இளையராஜாவுக்கு கோடி கோடியா இருந்துமா பணம்? வனிதா கிட்ட பீரோ சாவியை ஜீவாம்மா ஏன் தந்தாங்க: பிரபலம்
சென்னை: மிஸஸ் அண்ட் மிஸ்டர் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்ற பரவலான விமர்சனம் கிடைத்து வருகிறது. எனினும், இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்துள்ள வனிதாவுக்காக, இளையராஜா விட்டுத் தந்திருக்கலாம் என்றும் கருத்துக்கள் இணையத்தில் எழுந்த வண்ணம் உள்ளது. இளையராஜா தொடுத்திருக்கும் வழக்கு குறித்து, மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தன்னுடைய கருத்துக்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மகள் ஜோவிகாவின் தயாரிப்பில், மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில், தாய்மை ஏக்கத்துடன் தவிக்கும் வனிதாவின் நடிப்பு வியப்பை தருவதாகவும், 40 வயதுக்கு மேல் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதினால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி அலசும் படமாக அமைந்துள்ளது பாசிட்டிவ்வாக பார்க்கப்படுகிறது.

ஓவர் கசமுசா
ஆனால், கவர்ச்சி என்ற பெயரில் ஓவர் கசமுசாவாகவும், முகம் சுளிக்க வைக்கும் டபுள் மீனிங் காட்சிகளாகவும் படத்திற்கான மைனஸாக பார்க்கப்படுகிறது..
இந்நிலையில், Metro Mail என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், "நம்ம பாட்டை பயன்படுத்தி வனிதா சம்பாதிக்கிறார் என்ற எண்ணம் இளையராஜாவுக்கு வந்துவிடடது..
இதையெல்லாம் ராஜா சார் செய்யக்கூடாது.. பல கோடி ரூபாய் வைத்திருக்கிறார்.. பல வருடம் கழித்து, கஷ்டப்பட்டு சொந்த பணத்தை வைத்து வனிதா ஒரு படம் எடுக்குறாங்க..
விட்டு தந்திருக்கலாம்
போனால் போகட்டும் என்று விட்டுக் கொடுத்திருக்கலாம்.. எல்லாரையுமே பகைத்து கொண்டு வருகிறார்.. சாமியார் என்றால் ஆன்மீகத்தோடு அமைதியாக இருக்க வேண்டும்.. சாமியார்கள் ஆசை, பாசங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்.
எஸ்பிபியுடன் சண்டை, ரஜினிகூட சண்டை, கமல்கூட சண்டை, அஜித் கூட, சண்டை.. இப்ப வனிதா கூட சண்டை.. வனிதா நேரடியாக வீட்டுக்கு வந்து, இளையராஜாவிடம் அனுமதி வாங்கியதாகவும் சொல்கிறார்.. அப்போது அனுமதி தந்துவிட்டு, இப்போது வந்து கேஸ் போடுவது சரியில்லை..
அதேபோல, இளையராஜா வீட்டுக்கு மருமகளாக போயிருக்க வேண்டியது என்கிறார் வனிதா.. கார்த்திக் ராஜாவை நினைத்து இப்படி சொல்கிறாரா தெரியவில்லை.. அல்லது வேறு யாரையாவது சொல்றாங்களா தெரியவில்லை.. ஆனால், இளையராஜா வீட்டில், ஜீவாம்மா இருக்கும்போது
விருந்தாளிகளுக்கு கிஃப்ட்
ஒவ்வொரு வருடமும் கொலு வைப்பார்கள்.. மிக பிரம்மாண்டமாக நடத்தப்படும் அந்த விழாவில், எஸ்பிபி சார், ஜானகியம்மா, சுசிலாம்மா எல்ஆர் ஈஸ்வரி, எம்எஸ்வி உட்பட எல்லாருமே கலந்து கொள்வார்கள்.. இதற்காகவே பிரத்யேகமாக அழைப்பு விடுக்கப்படும்.. வந்திருக்கும் விருந்தாளிகள் அனைவருக்கும் கிஃப்ட் தருவார்கள்..
அப்படித்தான் 2 , 3 முறை வனிதா தரப்பினர் சென்றதுபோல தெரிகிறது.. அப்போது ஜீவாம்மா சாவி தந்து, நகையை பீரோவில் வைக்க சொல்லியிருக்கிறார்.. மிகப்பெரிய நடிகை மஞ்சுளாவின் மகள் என்தபால், அந்த அபிமானத்தில் சொல்லியிருக்கலாம்.. ஜீவாம்மா காட்டிய பாசத்தை வைத்து, அந்த வீட்டுக்கு மருமகளாக போகலாம் என்று வனிதா நினைத்திருக்கலாம்.
திருமண பேச்சுவார்த்தை?
ஆனால், சம்பந்தம் பேச்சுவார்த்தை நடந்ததா தெரியவில்லை.. அப்படியிருந்தால், அதை வனிதாவே சொல்லியிருப்பாரே? அப்படியான பேச்சுவார்த்தை நடந்ததாக தெரியவில்லை. ஏனென்றால், தன்னுடைய மகளை சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று மஞ்சுளாம்மா அப்போது உறுதியாக இருந்தார். அதன்படியே வனிதாவும் சினிமாவுக்குள் வந்துவிட்டார்.
எனவே, வனிதா இப்போது சொல்வதை உண்மை என்று சொல்ல முடியாது.. அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.. அதேசமயம், பொய் என்றும் சொல்ல முடியாது.. ஏனென்றால், இப்போதுவரை வனிதா சொன்னதை எதிர்தரப்பிலிருந்து யாரும் மறுக்கவில்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications