Eeramaana Rojaave Serial: இன்று முதல் இரவு... தொடங்கி வச்ச எஸ்.ஜே.சூர்யா.. பத்திக்கிட்டு எரியுதுப்பே
Recommended Video
சென்னை: முதலிரவு நடக்காத சிம்ரன் வேண்டும் என்று வாலி படத்தில் வில்லன் தல அஜீத் பயங்கர திட்டங்கள் தீட்டி, ஹீரோ அஜீத்தின் முதலிரவை கெடுக்கப் பார்ப்பார். இதில் அவர் சக்ஸஸும் காண்பார்.
இந்த சூழ்நிலையை வாலி படத்தில் எஸ்.ஜே. சூர்யா காண்பிச்சாலும் காண்பிச்சார். இன்னிக்கு வரைக்கும் அது தொலைக்காட்சி சீரியல்களில் பத்திகிட்டு எரியுது.தனக்கு பிடிச்ச ஆணை இன்னொரு பெண் கல்யாணம் செய்துகிட்டாளா... அவங்க முதலிரவை நடக்க விடாம செய்யணும்.
தனக்குப் பிடிச்ச ஆண் தன்னை விட்டு வேற ஒரு பெண் மேல காதல் வச்சு அவளை கல்யாணம் செய்துகிட்டான்னா.. அந்த முதலிரவை நடக்க விடாம சதி செய்யணும். இப்படித்தான் தொலைக்காட்சி சீரியல்கள் சென்று கொண்டு இருக்கின்றன.

முதலிரவு திருமணம்
இப்போது ஒளிபரப்பாகி வரும் முக்கால்வாசி சீரியல்களில் ஒரு திருமணம் நடந்தால் அடுத்து முதலிரவு என்று ஒன்று நடப்பதில் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. ஒன்று அந்த தம்பதியர் ஏதோ ஒரு காரணத்துக்காக முதலிரவை தள்ளிப் போடுவார்கள். இல்லை, யாருடைய காழ்ப்புணர்ச்சியாலாவது முதலிரவு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும். அதிக அளவிலான காழ்ப்புணர்ச்சிதான் இன்றைய சீரியல்களில் முதலிரவு தள்ளிப் போவதற்கு முக்கிய காரணம்.

வாலி திரைப்படம்
வாலி திரைப்படத்தில்தான் இப்படி முதலிரவு நடக்க கூடாது. சிம்ரன் ஃபிரஷாக வேண்டும் என்று அஜீத் பல வேலைகளை செய்வார். அதில் நாயகி சிம்ரன் கூட தம்பி பொண்டாட்டி வேணும்.. அதுவும் ஃபிரஷா வேணுமா என்று கேட்பார். சீரியல்களில் முதலிரவு நடந்துட்டா தன்னை மறந்து விடுவான். அதனால முதலிரவை நிறுத்தி, அவனை நாம கல்யாணம் செய்துக்கணும் என்று ஆசைப்பட்டு, முதலிரவை நிறுத்த சதி செய்யும் பெண்கள் கதாபாத்திரம் சீரியல்களில் அதிகம்.

குடும்பத்தை கெடுக்க
இல்லை குடும்பத்தை கெடுக்க அகில பெண்கள் வீட்டில் வில்லிகளாக இருப்பார்கள் இல்லையா, அவங்க பொண்ணு மாப்பிள்ளைக்கு முதலிரவு நடக்க கூடாதுன்னு சதி செய்வாங்க. இப்படி முதலிரவை நிறுத்துவது, அதை தள்ளிப் போடுவது என்று சீரியலின் கதையில் முக்கிய பாயிண்டாக கொண்டு வந்து பல எபிசோடுகள் இதை இழுத்துக்கொண்டே போகிறார்கள்.

அப்பட்டமாக சொல்வது
முதலிரவு பற்றி எல்லாம் அப்பட்டமாக சொல்வது என்பது வாலி படத்துக்கு முன்பு இல்லை. அந்த வகையில் இதை ஆரம்பிச்சு வச்சவர் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாதான். அவர் அதை ஒரு விஷயமாக வைத்து படத்தை அடுத்தடுத்த லெவலுக்கு கொண்டு போனார். அஜீத்தின் வில்லத்தனத்தையும் விஸ்தாரமாக்கினார்.இவர்களும் இதை ஒரு இலக்காக வைத்து பல எபிசோடுகளை நீட்டிக்கிறார்கள். ஆனால், விஷயம் என்னவோ வெட்கப்படக் கூடிய ஒன்றுதான்.

ஈரமான ரோஜாவே
விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் மலரும், வெற்றியும் தங்கள் காதலை சொல்லிக்கொண்டார்கள். இப்போது அடுத்தது முதலிரவு. அந்த முதலிரவை கொண்டாட மலரைத் தயார்ப் படுத்த வெற்றி, நிலவைக் கொண்டு வா கட்டிலில் கட்டி வை.. மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை.. இன்று முதலிரவு என்று பாடுகிறான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications