பிரியங்கா அழுது சொன்னது இதுதான்! மணிமேகலை அப்படி பண்ணலாமா? விஜயகுமாரை வம்பிழுத்த வனிதா
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் மணிமேகலை பிரச்சனைக்கு வனிதா தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். அப்போது தன்னுடைய அப்பா விஜயகுமாரையும் வம்பு இழுத்து இருக்கும் நிலையில் இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
கடந்த இரண்டு வாரமாகவே மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சனை தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியதற்கு காரணம் பிரியங்கா தான் என்று மறைமுகமாக ஒரு போஸ்ட் வெளியிட்டு இருந்தார்.

இதைத் தொடர்ந்து ரசிகர்கள் மணிமேகலைக்கு சப்போர்ட் செய்து பிரியங்காவை ஆரம்பத்தில் திட்டி வந்தனர். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பிரியங்காவிற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க தொடங்கிவிட்டனர். தொடர்ச்சியாக வீடியோக்கள் மற்றும் போஸ்ட் வெளியிட்டு வந்த நிலையில் மணிமேகலை பிரியங்காவிற்கு ஆதரவு தெரிவிப்பவர்களை சொம்பு என்று கிண்டல் செய்திருந்தார்.
கூடவே இருந்து பார்த்தும் சொம்பு தூக்குறவங்களுக்கு என்ன மரியாதை என்று மணிமேகலை ஒரு வீடியோவில் பேசியிருந்தார். இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தொடர்ச்சியாக விஜய் டிவி பிரபலங்கள் மணிமேகலைக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் இப்போது வனிதாவும் பேட்டி ஒன்றில் பேசுகிறார். மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்சனை இரண்டு பெண்களுக்கு இடையில் இருக்கும் பிரச்சனை.

அதை இணையத்தில் சிலர் பயன்படுத்திக் கொண்டு காசு சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மணிமேகலை சொம்பை தூக்கி வீசியது எனக்கு பிடிக்கப்படவில்லை. உண்மை என்னவென்று பேசுபவர்களை சொம்பு என்று சொல்லலாமா? இது எப்படி நியாயமாகும்? அப்படி பார்த்தால் சொம்பு எங்க அப்பா தான் தூக்கி வீசணும்? அவர் தானே நாட்டாமை.
நாட்டாமை தான் அந்த சொம்பை தூக்கி வீசணும் என்று பேசிய வனிதா நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன். தற்போதைய 5வது சீசனில் கூட கலந்து கொண்டேன். பிரியங்கா எனக்கு போன் செய்து அழுதாங்க பாவமா இருந்துச்சு. அவங்க என்னிடம் நீயே கேளு உனக்கு தான் எல்லாமே தெரியுமே அக்கா என்று சொன்னார். எனக்கு வருத்தமாக இருந்தது.

இணையத்தில் சிலர் பிரியங்காவின் பர்சனல் வாழ்க்கையை பற்றி தப்பு தப்பா பேசுறாங்க. மணிமேகலை அவருடைய கணவரோடு வாழ்ந்து வாழ்வதால் அவர் செல்ப் ரெஸ்பெக்ட் உள்ளவர் என்றும் பிரியங்காவின் கணவர் அவரை விட்டு போய்விட்டதால் பிரியங்கா தவறு என்றும் பேசுகிறார்கள். இது எப்படி நியாயம் ஆகும்? அந்த காலம் மாதிரி எல்லாம் இப்போ இல்லை. புருஷன் விட்டுட்டு போயிட்டா பொண்டாட்டி பாவம் என்று கிடையாது.
இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் தான் பிரிந்து இருக்கிறார்கள். இதில் யாரும் யாரையும் விட்டுட்டு போகவில்லை எதற்காக இப்படி எல்லாம் பேசுகிறார்கள். அதுபோல பிரியங்காவின் பர்சனல் வாழ்க்கையை பற்றி இவ்வளவு கேவலமாக பேசி வருகிறார்கள் ஆனால் அதையெல்லாம் மணிமேகலை பார்த்து ரசித்து கொண்டிருக்கிறார் என்று அந்த பேட்டியில் வனிதா கோபமாக பேசியிருக்கிறார்.

அதே நேரத்தில் மணிமேகலை கடந்த வாரம் வெளியிட்ட வீடியோவில் எனக்கு ரசிகர்கள் இவ்வளவு சப்போர்ட் தருவது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் எதிர் தரப்பில் இருப்பவர்களின் குடும்பத்தை பற்றியோ அவர்களுடைய பர்சனல் வாழ்க்கையை பற்றியும் யாரும் தவறாக பேச வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அது எனக்கு துளி கூட விருப்பம் கிடையாது. எனக்கு வேலையில் இருக்கும் பிரச்சனை பற்றி தான் நான் பேசினேன். அவர்களுடைய குடும்பத்தை பற்றி நான் எந்த இடத்திலும் பேசவில்லை. அது போல நீங்களும் பேசாதீர்கள் என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications