குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் சூட்டிய நாஞ்சில் விஜயன்.. அதுவும் இப்படி ஒரு சென்டிமென்ட்டா? குவியும் வாழ்த்து
சென்னை: விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் மூலம் பிரபலம் அடைந்த நாஞ்சில் விஜயன் தன்னுடைய மகளுக்கு இன்று பெயர் சூட்டு விழா கொண்டாடி இருக்கிறார். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு பாஜக தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன் பிறந்த நாளில் தன்னுடைய மகளுக்கு தமிழிசையிடம் பெயர் சூட்ட சொல்லி இருந்தார். ஆனால் அது என்ன பெயர் என்பதை பற்றி அறிவிக்காமல் இருந்த நிலையில் இன்று தன்னுடைய உறவினர்கள், குடும்ப நண்பர்கள் முன்னிலையில் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா வைத்து பெயரை அறிவித்திருக்கிறார்.
நடிகரும் விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்கிறார். சோசியல் மீடியாவில் அவருடைய மனைவியோடு வெளியிடும் ரீல்ஸ் வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நாஞ்சில் விஜயன் தன்னுடைய சகோதரிகளுக்கு திருமணம் முடித்து வைத்துவிட்டு முப்பது வயதிற்கு மேல் தான் திருமணம் செய்து கொண்டார்.

அப்போது அவருடைய மனைவியிடம் இவருடைய வயதை சொல்லாமலேயே திருமணம் செய்து கொண்டாரா. எனக்கும் இவருக்கும் அதிகமான வயது வித்தியாசம் இருக்கிறது என்று அவருடைய மனைவி மரியா ஒரு பேட்டியில் பேசி இருந்தார். திருமணத்திற்கு பிறகு நாஞ்சில் விஜயன் மற்றும் மரியா இருவரும் விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டனர்.
குழந்தை இல்லாத வருத்தம்
அப்போது இவர்களுக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் குழந்தை இல்லை என்பது குறித்து உருக்கமாக பேசியிருந்தனர். வெளியே எங்கே போனாலும் யார் பார்த்தாலும் முதலில் குழந்தை ஏன் இன்னும் பெத்துக்கொள்ளாமல் இருக்கீங்க என்று கேட்கிறார்கள், நாங்களாக வேண்டாம் என்று நினைக்கவில்லை ஆனால் கடவுள் தரும் போது அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வோம் என்று பேசி இருந்தனர்.
மனைவி கர்ப்பம்
பிறகு மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சி முடிவடைந்த ஒரு சில மாதங்களிலேயே மரியா கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார். அதிலும் தாங்கள் இத்தனை வருடங்களாக காத்திருந்ததற்கு தங்களுக்கு கடவுள் பரிசு கொடுத்திருக்கிறார் என்று கூறியிருந்தார். அதுபோல கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பதற்கு முன்பு வளைகாப்பு பங்க்ஷனை விஜய் டிவி பிரபலங்கள் அனைவரையும் கூப்பிட்டு வைத்து பிரம்மாண்டமாக நாஞ்சில் விஜயன் நடத்தி வைத்திருந்தார்.
பெயர் சூட்டிய தமிழிசை சௌந்தர்ராஜன்
தன்னுடைய மனைவியோடு விஜய் டிவியில் நீயா நானா, ஜீ தமிழில் தமிழா தமிழா போன்ற நிகழ்ச்சிகளிலும் நாஞ்சில் விஜயன் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த மாதத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் பிறந்த நாளில் அவருடைய வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவிக்க நாஞ்சில் விஜயனும் அவருடைய மனைவியும் சென்றிருந்தனர். அப்போது தமிழிசை சௌந்தர்ராஜனிடம், தன்னுடைய குழந்தையை கொடுத்து குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லி இருந்தார்.
நடிகர் விஜயன் குழந்தை பெயர்
தமிழிசை சௌந்தர்ராஜன் மகிழ்ச்சியோடு பெயர் சூட்டியிருந்தார். ஆனால் அது என்ன பெயர் என்பது பற்றி அப்போது அறிவிக்கவில்லை. தான் சில வாரங்கள் கழித்து இது பற்றி அறிவிக்கிறேன் என்று சொல்லி இருந்தார். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாஞ்சில் விஜயன் தன்னுடைய குழந்தையின் பெயர் சூட்டு விழா வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய மகளுக்கு "கற்பகம் என்கிற நவனிக்கா" என்று பெயர் சூட்டில் இருப்பதாக கூறியிருக்கிறார். கற்பகம் என்பது பாட்டியின் பெயர் அதை குழந்தைக்கு வைப்பதில் தான் சந்தோஷப்படுகிறேன், எங்கள் வீட்டு தேவதை எல்லா வளமும் பெறட்டும் என நாஞ்சில் விஜயன் கூறியிருக்கிறார்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications