நடிகை கண்மணி- அஸ்வத் தம்பதிக்கு குழந்தை பிறந்தது! காதல் கவிதையில் புதிய ட்விஸ்ட்!
சென்னை: சின்னத்திரை நடிகை கண்மணி மனோகரனுக்கும்- அஸ்வத்திற்கும் குழந்தை பிறந்துள்ளது. தொட்டிலில் படுத்திருக்கும் குழந்தையை கொஞ்சியபடியே அவர்கள் எடுத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் கண்மணி மனோகரன். இதையடுத்து இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறிய கண்மணி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் முக்கிய நாயகியாக நடித்தார்.

இதையடுத்து பல்வேறு சீரியல்களில் நடித்த கண்மணி, சன் தொகுப்பாளர் அஸ்வத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பிறகு இருவரும் இணைந்து ஒரு ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்வில் கூட, மாமியார் செய்த சிறு தவறால் அஸ்வத் தோற்றதை அடுத்து மாமியார் கண்ணீர் விட்டார். தன்னால் தனது மருமகன் தோற்றுவிட்டாரே என கண்ணீர் சிந்தினார். இந்த நிலையில் திருமணம் முடிந்த 5 மாதத்தில் வெளிநாட்டிற்கு பயணம் செய்திருந்தார்.

கண்மணி எப்போதுமே சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார். இந்த நிலையில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது கண்மணி கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். அஸ்வத்தும் கண்மணியை கட்டியணைத்து முத்தமிடும் புகைப்படமும் வெளியாகி வைரலானது.
இதற்கு சின்னத்திரை பிரபலங்களும் கண்மணிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் கண்மணி- அஸ்வத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
அந்த பதிவில் நாங்கள் இருவரும் ஒரு காதல் கதையை எழுதினோம். அந்த காதல் கதையில் ஆச்சரியம் நிறைந்த புனித பயணம் கிடைத்திருக்கிறது. எங்களது செல்லக் குட்டியுடன் இந்த இனிய பயணம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

இதற்கு இலக்கியா சீரியல் நடிகர் விஜய் முதல் ஆளாக வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அந்த பதிவில் வாழ்த்துகள் மாப்ள. இனிமே உனக்கு செம அடி இருக்கு, என் குட்டி மச்சான்கிட்ட பத்ரமா இரு என தெரிவித்துள்ளார். அது போல் ரசிகர்களும் அஸ்வத், கண்மணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு கடந்த 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரதோஷத்தின் போது குழந்தை பிறந்துள்ளது. இதனால் கண்மணியும் அஸ்வத்தும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications