Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கார் டிரைவரும் அப்படி கேக்குறாரு! இது பெரிய மனுஷன் தன்மையா? வனிதா விஜயகுமார் ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகையும் இயக்குநருமான வனிதா விஜயகுமார், தான் இயக்கிய "மிஸஸ் அண்ட் மிஸ்டர்" திரைப்படத்தில் இளையராஜாவின் "சிவராத்திரி" பாடலைப் பயன்படுத்தியதற்காக இளையராஜா தொடர்ந்த வழக்கு குறித்து தனது விளக்கத்தை செய்தியாளர்களிடம் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய வனிதா, "இளையராஜா சார் தான் ராத்திரி சிவராத்திரி என்ற பாடலை இசை அமைத்தார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே படத் துவக்கத்தில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினோம். ஆனால், 'நன்றி என்ற கார்டை வைத்து விளம்பரம் செய்துவிட்டீர்கள், எனக்கு பணம் வேண்டும்' என்று கேட்கிறார்கள். அப்படி பணம் கொடுக்கும் அளவுக்கு நாங்கள் சம்பாதிக்கவில்லை," என்று தெரிவித்தார்.

Vanitha Ilaiyaraaja

வனிதா ஆதங்கம்

மேலும், "மரியாதை வேண்டாம் என்று சொன்ன பிறகு, அந்த கார்டையும் எடுத்துவிட்டோம். பாடலைப் பொறுத்தவரை என் மகளைத்தான் கேட்க வேண்டும். நான் டைரக்டர் என்றாலும், என் மகள்தான் சோனி மியூசிக் நிறுவனத்திடம் கையெழுத்துப் போட்டுப் பாடலைப் பயன்படுத்த அனுமதி வாங்கினார். எனவே, சோனி மியூசிக்கிடம் தான் கேட்க வேண்டும்," என்று வனிதா விளக்கம் அளித்தார்.

கார் டிரைவர் கேட்ட கேள்வி

மேலும் வனிதா பேசும் போது இளையராஜா தொடர்ந்து பலரிடம் வழக்கு போடுவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்றும், நான் என்று நீதிமன்றத்திற்கு கேப் புக் பண்ணி தான் வந்தேன் அப்போது கேப் டிரைவர் என்னிடம், "அவருக்கு வேறு வேலை இல்லையா? என்று கேட்கிறார். இது அவருக்குப் பெருமையைச் சேர்க்காது," என்றும் வனிதா கூறினார்.

வனிதா வருத்தம்

எனக்கு போன் செய்து பாடலை நீக்கச் சொல்லியிருந்தால் உடனடியாக நீக்கியிருப்பேன் என்றும், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார். இந்த வழக்கைத் தனது வழக்கறிஞர் கவனித்துக்கொள்வார் என்றும், உண்மையில் யாருக்கு உரிமை இருக்கிறது என்பதை இந்த வழக்கு தெளிவுபடுத்தும் என்றும் வனிதா நம்பிக்கையுடன் கூறினார்.

முன்னதாக, வனிதா இளையராஜாவை 'இசைக்கே கடவுள்' என்றும், 'அவர் வீட்டில் மருமகளாக வளர்ந்தேன்' என்றும் பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது தன் மீது இளையராஜா வழக்கு தொடர்ந்து பிறகு தனது அவர் மீது மரியாதை குறையவில்லை ஆனால் அவர் செய்ததுதான் வருத்தமாக இருக்கிறது என்று பேசி இருக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் எழுந்த விவாதம்

இளையராஜா போன்ற ஒரு லெஜெண்ட், சிம்பொனி இசை போன்ற உலகமே வியக்கும் சாதனைகளைப் படைத்தவர், ஏன் தொடர்ந்து இது போன்ற சர்ச்சைகளில் சிக்குகிறார் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பரவலான விவாதம் எழுந்துள்ளது. சிலர் இளையராஜா தன்னுடைய உழைப்புக்கு ஊதியத்தை கேட்கிறார் அதில் என்ன தவறு என்று சொல்கின்றனர் இன்னும் ஒரு சிலர் இசையமைப்பாளர் தேவா போன்றோரெல்லாம் நான் இப்படி காப்பி ரைட் கேட்கவே மாட்டேன் என்றெல்லாம் பேசி இருக்கிறார்கள் அதற்கு பிறகு இளையராஜா திருந்த வேண்டாமா என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+