ஐஸ்வர்யா ராய் பாட்டை, இயக்குனர் ஷங்கர் மகளுக்கு வழங்கிய வைரமுத்து.. இணையத்தை கலக்கும் ட்விட்டர் பதிவு
சென்னை: இயக்குனர் ஷங்கர் மகளான ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்திற்கு கவிஞர் வைரமுத்து வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்திருக்கும் நிலையில் அது இணையத்தில் பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது.
இயக்குனர் ஷங்கர் தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தி முடித்து இருந்தார். ஏற்கனவே ஐஸ்வர்யாவிற்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்திருந்தாலும் கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய முதல் கணவரை பிரிந்து இருந்த நிலையில் தற்போது துணை இயக்குனர் தருணை பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்து இருக்கிறார். இந்த நிலையில் ஐஸ்வர்யா மற்றும் தருண் தம்பதிக்கு திரைத்துறையில் உள்ள பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் திரை உலகில் புகழ்பெற்ற பாடல் ஆசிரியராகவும், கவிஞராகவும் வலம்வரும் கவிஞர் வைரமுத்து நடிகை ஐஸ்வர்யா ராய்க்காக தான் எழுதிய பாடல் வரிகளை தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டு ஐஸ்வர்யா மற்றும் தருணுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
தமிழ் திரை உலகில் கவியரசு, கவிப்பேரரசு போன்ற பல பட்டங்களை பெற்றவர் வைரமுத்து. 80ஸ் காலத்தில் தொடங்கி இப்ப வரைக்கும் அவருடைய வரிகளுக்கென்று தனி ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர் எழுதிய பாடல்களுக்கு தேசிய விருதுகள் கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் இவர் செய்யும் சில செயல்களால் சர்ச்சையில் சிக்கி வருவதும் உண்டு. இந்த நிலையில் இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கருக்கு நேற்று இரண்டாவது திருமணம் நடைபெற்றது. ஷங்கர் மகளின் திருமணத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, கவிஞர் வைரமுத்து, கார்த்தி, நடிகை நயன்தாரா அவருடைய கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்று பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தற்போது கவிஞர் வைரமுத்து விழாவில் மணமக்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்து "அழகிய நிலவில் ஆக்சிஜன் நிரப்பி அங்கே உனக்கு ஒரு வீடு செய்வேன்... உன் உயிர் காக்க என்னுயிர் கொண்டு உயிருக்கு உயிராய் உரையிடுவேன். பால்வண்ண பறவை குளிப்பதற்காக பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்." என்று ஜீன்ஸ் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்காக அவர் எழுதிய பாடலை ஐஸ்வர்யா ஷங்கருக்கு வாழ்த்தாக தெரிவித்திருக்கிறார் இதை ரசிகர்கள் பலர் வைரலாக்கி வருகிறார்கள்.
பிரம்மாண்டத்துக்கு பெயர் போன ஷங்கரின் மகள் கல்யாணமும் பிரம்மாண்டமாகவே நடைபெற்று இருக்கிறது. நேற்று முதல் சமூக வலைத்தளத்தில் ஷங்கரின் மகள் திருமண பங்ஷன்கள் எடுத்த புகைப்படங்கள் தான் அதிகமாக வைரலாகி கொண்டிருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷங்கரின் மகள் எங்கேஜ்மென்ட் எளிமையாக முடிவடைந்து இருந்தது. அதிலிருந்து ஷங்கர் தன்னுடைய மகள் திருமண இன்விடேஷனை எல்லா பிரபலங்களுக்கும் நேரில் சென்று கொடுத்து வந்திருந்தார். இந்த நிலையில் அவர் ஆசைப்பட்ட மாதிரியே அவருடைய மகளுக்கு இப்போது திருமணம் நடைபெற்று இருக்கிறது.












Click it and Unblock the Notifications