சுகன்யாவின் முகமெல்லாம் பூரிப்பு.. வடிவுக்கரசியின் முதல் மரியாதை.. காலைல 3 மணிக்கு நளினிக்கு போன்?
சென்னை: "இன்னமும் வடிவுக்கரசி குழந்தையாகவே இருப்பதால்தான், 45 வருஷம் இந்த சினிமா துறையில் நிலைத்திருக்க முடிந்தது.. இன்னும் பல வருடம் அவர் வாழணும்" என்று நடிகைகள் நளினி, சுகன்யா இருவருமே மனதார வாழ்த்தியிருக்கிறார்கள்.
சிறிய வயதிலேயே, வயதான கேரக்டரை ஏற்று நடிப்பவர்கள் மிகக்குறைவு.. அதில், துணிச்சல் மிகுந்தவர் நடிகை வடிவுக்கரசி. கடந்த 1955ம் ஆண்டு பிறந்த வடிவக்கரசிக்கு இப்போது வயது 69 ஆகிறது.. சினிமாவில் நுழைந்து, 45 வருடங்களை நிறைவு செய்துள்ளார். சினிமா மட்டுமல்லாமல், சின்னத்திரை தொடர்களிலும் முத்திரை பதித்து வருகிறார்.

வடிவுக்கரசி: அவருடைய 45ம் ஆண்டு கால திரையுலக பயணத்தை முன்னிட்டு அவருக்கு ஒரு விழா நடத்தப்பட்டுள்ளது. அதில் பல நடிகைகள், முன்னணி சீரியல் பிரபலங்கள், பங்கேற்று அவரிடம் ஆசி பெற்றனர். வடிவுக்கரசியுடன் நடித்த பலரும், அவரை மேடையேறி பாராட்டினார்கள். அந்தவகையில், நடிகைகள் சுகன்யா, நளினி இருவரும் வடிவுக்கரசியை பாராட்டி வாழ்த்தியிருந்தார்கள். அந்த வீடியோ இணையத்திலும் வெளியாகி வைரலாகி வருகிறது.. அதன் சுருக்கம்தான் இது:
சுகன்யா பேசும்போது, "வடிவுக்கரசி அக்காவுக்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.. அற்புதமான நடிகை..
முதல்ல அவங்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. எத்தனையோ படங்களில் நடிச்சிருக்காங்க.. ஆனால் என் மனசில் நின்ன கேரக்டர், முதல் மரியாதை படம்தான்.. அதை சொல்லாமல் இருக்கவே முடியாது
முதல் மரியாதை: வடிவுக்கரசி அக்காவுடன் 3 படங்கள் நான் நடித்திருக்கிறேன். முதல்நாள் அவருடன் நடிக்கும்போது சந்தோஷமாக இருந்தது. அதற்கு பிறகுதான், முதல் மரியாதையில் நடித்தவராயிற்றே என்ற பயம் எனக்கு வந்தது.. முதல் மரியாதை படத்தில் தலையில் பின்னாடி கை வைத்து சொரிவாங்க.. அது அப்படி ஒரு கெத்தாக இருக்கும்.. அந்த கேரக்டரில் முழுமையாக இறங்கி நடிச்சிருப்பாங்க.. சாதாரணமாக யாராலும் அப்படி நடித்துவிட முடியாது.
இன்னைக்கு வரைக்கும் முதல் மரியாதையில் அவங்க நடிப்பை அடிச்சிக்க வேற ஆளே கிடையாது. இதை நான் அழுத்தி சொல்வேன்.. எத்தனை முறை சொன்னாலும் போதாது.. இப்படி இன்னும் பல படங்களை சொல்லிட்டே போகலாம் .. வெறும் ஹீரோயின், ஹீரோக்களுக்கு மட்டுமல்லாமல், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக தன்னுடைய தனித்திறமையை நிலை நாட்டி கொண்டிருக்கும் வடிவுக்கரசி அக்காவுக்கு பாராட்டு விழா நடத்துவோருக்கு என்னுடைய பாராட்டுக்கள்" என்றார் சுகன்யா.
நடிகை நளினி: இதையடுத்து, நடிகை நளினி பேசும்போது, "வடிவுக்கரசி அக்கா தனக்காக வாழாமல், தன்னை சார்ந்தவர்களுக்காகவே வாழ்பவர்.. யாரிடமும் அவருக்கு "நோ" சொல்ல தெரியாது. நானாவது, சில படங்களில் நடிக்க முடியாது என்று சொல்லி கோபத்தில் காரில் ஏறி உட்கார்ந்துவிடுவேன். வடிவு அக்காவையும் காருக்கு வருமாறு கூப்பிடுவேன்,
ஆனால், அக்கா வரவே மாட்டாங்க.. "வேண்டாம் புள்ள.. போனால் போகட்டும், நடிச்சு தந்துட்டு போயிரலாம்" என்று இப்படி
பிறருடைய நலனில் அக்கறை காட்டுவாங்க. எப்ப தான் நீங்க மாற போறீங்க? எப்பதான் உங்களுக்காக நீங்க வாழப்போறீங்க? என்று நான் வடிவுக்கரசி அக்கா கிட்ட கேட்டுட்டே இருப்பேன்.
இளகிய மனம்: விடிகாடிலையில் நான் மூன்றரை மணிக்கு வீட்டில் பூஜையில் இருப்பேன்.. அப்போ வடிவுக்கரசி அக்கா கிட்ட இருந்து போன் வரும்.. உன்னுடைய யூடியூப் வீடியோதான் பார்த்துட்டு இருக்கேன்னு சொல்வார். "என்னக்கா எங்கிருந்து பேசுறீங்க" என்று கேட்டால், "ஷூட்டிங்கில் இருக்கேன்" என்பார்.
உடனே எனக்கு கோபம் வந்துடும்.. "மூன்றரை மணிக்கு என்னக்கா ஷுட்டிங்? கிளம்பி வீட்டுக்கு போங்க" என்று நான் சொல்வேன். "பரவாயில்ல புள்ள.. இப்போ ஷூட்டிங் முடிச்சிடறதா சொல்லி இருக்காங்க.. நடிச்சி தந்துட்டு போறேன்" என்பார்..
யாருக்குமே அவருக்கு "நோ" சொல்ல தெரியாது.. இன்னமும் அவங்க குழந்தையா இருப்பதால் தான், 45 வருஷம் இந்த துறையில் நிலைத்திருக்க முடிந்தது.. இன்னும் 400 வருஷம் என் அக்கா வாழணும்" என்றார் நடிகை நளினி.












Click it and Unblock the Notifications