Va Vathiyar: நடிகர் சத்யராஜ் பேசிய விஷயம்! மேடையில் காலில் விழுந்த அர்ச்சனா! கார்த்தி ரியாக்ஷன்
சென்னை: நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி கீர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண் நடிப்பில் உருவாக்கி இருக்கும் வாத்தியார் திரைப்படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்ட சத்யராஜ் பேசியதை கேட்டு ஆச்சரியப்பட்ட விஜே அர்ச்சனா அவர் காலில் விழுந்திருக்கிறார். மேடையில் நடந்த நிகழ்வுகளை பார்த்து கார்த்தி இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற வெற்றி படங்களை இயக்கி தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நலன் குமாரசாமி. அவர் படங்கள் எல்லாமே காமெடி மற்றும் கலகலப்பு நிறைந்ததாக இருக்கும். அவர் இப்போது உருவாக்கி இருக்கும் வா வாத்தியார் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பல முடிந்து பல மாதங்களாக நிலையில் இந்த படம் டிசம்பர் ஐந்தாம் தேதியே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண் , சத்யராஜ், கருணாகரன், சில்பா மஞ்சுநாத், ஆனந்தராஜ், ஜி எம் சுந்தர், ரமேஷ் திலக் என அதிகமான நட்சத்திர கூட்டமே நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியை படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. அதில் எம்ஜிஆரின் தீவிரமான ரசிகரான சத்யராஜ் கலந்துகொண்டு பேசியிருந்தார். அப்போது தனக்கும், எம்ஜிஆர்ருக்கும இருக்கும் பந்தம் மற்றும் எம்ஜிஆரிடம் தான் வாங்கிய கர்லாக்கட்டை போன்றவற்றைப் பற்றியும் பேசி இருந்தார்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் குரல் ஒலித்தது. அதில் கார்த்தி தன்னுடைய ரசிகராக இந்த படத்தில் நடித்திருப்பதாகவும் அவருடைய நடிப்பு எப்படி இருக்கிறது என்றும் அந்த குரல் கேட்டது. அதற்கு சத்யராஜ் கார்த்தியை பாராட்டி பேசி இருந்தார். பிறகு எம்ஜிஆர் நடித்து பொங்கலுக்கு வெளியான ஒவ்வொரு திரைப்படங்கள் பெயரையும், வருடங்களையும் சொல்லிக் கொண்டிருந்ததை பார்த்து விஜே அர்ச்சனா மேடையில் சத்யராஜ் காலில் விழுந்து இருந்தார்.
இதுபோல வேறு யாராலும் சொல்ல முடியுமா? என்று தெரியவில்லை. நீங்கள் உண்மையிலேயே எம்ஜிஆரின் தீவிரமான ரசிகர். அவரை அணுவாக ரசித்து இருக்கீர்கள் என்று தெரிகிறது என பாராட்டி இருக்கிறார். அதுபோல இந்த நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசிக் கொண்டிருக்கும் போது ஆனந்தராஜ் குறிப்பிட்டு பேசியிருந்தார்.
ஒருவர் சிவகார்த்திகேயனிடன் துப்பாக்கியை கொடுத்து விட்டு போனது போல, சத்யராஜ் எனக்கு கர்லாக்கட்டையை தரப்போறாரு என்று சொல்ல, அதற்கு சத்யராஜ் சிரித்துக்கொண்டிருந்தார். அந்த கர்லாக்கட்டை எம்ஜிஆரிடமிருந்து நான் வாங்கியது, எம்ஜிஆர் வீட்டிற்கு நான் ஒரு நாள் போயிருந்தேன் அப்போது அவர் உங்களுக்கு என்ன நான் செய்யணும் சொல்லுங்க என்று கேட்டார். நான் அவரிடம் எதையும் கேட்கக்கூடாது என்ற முடிவோடு இருந்ததால் வேண்டாம் என்று சொன்னேன்.
ஆனால் அவர் தொடர்ந்து வற்புறுத்தி சொன்னதால் நீங்கள் ஒர்க் அவுட் செய்யும் தம்பல்ஸ் ஏதாவது தாங்க என்று சொன்னேன். அவர் கொஞ்ச நேரம் யோசித்து வீட்டிற்குள் சென்று கர்லாக்கட்டையை எடுத்துக் கொண்டு வந்தார். அதை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன் என்று சத்யராஜ் சொல்லி இருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications