Kanmani Serial: என்னாது.. 3 மாசத்துக்கு ஒருவாட்டி வாடகைத் தாயா.. நம்ப முடியலையே!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் ஒரு பொண்ணு மூணு மாசத்துக்கு ஒருதடவை வாடகை தாயாகிறாளாமே!
என்னதான் வயிற்றில் இருக்கும் கரு கலைஞ்சு போனாலும், அடுத்த மூணு மாசத்துக்குள் எப்படி இன்னொரு குழந்தைக்கு வாடகை தாயா மருத்துவ பரிசோதனையில் தயாராக முடியும்?
புருஷன் மூணு மாசத்துக்கு ஒரு தடவை அவளை பிள்ளை பெக்கும் மெஷினா யூஸ் பண்ணிக்கறானாம்.

கண்மணி காலம்
சன் டிவியின் கண்மணி சீரியலில் ஒத்த நேரமான கால ஓட்டம் இல்லை.குமரேசன் பொண்டாட்டிக்கு குழந்தை இல்லேன்னு சித்ரான்னு ஒருத்தியை வச்சுக்கறான். அவள் உண்டாகி இருக்கானு தெரிஞ்சுதான் சவுந்தர்யாவுயும், கண்ணனும் குமரேசனின் களவுத் தனத்தை கையும் களவுமாக கண்டுபிடிச்சு. முத்துச்செல்வி குற்றவாளி இல்லைன்னு நிரூபிக்கறாங்க.

சித்ரா உண்டான
அப்போ உண்டான சித்ரா இன்னும் வயிற்றில் குழந்தையோடு இருக்க.. அதுக்குள்ளே சவுந்தர்யாவுக்கு குழந்தை பிறக்கலைன்னு குத்திக் காண்பிச்சு, அவங்க வாடகைக்கு தாய் வச்சு குழந்தை பெத்துக்கும் அளவுக்கு போயிட்டாங்க. எல்லாத்துக்கும் ஒரே கால நேரத்தோடு காட்சிகளை காண்பிக்க வேண்டாமா?

ஹோமம் வளர்க்கையில்
சின்னவர் வீட்டில் மூன்று அக்கினி குண்டங்கள் வைத்து, மூன்று ஐயர்கள் ஹோமம் வளர்க்கறாங்க. சவுந்தர்யாவும், கண்ணனும் ஜோடியா உட்கார்ந்து இருக்காங்க. சவுந்தர்யாவுக்கு மட்டும் மாலை போட்டு சினவரை வெறும் கழுத்தோடு உட்கார வச்சு இருக்கீங்க. தம்பதி சகிதம் உட்கார வச்சு இப்படித்தான் செய்வீங்களா? நினைச்சா ஒரேயடியா சாஸ்த்திரம் சம்பிரதாயம்னு கடைபிடிக்கறது.. இல்லேன்னா சுத்தமா குழி தோண்டி புதைக்கறது..

மூணு மாசத்துக்கு
எந்த ஊரில் மூணு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு பெண் வாடகைத் தாயா ஆக முடியும்? என்னதான் குழந்தையை அபார்ஷன் செய்துட்டு, அபார்ஷன் ஆயிருச்சு என்று சொன்னாலும், அடுத்த குழந்தைக்கு வாடகைத் தாயாக மருத்துவர்கள் சோதனை செய்யும்போது கண்டுபிடித்துவிட மாட்டார்களா?
அந்த பெண்ணின் கர்ப்பப்பை பலஹீனமாக இருக்காதா?என்ன கதை எழுதறீங்க? ஊர் உலகத்துக்கு தெரியாததை சொல்லிக் குடுத்து, அவங்களை ஜெயிலில் உட்கார வைக்கத் திட்டம் போடறீங்களா?
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications