சரிகமப சீனியர்ஸ் 5 வெற்றியாளர்களுக்கு மாபெரும் பரிசுகள் அறிவிப்பு! அதுவும் இத்தனை லட்சத்தில் வீடு மற்றும் தங்கங்கள்
சென்னை: தமிழ் தொலைக்காட்சிகளில் முதன்மை சேனல்களில் ஒன்றான Zee தமிழில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று Zee தமிழ் சரிகமப சீனியர்ஸ் 5, இந்த சீசனில் வெற்றியாளர்களுக்கு இதுவரை இல்லாத பிரம்மாண்டமான பரிசுகளை அறிவித்துள்ளது.
தொகுப்பாளினி அர்ச்சனா தொகுத்து வழங்க, நடுவர்களாக ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன் ஆகியோர் பங்கேற்று வரும் சரிகமப சீனியர்ஸ் 5, மொத்தம் 28 போட்டியாளர்களுடன் மிக பிரம்மாண்டமாகத் தொடங்கி, உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான சுற்றுகளில் போட்டியாளர்கள் தங்கள் இசைத் திறமையை வெளிப்படுத்தி, மக்களின் மனதைக் கவர்ந்து வருகின்றனர். சாமானிய போட்டியாளர்களை சாதனையாளர்களாக மாற்றும் ஒரு மேடையாக இந்த நிகழ்ச்சி திகழ்கிறது.

இதுவரை இல்லாத அளவில் இந்த சீசனில் வெற்றியாளருக்கு ஒரு மாபெரும் பரிசு காத்திருக்கிறது. ஆம், இந்த சீசனில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு ₹60 லட்சம் மதிப்புள்ள ஒரு வீடு பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் வீடு கட்டுவது என்பது பெரிய கனவு.. அப்படி இருக்கையில் ரூ 60 லட்சம் மதிப்புள்ள வீடே பரிசாக கிடைக்க போகிறது என்பது போட்டியாளர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, முதல் ரன்னர் அப் இடத்தை பிடிக்கும் போட்டியாளருக்கு ₹10 லட்சம் ரொக்கப் பரிசு காத்திருக்கிறது. மேலும், இரண்டாவது ரன்னர் அப் இடத்தை பிடிக்கும் போட்டியாளருக்கு ₹3 லட்சம் மதிப்புள்ள தங்கம் வழங்கப்படும். இவற்றுடன், மக்களின் மனம் கவர்ந்த ஒரு போட்டியாளருக்கு ₹5 லட்சம் மதிப்புள்ள தங்கம் சிறப்புப் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இந்த அறிவிப்பு சரிகமப சீனியர்ஸ் 5 போட்டியாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்த சீசன் பார்வையாளர்களுக்கும் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் பிரம்மாண்டமான பரிசுகள், போட்டியாளர்களின் திறமைக்குக் கிடைக்கும் பாராட்டுகளை மேலும் சிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications