அதிக சம்பளம் வாங்கிய சீரியல் நடிகை.. அதுவும் ஒரு நாளைக்கு 14 லட்சம்! எந்த சீரியலுக்காக தெரியுமா?
சென்னை: தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் சிலர் திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளை போல அதிகமான சம்பளம் வாங்கி வருகிறார்கள். அதில் ஒரு சிலர் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சம்பளம் வாங்கி இருக்கிறார். பிரபல நடிகை ஒருவருக்கு ஒரு நாளைக்கு 14 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஆரம்பத்தில் எல்லாம் சினிமாவில் நடித்து பெயர் வாங்கி பிறகு அங்கு மார்க்கெட் குறைய தொடங்கிய பிறகு தான் சீரியலை நோக்கி நடிகைகள் வருவார்கள். ஆனால் இப்போது நிலைமை அப்படி கிடையாது. இப்போது சின்னத்திரையில் அறிமுகமாகும் பல நடிகைகளுக்கு வெள்ளித்திரையிலும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதற்கு உதாரணமாக நடிகை சிம்ரன், ப்ரியா பவானி சங்கர், வாணி போஜன் உட்பட பல நடிகைகளின் பெயரை சொல்லிக் கொண்டே போகலாம்.

கயல் சீரியல் நடிகை
அதேபோல சினிமாவில் நடிக்கும் நடிகைகளின் படங்கள் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டும் வெளியாகும் ஆனால் சீரியலில் அறிமுகமாகும் நடிகைகளை தினமும் மக்கள் பார்ப்பதால் அவர்கள் தான் அதிகமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கின்றனர். அதனாலேயே கடை திறப்பு விழா, தனியார் நிகழ்ச்சி என்று எந்த நிகழ்ச்சியிலும் சின்னத்திரை பிரபலங்கள் அழைக்கப்படுகிறார்கள். தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும் வெள்ளித்திரை பிரபலங்களை விட சின்னத்திரை பிரபலங்கள் தான் அழைக்கப்படுகிறார்கள்.
சீரியல் நடிகைகளின் சம்பளம்
அதுபோல சோசியல் மீடியா பக்கங்களிலும் சின்னத்திரையில் நடிகைகள் அதிகமான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு மக்களுக்கு பரிச்சயமான நபராக இருக்கிறார்கள். ஒரு சில சீரியல்கள் நல்ல டி ஆர் பி பெற்றுவிட்டால் அந்த சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கும் அதிகமான சம்பளம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் கூட சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சைத்ரா ரெட்டி ஒரு பேட்டியில் பேசும்போது ஒரு நாளைக்கு நீங்க ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்களா! என்று கேட்கப்பட்டபோது அதற்கு அவர் சிரித்தபடியே மழுப்பலாக பேசியிருந்தார்.
14 லட்சம் சம்பளம் வாங்கும் சீரியல் நடிகை
அதனால் அவருக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லட்சமா? என்று வியந்து வருகிறார்கள். ஆனால் சின்னத்திரையில் நடித்த ஒரு நடிகைக்கு ஒரு நாளைக்கு 14 லட்சம் வரை சம்பளம் வாங்கினார் என்ற தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது. அந்த நடிகை வேறு யாரும் இல்லை நடிகை ஸ்மிருதி இரானி தான். இவர் நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதி, தொலைக்காட்சி தயாரிப்பாளர், மாடல் என்ற பன்முகத்தன்மை கொண்டு விளங்குகிறார்.

அதிக சம்பளம் வாங்கும் சீரியல் நடிகை
முதல் முறையாக ஸ்மிருதி "கியூங்கி சாஸ் பிக்மி பஹதி" தொலைக்காட்சி தொடரில் துளசி என்ற கேரக்டரில் தான் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார். இந்த சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் போது ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு ஆரம்பத்தில் 8000 சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சீரியல் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த பிறகு 50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட்டது. "கியூங்கி சாஸ் பி கபி பஹதி" சீரியலில் அடுத்த சீசனில் நடிப்பதற்காக ஸ்மிருதி இரானி 14 லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications