Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் கோபப்பட காரணமே இதுதான்! என்னை திருடி மாதிரி நடத்துறாங்க! நன்றி சொன்னா இப்படியா? வனிதா ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவான ராத்திரி சிவராத்திரி பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா வனிதா மீது வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையை முடித்துவிட்டு வெளியே வந்த வனிதா விஜயகுமார் செய்தியாளர்களை சந்தித்து ஆதங்கத்துடன் பேசி இருந்தார். அதில் தான் நன்றி தெரிவித்ததற்கு இளையராஜா தன்னிடம் பணம் கேட்கிறார்கள் என்று கோபத்தோடு பேசி இருக்கிறார்.

நடிகை வனிதா விஜயகுமார் 30 வருடங்களுக்கு பிறகு மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படத்தில் தன்னுடைய மகள் தயாரிப்பில் கதாநாயகியாக மீண்டும் அறிமுகமாகி இருந்தார். இந்த திரைப்படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக அவருடைய முன்னாள் காதலனும் நடன இயக்குனருமான ராபர்ட் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. அந்த திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற ராத்திரி சிவராத்திரி பாடல் இடம் பிடித்திருந்தது.

Vanitha Vijayakumar Ilaiyaraaja

இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு வனிதா தன்னுடைய மகளோடு இளையராஜாவை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கி இருந்தார். அப்போது எடுத்த புகைப்படங்களையும் சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருந்தார். அதுபோல பேட்டிகளில் தான் இளையராஜாவிடம் அனுமதி வாங்கி தான் ராத்திரி சிவராத்திரி பாடலை பயன்படுத்தி இருக்கிறேன் என்று பேசி இருந்தார். ஆனாலும் இந்த மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் வெளியான அன்று இளையராஜா தரப்பில் தன்னுடைய பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி இருப்பதாகவும் பாடலை மாற்றி அமைத்துள்ளதாகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இது காப்புரிமை மீறிய செயல் என்று உடனடியாக அந்த பாடலை படத்திலிருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் இளையராஜா தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இளையராஜா பாடலை பயன்படுத்துவதோடு அவரின் பெயரையும் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து வனிதா விஜயகுமார் சார்பில் சோனி மியூசிக் நிறுவனத்திடம் அனுமதி பெற்று தான் அந்த பாடல் பயன்படுத்தப்பட்டது இதில் காப்புரிமை மீறல் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இதை முடித்துவிட்டு வெளியே வந்த வனிதா செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார்.

அப்போது வனிதா பேசும்போது "நான் இப்போதும் சொல்கிறேன் இளையராஜா அப்பா மீது எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது. ஆனால் அவர் என் மீது வழக்கு தொடர்ந்ததை தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் மீது அவருக்கு கோபம் இருந்தால் எனக்கு ஃபோன் செய்து ஏன் இப்படி செய்தாய்? என்று ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். அதை விட்டுவிட்டு அவர் வழக்கு தொடர்ந்து விட்டார். அந்த வழக்கை தொடர்ந்து பிறகு நான் அவரிடம் பேசவே இல்லை.

ஏற்கனவே பிரஸ் மீட்டிங்கில் நான் கோபப்பட்டதற்கு காரணம் கூட அவர் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை பொய்யாகி விட்டதே என்று ஏமாற்றம்தான். நான் அவருடைய வீட்டில் ஒரு பிள்ளை போல தான் இருந்தேன். ஆனால் அவர் என் மீது வழக்கு தொடர்ந்தது எனக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுவாக ஒரு படம் உருவாகுவதற்கு உதவியாக இருந்தவர்களுக்கு நன்றி செலுத்துவார்கள் அது போலத்தான் நான் இளையராஜாவிற்கு நன்றி சொல்லி என்னுடைய படத்தில் கார்டு போட்டு இருந்தேன்.

அது இளையராஜாக்கு மட்டுமல்ல படப்பிற்காக உதவி செய்த எல்லாருக்கும் போட்டிருந்தேன். ஆனால் அதை கூட அவர் பெரிதுபடுத்தி இருக்கிறார் நன்றி சொன்னதற்காக என்னிடம் பணம் கேட்கிறார். அதனால் அந்த கார்டை நான் நீக்கிவிட்டேன். என்னுடைய படம் இப்போது youtube இல் வெளிவந்திருக்கிறது. அதில் கூட அவருடைய பெயர் இல்லை. என்னை திருடி மாதிரி நடத்துறீங்க ராஜாப்பா எனக்கு வருத்தமா இருக்கு.

நான் அவரிடம் சொல்லிவிட்டு தான் அந்த பாடலை பயன்படுத்தி இருந்தேன். என்னுடைய மகள் சோனி நிறுவனத்திடம் அக்ரீமெண்ட்டில் கையெழுத்து போட்டு தான் உரிமையை வாங்கி இருக்கிறார். அவருக்கு பிரச்சனை என்றால் அவர் சோனி நிறுவனத்தின் மீதுதான் வழக்கு தொடர வேண்டும். அதில் என்னை இழுக்க கூடாது என்று வனிதா ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+