வள்ளியின் வேலன்: கல்யாணத்தில் வந்த பிரச்சனை.. காயத்துடன் சரிந்து விழுந்த வேலன்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வள்ளியின் வேலன். இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் பிரேமிடமிருந்து போனை எடுப்பதற்காக பிரேம் வீட்டுக்குள் வேலன் நுழைந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது பிரேம் மற்றும் வேலன் என இருவருக்கும் இடையே கடுமையான சண்டை உருவாகிறது. ஒரு கட்டத்தில் பிரேம் வேலனை கட்டையால் தலையில் தாக்க அவன் அடிபட்டு கீழே சரிந்து விழுகிறான். இங்கே மண்டபத்தில் வள்ளி, வேலனை காணாமல் டென்ஷனாக இருக்கிறாள்.

அடுத்த நாள் காலையில் கல்யாணத்திற்கு ஏற்பாடுகள் நடக்க ரஞ்சனி வள்ளியிடம் என்ன ஆயிற்று என்று விசாரிக்க, ஆதாரம் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்தாச்சு அவனுடைய போன் மட்டும் எடுக்கணும் அதுக்காக தான் வேலன் போயிருக்கான். அவன் பார்த்துப்பான், நீ கவலைப்படாத என்று சொல்கிறாள்.
இதைத் தொடர்ந்து மாப்பிள்ளை மற்றும் மணமகளை மேடையில் ஏற்றுகின்றனர். திடீரென மாப்பிள்ளை இன்னும் கொடுக்க வேண்டிய வரதட்சனை எதுவும் வந்து சேரல என்று பிரச்சனை செய்ய மாப்பிள்ளையின் தாய் மாமா தாலி கட்டாதடா என்று கல்யாணத்தை தடுத்து நிறுத்துகிறார். ரத்தினவேல் வேலன் வந்துருவான் பைல் எல்லாம் வேலன் கிட்ட தான் இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்க அதை ஏற்க மறுக்கின்றனர்.
ரஞ்சித் வேலனின் அப்பாவிடம் எங்கே வேலன் என கேட்டு அவரை அடிக்க ரத்தினவேல் ரஞ்சித்தை போட்டு அடிக்கிறார். வேலன் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.. அவன் குடும்பத்தை அவமானப்படுத்துவது என்னையே அவமானப்படுத்துவது மாதிரி என ஆவேசப்படுகிறார். வேலன் பணத்தை தூக்கிட்டு ஓடி போய் விட்டதாக பேச வேலன் காயத்துடன் என்ட்ரி கொடுத்து பணம், டாக்குமெண்ட் என எல்லாவற்றையும் கொடுக்கிறார்.
ஒரு ஆக்சிடென்ட் ஆகி விட்டதாகவும் மயங்கி கிடந்ததாகவும் சொல்லி சமாளிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய வள்ளியின் வேலன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications