முடிவுக்கு வருகிறதா வானத்தைப்போல? கிளைமாக்ஸ் இதுதானா? நீங்க எதிர்பார்க்காத சீன் இருக்கு!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கும் நிலையில் இந்த சீரியல் திடீரென்று முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் இந்த சீரியலில் கிளைமேக்ஸ் காட்சிகள் என்னவென்று தகவல்களும் கசிந்து இருக்கிறது.
அதே நேரத்தில் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கும் வானத்தைப்போல சீரியல் எதனால் சீக்கிரமாக முடிவுக்கு வருகிறது என்ற கேள்விகளும் ரசிகர்களிடம் இருக்கும் நிலையில் அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் சன் டிவியில் டிசம்பர் 2020 முதல் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதனாலேயே இந்த சீரியல் கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் அதிகமான டிஆர்பியை பெற்று வருகிறது. அதிலும் டாப் 10 சீரியல்களில் முதல் ஐந்து இடங்களுக்குள் இந்த சீரியல் தொடர்ந்து இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் அண்ணன் தங்கை கதையை மையமாக கொண்டு தொடங்கப்பட்ட நிலையில் இதில் ஒரு சில நடிகர்கள் அடுத்தடுத்து மாறி இருந்தனர். ஆனாலும் ரசிகர்களின் மத்தியில் இந்த சீரியல் தனி இடத்தை பெற்று இருந்தது அதுபோல இந்த சீரியலில் நடிகர் ஸ்ரீகுமார், கார்த்தி, செந்தில்குமாரி, மகாநதி சங்கர் என்று பல நடிகர்கள் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த சீரியலில் சீரியல் நடிகர் சஞ்சீவ் கெஸ்ட் ஆக அறிமுகமாகி இருந்தார். அவர் இந்த சீரியலில் அறிமுகமான பிறகு சீரியலின் கதை வேகம் எடுத்து இருந்தது. அதோடு டிஆர்பியும் அதிகரிக்க தொடங்கியது. அதனால் அவர் தொடர்ச்சியாக இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். கெஸ்ட் ஆக அறிமுகமாக இருந்தாலும் இப்போது இவருக்கு இந்த சீரியலில் அதிகமான காட்சிகளும் இருக்கிறது.
இப்படியான நிலையில் தான் இந்த சீரியல் திடீரென்று முடிக்கப் போவதாக கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் சன் டிவியில் புதியதாக பல சீரியல்கள் ஒளிபரப்பாக இருக்கிறதாம். அதனால் இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதுபோல தற்போது துளசி காணாமல் போய் இருந்தார். அவரை துரைசிங்கம் மற்றும் சின்ராசு கண்டுபிடித்திருக்கின்றனர்.
ஆனால் துளசி இறந்து போயிருந்த நிலையில் அவருக்கு ஒரு தெய்வீக சக்தியின் மூலமாக மீண்டும் உயிர் வந்திருக்கும் நிலையில் அண்ணன் தங்கை மீண்டும் சேர்ந்து இருக்கின்றனர். அதே நேரத்தில் துளசியை காணாமல் போவதற்கு காரணமாக இருந்த பொன்னியை இனி சின்ராசு மன்னித்து ஏற்றுக் கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. அதோடு இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறதாம் .ஆனால் இது இந்த சீரியலின் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருப்பதாக கூறி வருகின்றனர். ஆனால் நீங்கள் இந்த சீரியல் முடிவு அடைவது பற்றி என்ன நினைக்கிறீர்களோ அதை கமெண்டில் சொல்லிட்டு போங்க.












Click it and Unblock the Notifications