயே நீங்கள் தமிழகத்தின் முதல்வரா அல்லது எதிரியா ஜோசப் விஜய் அவர்களே.. நயினார் கேள்வி -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? விஜய் டிக் அடிக்கும் அந்த நேர்மையான அதிகாரி! வெளியான தகவல் -
8 கிராம் தங்கம் + பட்டுப் புடவை திட்டம்.. தவெக அரசு திருமண உதவித் திட்டம் விரைவில் தொடக்கம் -
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரா? அமைச்சர் விஸ்வநாதன் மீது பொன்முடி விமர்சனம்












Click it and Unblock the Notifications