காரணமே இல்லாம எதுக்கு இவ்ளோ உப்பு காரம்... கதையோட ஒட்டலையே...!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியல் தற்காப்புக்கு கொலை செய்த ஒரு பெண்ணுக்கு உதவி காவல் துறை ஆணையர் கணவராக வருவது பற்றிய கதை.
மலர்தான் அந்த பொண்ணு...இவளோட தங்கை சுவாதிக்கு இந்த விஷயம் தெரியும். வீட்டில் வேற யாருக்கும் தெரியாது.
மலருக்கு அவ்வப்போது தைரியம் சொல்லி அவளை ஆறுதல் படுத்துவது தங்கை சுவாதிதான். போலீஸ் கமிஷனர் பெண் பார்க்க வந்தபோது மலர் சரியாகப் பேசவில்லை என்றாலும், மாப்பிள்ளை கதிரேசனுக்கு மலரை ரொம்ப பிடிச்சுப் போகுது.

மலருக்கும் கதிருக்கும்
மலருக்கும் கதிருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தாகிவிட்டது. ஆனால்,கதிர் அளவுக்கு மலரால் கதிரிடம் ஒட்டவும் முடியவில்லை. அவனைப் போல உருகி உருகி காதலிக்கவும் முடியவில்லை. கதிர் இவ்வளவு அன்பு, காதலை கல்யாணத்துக்கு முன்னால் ஒரு பெண்ணிடம் காண்பிக்க முடியுமா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு காமிக்கறான்.

தூங்கும் மலர்
மலர் தூங்கி விழிக்கும் நேரத்தில் எப்படி எல்லாம் முன் சைகை செய்வாளோ அதை எல்லாம் செய்துவிட்டு மெதுவாக கண் விழிக்க...அடுத்த நிமிஷம் ஆ என்று கத்தறா... என்னடான்னு பார்த்தா...அங்கே கதிர் நிக்கறான். அம்மா பயந்து வந்து என்னடீ கத்தறேன்னு கேட்கறாங்க...

பேசாமல் மலர்
மலர் பேசாமல் உட்கார்ந்து இருக்க...என்ன மாமா திடீர்னு வந்து நிக்கறீங்க...காலங்கார்த்தாலன்னு கேட்கறா. மலருக்கு போன் அடிச்சேன்...அவ எடுக்கலை..அத்தை எடுத்து மலர் தூங்கறான்னு சொன்னாங்க...அதோட முக்கியமான விஷயம் பேசணும்னும் சொன்னாங்க. அதனாலதான் வந்தேன்னு சொல்றான்.

விஷயம் என்ன?
அம்மா பேச வந்த முக்கியமான விஷயம் என்னன்னு பார்த்தா.... இவங்க கொலை செய்த அந்த பையனை காணோம்...அவனைப்பத்தி விசாரிக்கத்தான்னு சொல்றாங்க. இவங்களுக்கு இந்த ரகசியம் தெரியாது.,

மலர் சமையல்
எனக்கு மலர் சமைக்கட்டும் அத்தை...அந்த டிபனை நான் சாப்பிடறேன்னு சொல்றான் கதிர். சரின்னு அம்மாவும் சொல்ல சட்னியில் உப்பு போடலை. சாம்பாரில் காரத்தை கொட்டறா...பச்சை மிளகாயை கிள்ளி போடறா...அவன் சாப்பிட்டுட்டு சூப்பர் சாம்பார்னு சொல்றான்.
எதுக்கு இந்த சீனை வச்சாங்கன்னே தெரியலை...நேரத்தை கடத்த இப்படியும் ஒரு மொக்கை ஐடியாவா?












Click it and Unblock the Notifications