பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பாராத திருப்பம்.. லீக் ஆன வீடியோ.. அப்போ இதுதான் கடைசி காட்சியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடக்க இருக்கிறது. அதாவது இனியாவிற்கு திருமணம் நடக்க இருக்கிறது. அந்த திருமண பங்க்ஷனில் கோபி மற்றும் செழியன் கோட் சூட்டில் கெத்தாக வலம் வருகிறார்கள்.

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த சீரியலில் இதுவரைக்கும் பாக்யாவுக்கு பிரச்சனை கொடுத்து வந்த கோபி இப்போது பாக்கியாவை புரிந்து கொண்டு விட்டார். அதுபோல கோபி இரண்டாவது திருமணம் செய்திருந்தார். ராதிகா அவரை விவாகரத்து செய்து விட்டு விலகி போய்விட்டார்.

Baakiyalakshmi Serial vijay TV

இனியாவுக்கு கிடைத்த வேலை

அது போன்று பாக்கியா பிள்ளைகள் எல்லோரும் அவர்களுடைய வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டனர். இனியா மட்டும் காலேஜ் படித்துக் கொண்டிருந்தார். அப்போது செல்வியின் மகனை காதலித்திருந்தார். இவர்களுடைய காதல் விஷயம் குடும்பத்தில் தெரிந்து பெரும் பஞ்சாயத்தும் பிரச்சனையும் வெடித்து விட்டது. இப்போது இனியா பாக்யாவின் சொல் பேச்சைக் கேட்டு படிப்பை சிறப்பாக முடித்து ரிப்போர்ட்டர் வேலையிலும் சேர்ந்திருக்கிறார்.

பாக்கியாவிற்கு வந்த பிரச்சனை

அடுத்ததாக பாக்யாவின் ரெஸ்டாரண்டை விலைக்கு கேட்டு சுதாகர் என்கிற பிசினஸ்மேன் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவர் அவரிடம் பாக்கியா ரெஸ்டாரண்டை கொடுக்க முடியாது என்று சொல்வதால் கோபியை வைத்து ரெஸ்டாரண்டை பிடுங்குவதற்கு முயற்சி செய்ய பிளான் போட்டு இருக்கிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் இன்னும் சில எதிர்பாராத சம்பவங்களும் நடக்க இருக்கிறது.

ஈஸ்வரியின் திடீர் முடிவு

அதாவது இன்றைய எபிசோடில் இனியாவிற்கு விரைவில் திருமணம் செய்ய வேண்டும் அதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஈஸ்வரி கோபி இடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு செழியனும் சம்மதம் தெரிவித்திருந்தார். செல்வியின் மகன் இப்போது எக்ஸாமில் பெயில் ஆகிவிட்டதால் இதை காரணம் காட்டி இனியாவை நம்முடைய வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்று இவர்கள் பிளான் போட்டு இருக்கின்றனர்.

லீக்கான வீடியோ

இந்த நிலையில் இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சதீஷ் தன்னுடைய instagram பக்கத்தில் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் கோபி மற்றும் செழியன் இருவரும் திருமண மண்டபத்தில் கோட் சூட் உடன் இருக்கிறார்கள். பிறகு வேட்டி சட்டையில் இருக்கிறார்கள். இதனால் இது இனியாவின் திருமண சூட்டிங் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாமே திடீர் திருமணம்

ஏற்கனவே பாக்யாவின் பிள்ளைகள் யாருக்கும் உருப்படியாக திருமணம் நடக்கவில்லை செழியன், ஜெனியை காதலித்து திடீர் திருமணம் செய்து கொண்டார். அதுபோல எழிலுக்கும் ப்ரொடியூசர் மகளுக்கும் திருமணம் நடக்க இருந்தது, அப்போது பாக்கியா அந்த திருமணத்தை நிறுத்தி வைத்து ஜெனி கலுத்தில் தாலி கட்ட வைத்திருந்தார். இந்த நிலையில் இதே போன்று இப்போது இனியா திருமணத்திலும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசி காட்சி

கடைசி நேரத்தில் பாக்கியா தான் இனியா மற்றும் ஆகாஷ் திருமணத்தை நடத்தி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் இந்த காட்சிகள் வருவதற்கு ஒரு மாதம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இனியாவின் திருமணத்தோடு சீரியல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+